இடுகைகள்

நம்பிக்கை நாயகர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டெக் நிறுவனத் தலைவர் இப்போது ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்! - ஶ்ரீதர் வேம்புவின் புதிய ஐடியா!

படம்
        டெக் தலைவர் இப்போது ஆசிரியர் ஜோஹோ கார்ப்பரேஷன் தலைவர் யார் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருநூறு கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு கொண்ட நிறுவனம் என இதனை போர்ப்ஸ் நிறுவனம் அட்டவணைப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் இயக்குநர், அண்மையில் தனது நிறுவனத்தை தென்காசிக்கு மாற்றினார். கடந்த ஆண்டு இவர் செய்த இந்த மாற்றம், முக்கியமானது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்கள் செலவுகளை குறைத்து வீட்டிலேயே பணி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இவர் கொரானோ பாதிப்பிற்கு முன்னமே இந்த முயற்சியை செய்துவிட்டார். இப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியராகவும் மாறிவிட்டார். தென்காசியிலுள்ள மத்தாளம்பாறை கிராமத்திற்கு நிறுவனத்தை மாற்றியவர், குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கத் தொடங்கினார். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இதனை செய்யத் தொடங்கியவர், இப்போது நான்கு ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி 52 மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார். இம்மாணவர்கள் அனைவரும் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்தவர்கள். ''நான் தொடங்கியுள்ள கல்வி  ஸ்டார்ட்அப் இது. கல்வி,உணவு இலவசமாக கொடுத்து பாடங்களை சொல்லித்தர

நம்பிக்கை மனிதர்கள் - புரட்சியைக் காற்றில் பரப்பும் பாடகன்!

படம்
நம்பிக்கை மனிதர்கள்/ நாயகர்கள் பாடகர் எசல் பத்திரிகையாளன், பாடகன், நடிகன் இவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது நடப்பு நிகழ்ச்சிகளை த த்தமது துறை சார்ந்து வெளிப்படுத்தும் திறமை. மக்களைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் அரசியல் பற்றியோ, நாட்டின் நிலை பற்றியோ, ஏழைகளைப் பற்றியோ, பட்டினிச்சாவுகளைப் பற்றியோ எப்படி பேசாமல் இருக்க முடியும். இங்கும் துருக்கியைச் சேர்ந்த பாடகர் அதைத்தான் தன் பாட்டில் செய்தார். செய்துகொண்டிருக்கிறார். ஆனால் தன் நாட்டில் அல்ல; ஜெர்மனியில். என்ன காரணம்? அரசின் சிறை தண்டனைக்கு பயந்துதான். முன்னமே விதித்த ஐந்தாண்டு தண்டனை இவரை பெரியளவு பயமுறுத்தி இருந்தது. பாடல்களில் போதைப்பொருள் மற்றும் செக்ஸ் பற்றி பேசியதுதான் குற்றச்சாட்டாக பதிவானது. ஆனால் உண்மை என்ன என்பது அங்குள்ள மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். துருக்கி சர்வாதிகாரியான எர்டோகனின் குருட்டு ஆட்சி குறித்தும், அதன் வழியாக மக்கள் படும் பாட்டையும் மக்களிடமே சென்று பாடினார் புரட்சிப்பாடகர் எசல். அதுதான் அரசு இவரை தன் ஹிட் லிஸ்டில் சேர்க்க காரணம். ஒரு காலத்தில் 50 டாலர்களைக் கொடுத்து ஸ்பாட்டிஃபை இண

நவீன தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டான முதியோர்!

படம்
தாயம்மாள், திருப்பூர் சமூகத்திற்கு சேதி சொல்லும் முதியோர்! சென்னையைச் சேர்ந்த ஜனார்த்தனன் – ஜலஜா ஆகியோருக்கு எந்த பிரச்னையும் இல்லாத வாழ்க்கை. இருவருமே அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். காலையில் சூரிய உதயம், அஸ்தமனத்தை மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். ஜனார்த்தனன் பென்சன் பணத்தோடு சேமிப்பும் அவர்களை காப்பாற்றி வந்தது. ஆனால் வயதுக்கான தள்ளாமை யாரை விட்டுவைக்கும்? தங்களின் மனதிருப்திக்காக வைபவ் சேவா ஜேஜே பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையைத் தொடங்கி முதியோர் இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தனர். இதனை இருவரும் தங்களது பணி மூப்புக்கு முன்பே தொடங்கி, நடத்தி வந்தனர். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. ஜனார்த்தனன் வலது கண் லுக்கோமாவால் பாதிக்கப்பட்டது. ஜலஜா, தவறி விழுந்து முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களால் முதியோர் இல்லத்தைப் பராமரிக்க முடியாமல் போனது. இதனால், முதியோர்களை திரும்ப அவர்களின் பிள்ளைகளிடமே ஒப்படைத்துவிட்டு நொறுங்கிய இதயத்தோடு நின்றனர். இன்றும் தங்களது அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர்க்கு பண உதவிகள் ச