இடுகைகள்

எல்லைக்கோடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் எல்லைகளைப் பிரித்த ராட்கிளிப்! - இந்தியா 75

படம்
  1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி. நள்ளிரவு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. விதியுடனான சந்திப்பும் கூட நடந்தது. ஆனால் அதில் முக்கியமான பிரச்னை ஒன்று இருந்தது. இந்தியா எங்கே முடிகிறது, பாகிஸ்தான் எங்கே தொடங்குகிறது என்ற எல்லைப் பிரச்னைதான்.  அப்போதைய ஆட்சியாளரான மவுண்ட் பேட்டனுக்கு இருந்த பிரச்னை பிரிக்கப்பட்ட இரண்டு நாடுகளும் எல்லைக்காக மீண்டும் குற்றம்சாட்டி சண்டை போடக்கூடாது என்பதுதான். அவர் இதற்காக எல்லைகளை பிரிப்பதற்கான யோசனையை உருவாக்கினார்.  இந்திய அரசுக்கு, அமைதியான முறையில் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதற்கான காலத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்கெனவே இழந்துவிட்டது.  1942ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கிரிப்ஸ் கமிஷனும் தோல்வியுற்றது. 1946ஆம் ஆண்டு மூன்று உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டியும் இரு நாடுகளை பிரிப்பது அவசியம் என்று கூறிவிட்டது. இதில் முக்கியமாக எழுந்த பிரச்னை, துணைக்கண்டத்தை எப்படி பிரிப்பது என்பதே.  எல்லைகளை பிரிக்க அழைக்கப்பட்டவர் ஒரு வழக்குரைஞர். இவர் பெயர் சிரில் ராட் கிளிப். 48 வயதானவர் அதிக நாடுகள் பயணித்தது கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எ