இடுகைகள்

மைதிலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லவ் இன்ஃபினிட்டி: காதல் இதயத்தை உடைத்தேன்!

படம்
monina moreno\pinterest 23 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அரசு கார்த்திக், விபானா arasyputri திருவண்ணாமலையில் கவிக்குமார் எனக்கு கற்றுக்கொடுத்தது பலரையும் எப்படி வேலை வாங்குவது என. பேசிப்பேசியே ஒருவரின் மனதைக் கரைத்து...அவரின் இயல்பை சின்னாபின்னமாக்கி இயற்கையே எல்லாம் என நம்ப வைப்பதை மிக இயல்பாக செய்து வந்தார். ஏறத்தாழ சதுரங்கவேட்டை நாயகனைப் போல என்று வைத்துக்கொள்ளுங்கள். திடீரென காலையில் பக்தி பெருகும்போது காக்கை அலுவலகத்திலிருந்து நடப்போம். பாதி தூரம் வந்ததும், நடக்க வேண்டாம். டைம் இல்ல என ஷேர் ஆட்டோ பிடிப்பார். இதெல்லாம் இரும்புக்கை மாயாவின் ஆக் சன் வேகத்தில் நடக்கும். அதேசமயம் கார்த்திக்கின் ஸ்க்ரீன் பிரிண்டிங் ஆபீசில் இருந்து சுமக்க முடியாத அளவு புத்தகங்களை, சரவணா ஸ்டோர் பையில் சுமக்க வைப்பார். அவரும் கூடவே சும ப்பார் என்று வையுங்கள். அப்போது ஆட்டோ நிச்சயம் தேவைப்படும் சூழல். ஆனால் நடந்தே போகலாம் என்பார். திருவண்ணாமலை பகலில் இருப்பது போல இரவில் இருக்காது. அதன் முக்கிய வருமானமே அண்ணாமலையார் கோவில்தான். நாள்தோறும் கூட்டம் குவிந்துகொண்டே இ

லவ் இன்ஃபினிட்டி: காதல் தேசம் நானும் கடந்தேன்

படம்
அனா கரோலினா\ பின்ட்ரெஸ்ட் 20 லவ் இன்ஃபினிட்டி 20 குமார் சண்முகம் தொகுப்பு: இளங்கண்ணன், விசாலாட்சி பிருந்தாகிட்ட நான் என்ன சொன்னேன். நான் எதுவுமே சொல்லல. நீ அருகம்புல்லு மாதிரியான அழகின்னேன். சார், என்ன நான் பின்னாடி சுத்தும்போதெல்லாம் ரெட் சிக்னல் கொடுப்பாரு. இப்ப க்ரீன் கிடைச்சுரும் போலயே  ன்னு சிரிச்சா. கள்ளி! ஐஸ்க்ரீம் அவளோட கழுத்தில இறங்கிறது தெரிஞ்சுது.  அவளுக்கு எல்லாமே தெரியும். எனக்கு தெரிஞ்சு கவிக்கு அடுத்தபடியா ஏதாவது கிஃப்ட் அனுப்பிக்கிட்டே இருக்கிற ஒரே ஜீவன் அவதான். திடீர்னு காலேஜூக்கு ஒரு பார்சல் வந்தது. எடுத்துப் பார்த்தா, சட்டை. இவளோட பேரும் நம்பரும் மட்டும் இருந்தது. எதுக்கு இதெல்லாம் பணறேன்னு கேட்டேன். ஐபிசி படி இதெல்லாம் தப்பா? ன்னு ஒரு கேள்வி கேட்டா. அசந்துட்டேன். அப்பவே முடிவுக்கு வந்துட்டேன். இது ஸ்கூல்ல படிச்சப்ப பார்த்த பிருந்தா இல்லன்னு. என்ன அப்டேட். வேகம். அதனால்தான் சொல்றேன். பெண்களிடம் ஆண்கள் போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது. அவர்களாக விரும்பினால் தோற்கிற மாதிரி தன்னைக் காட்டிக்குவாங்க. ஆனால் உண்மையில் தோற்கிறது ஆண்கள்தான்

லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லப் போறேன்!

படம்
behance 19 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ராஜா தேசிங்கு, மியான் வாட்ஸ் நாம எல்லாத்தையும் படிச்சிருப்போம் தெரியும்னு நினைப்போம். ஆனா, உண்மை என்னன்னா, தேவைப்படும்போது அதனை மறந்திருவோம். நம் அனுபவத்துல பதிஞ்ச விஷயங்கள் மட்டும்தான் நம்மை எப்போதுமே காப்பாத்தும். மத்த விஷயங்கள் எல்லாம் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நம்மை கைவிட்டுவிடும். இங்க அறிவுங்கறதும், அனுபவம்கிறதும் வேறுவேறு. நீங்க ஓஷோ, வேதாத்திரின்னு பல பண்டல் புத்தகங்கள ஷெட்யூல் போட்டு படிக்கலாம். இப்போ பாருங்க, காதலோ, காமமோ, ஒரு உறவு குறித்தோ நெருக்கடி வருது. அதில் எடுக்கிற முடிவு உங்க வாழ்க்கையை மாத்தப்போவுது. இதில நீங்க என்ன செய்ய முடியும்? உங்க அறிவு உதவும்னு நினைக்கிறீங்களா? நிச்சயம் இல்லை. நான் சந்திச்ச எல்லா பெண்களிடம் நான் இந்த விஷயத்தைப் பார்த்தேன். அதாவது, நாம சாதிக்க முடியாததை இவன் சாதிக்கணும்னு ஒரு எண்ணம். தூண்டுதல் இருக்கு. ஆனால் அது ஏன்? அப்படி இருக்கணும்னு என்ன இருக்கு? நான் அவங்களுக்கு  எழுதின letter லேயும் அன்னைக்கு அப்படித்தான் எழுதியிருக்கேன். ஆகா வைரஸ் எப்படி பரவுது பாத்தீங்

லவ் இன்ஃபினிட்டி: அன்பைத் தவிர வேறெதுவுமில்லை

படம்
18 லவ் இன்ஃபினிட்டி  குமார் சண்முகம் தொகுப்பு: ஹர்வீன் கௌர், ரிதேஷ் -மாதேஷ் டயரியில் இருந்து... உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம் எனக்கு... நிறைய எழுதணும்போல இருக்கும். எழுதுவேன். ஆனாலும் எதிலும் நேர்த்தி கைகூட மாட்டேன்கிறதே. . இப்படி கிழித்து போட்ட காகிதங்களைப் பார்த்து எங்க அம்மா கூட திட்டினாள். நோட்டு வாங்கறதுக்கே சொத்த  அழிச்சிருவே போல ன்னு. இதை ஸ்லோமோஷன்லே பாத்தேன். அம்மா கூட அம்புட்டு அழகு. எல்லாமே உன்னால்தான். என்னை எப்படி இப்படி மாற்றினாய்? 26.2.2002 அன்று எழுதி உன்னிடம் கொடுக்காத கடிதம். உன் இல்லத்தில் உள்ளவர்களும், இதயத்தில் உள்ளவர்களும் நலமாக இருக்க வேண்டும் என்பதே இறைவனை நான் வேண்டிக் கேட்கும் வரம். இந்தக் கடிதம் நான் உனக்கு கொடுத்த கவிதை புக் உடன் சேர்ந்திருக்க வேண்டியது. காலம் தாழ்த்தி கிடைத்தாலும் பரவாயில்லை. நான் உனக்கு கொடுத்த Note இல் எழுதியிருந்ததைப் படித்து பதில் எழுது. வழக்கம்போல் இல்லாமல் விரிவாக! ரைட்.. வெரி வெல், நன்றாகச் சாப்பிடு. உடம்ப பத்திரமா பாத்துக்க. அதிகநேரம் படிச்சு தூங்காம இருக்காத. பாரு, உன்கிட்ட பேசும்போது உன்னோடு அம்மாவ

லவ் இன்ஃபினிட்டி: காதலில் நான் யார்?

படம்
freepik லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: சம்யமா விதேஸ், சஹானா சதுர்வேதி freepik நீங்க திடீர்னு லவ் பண்றீங்க. அப்போ உங்க மைண்ட்ல ராஜா சார் மியூசிக், பப்பி லகரியோட கிளப் சாங், ஏ.ஆர். பிஜிஎம் எல்லாமே சிச்சுவேசனுக்கு வந்து போகும். ஆனால் இங்க நீங்க ஒண்ணை கவனிக்கனும். லவ் பண்றவங்களுக்கு வேண்ணா அவங்க இரண்டாம் உலகத்தில இருக்கற மாதிரி தோணும். ஆனா அவங்கள Friends, Parents எல்லாம் அத்தனை கூத்தையும் பார்த்துக்கிட்டு ஆடுறா ராசா ஆடு என காலண்டரில் கணக்கு போட்டு காத்திருப்பார்கள். கஷ்டப்பட்டு சாதி பிரச்னை இல்லாம ஒரு பொண்ணை நம் மனசுக்கு புடிச்ச மாதிரி செலக்ட் பண்றது இருக்கே, அது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா? அந்த நேரத்திலதான் கில்டி குணா வந்தான். இவன் பிரச்னை, மூணு வேளைக்கு முப்பது முட்டையைத் திங்கிறதுதான்.  மைதிலி மாதிரி ஊரே ஆச்சரியப்படுற செவப்பான புள்ள எங்கு சொந்தத்திலேயே கிடையாது.  எப்படியாவது இவளை கல்யாணம் பண்ணிட்டன்னா எனக்கு குடியரசுத்தலைவர் கைல விருது வாங்குனா மாதிரி. நமக்கு புடிச்ச மாதிரி பூமெக்ஸ் ஜட்டி கூட கெடைக்க மாட்டேங்குது. இந்த நேரத்துல இது செவ செவன்ன