இடுகைகள்

தினசரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொங்கல் மலருக்கான எடிட்டிங் ஜரூர்!

படம்
பொங்கல் மலருக்கு வேலை செய்வது என்றால், என்னைப் பொறுத்தவரை கட்டுரை எழுதுவதுதான். ஆனால், சண்முகம் சார் வேலைப்பளுவினாலா அல்லது வேறு சிக்கலாலா என்று தெரியவில்லை. என்னை ராவான கட்டுரைகளை படித்து பார்த்து செம்மை செய்யச் சொன்னார். ஆனால் மறுக்கும் நிலையில் இல்லை. கட்டுரைகளை ஃபோல்டரில் போட்டுக்கொண்டே இருந்தார் சண்முகம் சார். நான் அவற்றை திருத்தி தலைப்புகளை மாற்றினேன்.  பெரும்பாலான தினசரி செய்தியாளர்களுக்கு செய்தி எழுதுவது தெரியும். ஆனால் பொங்கல், தீபாவளி மேட்டருக்கான ஐடியாக்களைக் கொடுத்து அதை செவ்வனே எழுதுவது என்றால் எழுதிவிடுவார்கள். ஆனால் அதில் எது முக்கியமோ அதை முன்னிலைப்படுத்தி எழுத வராது. அனைத்தையுமே எழுதியிருப்பார்கள். அதில் நாம் எது முக்கியமோ அதை சற்று முக்கியப்படுத்தி எடுத்து சற்று மாற்றியமைக்க வேண்டும். அப்படித்தான் நான் புரிந்துகொண்டு எழுதினேன். நன்றாக செய்தேனா என்று தெரியவில்லை. ஆனால் சண்முகம் சார் புகார் ஏதும் சொல்லவில்லை. ''நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ரவ் டிராஃப்ட் போல வரும் அதை சற்று திருத்தி எழுதிக்கொடுங்கள்'’ என்றார். முடிந்தவரை அவர் சொன்ன விதிகளை மனதில் கொண்டி

உரையாடல்களை சிறப்பாக அமைத்த கு.ப.ரா! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என். சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  நான்கு மாதங்களுக்குப் பிறகு உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. பள்ளி தொடங்கியதும் எங்களுக்கு தினசரி வேலைகளின் அழுத்தம் கூடிவிடும்.நாங்கள் செய்து வரும் நூல்களின் தொகுப்பு வேலைகள் படு சுணக்கமாகவே நகருகின்றன. தினசரியில் தொடர்கள் எழுதக்கூடாது என்பது பொறுப்பாசிரியரின் உத்தரவு. இதனால் நூல்களை புதிதாக எழுதி தொகுக்கவேண்டியுள்ளது. இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. நூல்களை விற்பதற்கு ஏற்ப தயாரிக்க அதிக மெனக்கெடல் தேவை. பல நல்ல ஐடியாக்களை கூட தினசரி இதழில் அதிக தூரம் பயன்படுத்த முடியவில்லை.  ஒருவகையில் அதனை அந்தளவேனும் பயன்படுத்த முடிகிறது என்பதே மகிழ்ச்சிதான். நேருவின் போராட்டகால சிந்தனைகளில் விடுபட்ட சில அத்தியாயங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கு.ப.ராவின் வேரோட்டம் என்ற குறுநாவலைப் படித்தேன். கதையை நகர்த்திச்செல்லும் கருவியாக உரையாடல்கள் நன்றாக அமைந்துள்ளன.  பொதுமுடக்க காலத்தில் கிடைத்த நேரத்தில் அசுரகுலம் குற்றங்களின் பின்னணி பற்றிய நூலை மட்டுமே எழுத முடிந்தது. மருத்துவம் தொடர்பாக ஏதாவது நூல்களைப் படிக்கவேண்டும். விரைவில் இந்த ஆண்டிற