இடுகைகள்

உணவு - ஆன்டிபயாடிக் ஆபத்து! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறைச்சியில் ஆன்டிபயாடிக்!

படம்
விலங்குகளுக்கு ஆன்டிபயாடிக்! அமெரிக்காவில் 80 சதவிகித(1,31,000 டன்கள்) எதிர்நுண்ணுயிரி மருந்துகள் மனிதர்களுக்கல்ல; பண்ணை விலங்குகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. 2030 ஆம் ஆண்டு இம்மருந்துகளின் எண்ணிக்கை 2 லட்சம் டன்களுக்காக அதிகரிக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதீத எதிர்நுண்ணுயிரி மருந்து பயன்பாட்டால் 20 லட்சத்திற்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு 23 ஆயிரம் பேர் மரணத்தை தழுவி வருகின்றனர். பண்ணை விலங்குகளுக்கு எதிர்நுண்ணுயிரி பயன்பாட்டை குறைக்க, மருந்துகளை கட்டுப்படுத்துவது அவசியம். நார்வேயில் 8 மி.கி, சீனா 318 மி.கி பண்ணை விலங்குகளுக்காக பயன்படுத்தி வருகிறது. இதனை 60 சதவிகிதமாக குறைக்க 35 நாடுகளைக் கொண்ட OECD அமைப்பு முடிவு செய்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் வான் போய்க்கல், அரசு பண்ணை விலங்கு இறைச்சிகளுக்கு அதிக வரி விதித்தால் எதிர் நுண்ணுயிரி மருந்துகளின் பயன்பாட்டை குறைக்கலாம் என தீர்வு கூறுகிறார். உலகளவில் புகழ்பெற்ற பெர்டியூ எனும் கோழிப்பண்ணை 2002 ஆம் ஆண்டிலிருந்து குஞ்சுகளை பொரிக்க, வளர்ப்பது ஆகியவற்றுக்கு எதிர்நுண்ணுயிரிகளை தவ