இடுகைகள்

தியோ ஏஞ்சலோ பவுலோஸ்: தமிழில் - லாய்ட்டர் லூன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
குழந்தைகளுக்கு கூட தாமாக எங்கும் வெளியே செல்வதற்கு நாம் அவர்களை அனுமதிப்பது இல்லையே?       அதேதான். குறிப்பிட்ட வடிவிலமைந்த கல்வித்திட்டம் நாம் வாழ்க்கையுடன் பொருந்திப்போகும் தன்மையை அழித்துவிடுகிறது. மாறுதல்களை ஏற்காதவர்களாக மாறிவிட்டோம். வளைந்து கொடுக்காத அத்தன்மையிலேதான் முழு வாழ்க்கையும் நடைபெறுகிறது. நாம் இந்த தவறான முறைகள் மற்றும் தவறான சுய பாதுகாப்பு முறைகளை எதிர்த்து போரிட வேண்டியுள்ளது.       என்னுடைய குழந்தைப்பருவம், என்னுடைய இளமைப்பருவம் என பல்வேறு உடைகளை நம்மேல் போட்டுக்கொள்கிறோம். ஆன்மாவின் மேல் உள்ள இந்த உடைகளை கழற்றி எறிய நமக்கு அதிகளவு நேரம் தேவைப்படுகிறது. நம்மிடம் வரும் விஷயங்களை அறியக்கூட நமக்கு நேரமிருப்பதில்லை. உண்மையிலே மதிப்பு மிகுந்த முக்கியமான விஷயங்கள் இந்த வகையில் உங்களை விட்டு வெளியேறுகின்றன. நீங்கள் கூறிய மூன்று வார்த்தைகளில் முதலாவது, கனிவோடு கூடிய தாயின் அன்பு பற்றியது; இரண்டாவது, வாழ்வில் அகதியாக தன்னைக் கருதும் ஒருவரைக் குறித்தது. மூன்றாவதாக கூறும் அர்ஹதனி யின் பொருளான மிக தாமதமான இரவு என்பது எதனைக் குறிக்கிறது?       ம

உரையாடல்போல அமைதியும் பொருள் கொண்டதுதான் -3

படம்
குறிப்பிட்ட மையக்கருத்துகளே உங்களது படத்தில் திரும்ப வருகின்றன. வாழும் நிலப்பரப்பின் மீதான காதல் கொண்ட மக்கள், வட கிரீஸ் பகுதியைச்சேர்ந்த மக்கள் திருமணம் சாரந்த கொண்டாட்டங்களைக் கூறலாம்.       இறுதிக் கேள்விக்கான பதிலாக நான் மூன்று மகள்களை பெற்றிருக்கிறேன் ஆனால் இன்னும் மணம் புரியவில்லை. ப்ராய்டின் தத்துவப்படி என் வாழ்வில் இழந்ததை படத்தில் ஈடு செய்ய நினைக்கிறேனோ என்னமோ? எப்படியாயினும் இவற்றை நான் படத்தில் திரும்ப திரும்ப பயன்படுத்தி வருகிறேன். சிறுவர்கள் (அ) இளமையான மனிதர்கள் போலவே செய்கிறேன். இது முக்கியமானதுதானா என்று தெரியவில்லை. சினிமா விமர்சகர்கள் என் படத்தில் 80 காட்சிகள் இருப்பதாக கூறுவார்கள். எத்தனைக் காட்சிகள் படத்தில் உள்ளன என்பதை நான் அறிவேன். ஆராய்ச்சியாளர்கள், சினிமா ஆய்வாளர்கள் தாண்டி இது யாருக்கேனும் அர்த்தமுடையதாக உள்ளதா? 80 காட்சிகள் என்பதற்குப் பதில் 85 இருந்தால் என்ன வேறுபாடு இருக்கப்போகிறது? எப்படியாயினும் ஆராய்ச்சியாளர்கள் உங்களுடைய இந்த கருமையான படத்தைக் குறிப்பிட எந்தத் தேவையும் இல்லைதான். அனைத்து காட்சிகளும் கடும் பழுப்பு நிறத்தில் அமைந்

மூடுபனிநிலம்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இவற்றைப்படத்தில் கூறுவதோடு அல்லாமல் இயக்குநர் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோருக்கிடையேயான உறவுவின் வழி குறித்தும் கூறலாமல்லவா?       ஆம். அது சரியானதுதான். மாஸ்ட்ரோயன்னி, நடிகர் தாம் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை படத்தில் ஏற்று நடிக்கும் முன்னமே அந்த கதாபாத்திரத்திற்கான கருத்துகள், நியாயங்கள் குறித்து அவர்கள் முன்னமே பேசுவது என்பதை அவர் சரியானதாக எண்ணவில்லை. கதையினை மெல்ல தன் மனதில் நிறைத்து கதையோட்டத்தில் நகர்ந்து செல்லும் கதை மாந்தர்களையே அவர் விரும்புகிறார்.       படத்திற்கான எழுத்துப்பணி என்பது மிகவும் நீண்டதா? அது முழுமையடைவதற்கான காலம் எவ்வளவு? படப்பிடிப்பிற்கான திரைக்கதையை கையில் கொண்டிருக்கிறீர்களா?       இல்லை. எனது படத்திற்கான காட்சிகள் என்பவை உண்மையான திரைக்கதையைச் சார்ந்ததல்ல. ஒரு நாவல் போல தோற்றமளித்தாலும், பொதுவான இலக்கிய நாவல் போல அதன் கருவை ஒரே தன்மையில் புரிந்துகொள்ள முடியாது. உதாரணத்திற்கு, ஒரு கவர்ச்சியும் வசீகரமும் கொண்ட இளைஞன் ஒருவன் கதையில் வருகிறான் என்றால், நான் அந்த கதாபாத்திரம் பெற்றிருக்கும் வசீகரம் அல்லது  அழகு என்பதை அழித்து அக்

தேனீக்காவலர்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
மிகவும் சிக்கலான தொடர்ச்சியான காட்சிகளை எடுத்துக்கொண்டால், உதாரணத்திற்கு மதுபானக் கூடத்தில் இளம்பெண் நடனமாடும் காட்சியைக் கூறலாம். இதனை ஒரு பட அரங்கில் மிக எளிதாக எடுத்துவிடலாமே? அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் அக்காட்சியில் வெளிப்புறம் உட்புறம் என்று மாறிச் சென்று வரும் காட்சிகளை எடுப்பது என்பது அதில் சிரமமானதாக மாறிவிடும். அவற்றினை தொகுப்பதும் சிரமம். ஒரே காட்சியில் உள்ளே மற்றும் வெளியே காட்சிகளை அமைக்க தேவையிருந்தது. மேலும் கிரீக் சினிமாதுறையில் அரங்குகளில் படமாக்குதல் இன்னும் பிரபலம் ஆகவில்லை என்பதுதான் யதார்த்தமாக உள்ளது. அது சிறிது ஆபத்தானதும் கூட. யதார்த்தமான இயல்பில் இருக்கும் எனது அரங்கை நான் தேவைக்கேற்ப மாற்றிக் கூட பயன்படுத்திக்கொள்வேன். நீங்கள் ஒளிப்பதிவாளர் ஜிபோர்ஸ்கோஸ் அர்வானிட், அரங்க வடிவமைப்பாளர் மைக்ஸ் கரபைபெரிஸ் ஆகியோருடன் நெருக்கமான நட்புறவுடன் உங்கள் முதல் படத்திலிருந்து பணியாற்றி வருகிறீர்கள்? படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடி கண்டறிய நாங்கள் மூவருமே இணைந்துதான் செல்வோம். எங்களுடைய திட்டப்படி அந்த இடத்தில் என்னென்ன விஷயங்களைச் செய

மெக் அலெக்ஸாண்ட்ரோஸ்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
மரணத்தின் இடம் மற்றும் இறந்த காலத்தின் இயக்கம்: மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் டோனி மிட்செல் – 1980 ஆங்கிலத்தில் - டான் ஃபைனாரு தமிழில் - லாய்ட்டர் லூன் கிரேகத்தின் செவ்வியல்தன்மை கொண்ட காலத்தை மக்கள் நினைவில் வைத்திருக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்கிறீர்கள். ஓ மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் இல் பயன்படுத்தப்படும் விஷயங்கள் அதன் புனைவு என்ற தன்மையில்தானா?        கிரேக்கர்கள் நடுகற்களை வழிபட்டு அதன் பெருமை பேசி வளர்ந்த பாரம்பரியம் கொண்டவர்கள். புனைவுகளை மேலிரிருந்து கீழாக மக்களிடம் கொண்டு வந்து பேச, பயணிக்கும் வீரர்கள் படத்தின் மூலம் முயற்சித்தேன்.  படத்தில் தலைப்பு மிகச்சிறந்த அலெக்ஸாண்டர் என்று வைக்கப்படவில்லை. ஆனால் மெக்அலெக்ஸாண்ட்ரோஸ் அறியாத பல வீரர்கள் போல கற்பனையான கதைகளில் வாழும் புகழ்பெற்ற ஒரு வீரர் ஒருவராவார். வரலாற்று அலெக்ஸாண்டரோடு ஒப்பிடுகையில் பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை என்றாலும் இவர் வேறுபட்ட முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட முக்கியமான பிரபலமான ஒருவர் என்று கூறமுடியும்.        1453 ஆம் ஆண்டில் துருக்கியரின் ஆதிக்கத்தில் நாடு இருந்தபோது உருவான ஒரு ப

வேட்டைக்காரர்கள் அத்தியாயம் நிறைவு: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இரண்டாவது கேள்வி பயணிக்கும் வீரர்கள் உள்ள கதாபாத்திரங்கள் பெற்றோர்கள், குழந்தைகள், நண்பர்கள், காதலர்கள் என முன்பே தெரிந்த சூழல் போன்றே இருக்கிறது மேலும் இங்கு...        இங்கு அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். கதாபாத்திரங்கள் தம்பதிகளாக பிரிக்கப்பட்டு ஆண் / பெண், ஆண் / பெண் கதாபாத்திரங்களாகவே இருக்கிறார்கள். இந்த பாத்திரங்களிடையே தெளிவான உறவு இல்லாததால் பார்வையாளர்கள் இவர்களை நம்புவது சிரமமானதாக இருக்கும். ஆனால் கதாபாத்திரங்களிலே இருக்கும் தொடர்பு அவசியம் குறித்து எனக்கு நம்பிக்கை இல்லை. இவை அனைத்தையும் ஒரு மனிதனின் முகங்களாகவே இருக்கமுடியும். மீண்டும் அழுத்தமாக கூற விரும்புவது படமானது ஒற்றை மனசாட்சியை பல்வேறு கோணங்களுக்கு கொண்டு செல்வதேயாகும்.        அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு மர்மமான மையத்தில் ஒன்றாக இணைந்துள்ளது போல் இருந்தாலும், அதன் இயற்கையான தன்மை வெளிப்படுத்தப்படுவதில்லையே?        நேரம் குறித்த விஷயங்கள், இறந்து கால நிகழ்வுகள் ஆகியவற்றை விரிவாக கூறாததினால் ஹிட்ச்சாக்கின் ‘ஹாரியினால் சிக்கல் ’ எனும் படம், ஒரு சவம் ஒன்றினை விடுவிக்க பல கதாபா

அதிகாரத்தின் முகமூடி விலக்கம்: 36 நாட்களில் திரைப்படம்

படம்
அதிகாரத்தின் முகமூடி விலக்கம்: 36 நாட்களில் திரைப்படம் உல்ரிச் கிரிகோர் -1973 இப்படத்திற்கான வரலாற்றுப் பின்புலம் என்ன?        இது கூட அல்லது குறைச்சலாக சில உண்மையான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. துப்பாக்கியை பயன்படுத்தி குற்றவாளி ஒருவன் அவனைச் சிறையில் சந்திக்கவரும் வலதுசாரி உறுப்பினர் மூலம் பிணை பெறுகிறான். பிறகு இருவருக்குமான நீண்ட கால உறவு தெரிய வந்தாலும் அவர்களது உறவின் தன்மை தெளிவானதாக இல்லை. நாடாளுமன்ற உறுப்பினருக்கும், குற்றவாளிக்கும்  ஏதேனும் ஒப்பந்தம் இருக்கிறதா? யாருக்கும் தெரியாது. குற்றவாளி தன் நண்பனுக்கு எழுதும் கடிதத்தில் ‘‘நான் அவனைக் கொல்லப்போகிறேன், பிறகு என்னையும் நானே அழித்துக்கொள்வேன். இனி எப்போதும் அவர்களை என்னை கைது செய்வதற்கான எந்தக்கோப்புகளும் கிடைத்து அவை நிரூபிக்கப்படப் போவதில்லை’’ என்று குறிப்பிடுகிறான்.        ஆனால் பிணை கொடுத்தவர் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு மனிதர் என்பதால் இந்த வழக்கு ஒரு சிக்கலான கட்டத்தை எட்டுகிறது. பிணை வழங்கியவர் வலதுசாரி குழுக்களில் ஒருவர் என்பதால் அவ்வட்டாரங்களில் வேதனையான வருத்தங்கள் எழுகின்றன.