இடுகைகள்

கொரிய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது காதலனை அடைய முயலும் அடிதடி பெண்! - பேக்ஸ்ட்ரீட் ரூக்கி

படம்
  அடிதடியான பெண் அகிம்சைவாதியான காதலை, காதலனை தேடி அலைந்து காதலைப் பெறுவதுதான் கதை.  கன்வீனியன்ஸ் ஸ்டோர் சயட் பியோல் என்ற வெப் காமிக்கை டிவி தொடராக மாற்றியுள்ளனர். தொடர்  முழுக்க சயட் பியோல் என்ற பெண்ணின் வாழ்க்கையை மட்டுமே முக்கியத்துவப்படுத்துகிறது. அதற்கேற்ப படத்தின் முன்னணி நடிகர்கள் டே ஹியூன்( Ji Chang-wook   ), சயட் பியோல் (   Kim Yoo-jung ) என இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அடிப்படையில் நகைச்சுவை டபுள் டோஸில் கொண்டுள்ள தொடர்தான். ஆனால் அதிலும் கூட திருமணம், காதல், குடும்பம், வாழ்க்கை, வேலை, நிம்மதி என நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.  பணத்தை விட மன நிம்மதியும், நம்மை விரும்புபவர்கள் நம் அருகில் இருப்பதும்தான் முக்கியம் என்பதை நெகிழ்ச்சியான காட்சிகள், குறைந்த உரையாடல்களில் சொல்லியிருக்கிறார்கள்.  தந்தை இறந்தபிறகு ஆதரவின்றி வளரும் இரு பெண்கள், அவர்களைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் என்றுதான் கதையை சரியாக புரிந்துகொண்டால் சொல்லவேண்டும். சயட் பியோலுக்கு அப்பா கார் விபத்தில் இறந்தபிறகு, வீட்டு வாடகை கட்ட முடியாமல் எங்கு செல்வது என தெரியாத நிலை. உறவினர்கள் ஒருவாய் சோறு போட்டால்