இடுகைகள்

வடகிழக்கு இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியர்கள் என ஒவ்வொருமுறையும் நிரூபிக்கும் நிலையிலுள்ள வடகிழக்கு மக்கள்! அனெக் - அனுபவ் சின்கா

படம்
  அனெக்  ஆயுஷ்மான் குரானா இயக்கம் - அனுபவ் சின்கா பாடல்கள் -அனுராக் சைகியா வடகிழக்கு இந்தியாவில் நடைபெறும் ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான சண்டையும், அதில் தலையிட்டு ஆதாயம் தேடும் இந்திய அரசு பற்றியும் படம் தீவிரமாக விவாதிக்கிறது.  யார் இந்தியர், இந்தியராக இருக்க என்ன செய்யவேண்டும், இந்தியர் அல்லாதவர் யார் என பல்வேறு கேள்விகளை காட்சிரீதியாகவும், உரையாடல்களாகவும் படம் நெடுக இயக்குநர் கேட்கிறார். இறுதிக்காட்சியில், சிறுவர்களை எதற்கு கொல்ல உத்தரவிட்டீர்கள் என ஜோஸ்வா தனது உயரதிகாரியைக் கேட்கும் காட்சி முக்கியமானது.  வடகிழக்கு இந்தியாவை இந்தியாவுடன் இணைப்பது மேற்கு வங்கம்தான். அதற்கு பின்புறம்தான் வடகிழக்கு மாநிலங்கள் அமைந்துள்ளன. இவர்களின் உருவ அமைப்பு பிற பகுதியுள்ளவர்களை விட மாறுபட்டது. இதனால் இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் உள்ளவர்கள் இவர்கள் வேலைக்கு, கல்விக்காக வரும்போது சிங்கிஸ், நேபாளமாக, சீனா நாட்டுக்காரர்கள்  என கேலி கிண்டல் செய்கிறார்கள். எனவே,  வடகிழக்கினர் நாங்கள் இந்தியாவுடன் எதற்கு இணைய வேண்டும் என எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவர்கள் தங்களுக்கென தனி கொடி, அரசியலமைப்புச் சட்டம் கேட்

நாட்டை புரிந்துகொண்டால்தான் மக்களின் உணர்வோடு இணையமுடியும்! - ஆயுஷ்மான் குரானா

படம்
அனுபவ் சின்கா, ரா ஒன் படம் மூலமாக இந்தியா முழுக்க பிரபலமானார். ஆனால் இது ஃபேன்டசி படம். அதற்குப் பிறகு அவர் எடுத்த முல்க், ஆர்டிக்கிள் 15, தப்பட் ஆகிய படங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு சிக்கல்களை அலசின. இயல்பான நடிப்பு, நாம் ஏற்கமுடியாத நிதர்சன உண்மை ஆகியவற்றை மையமாக கொண்டே அனுபவ் சின்கா படம் எடுத்துவருகிறார். இவர் எடுக்கும் படங்களுக்கு அவரேதான் தயாரிப்பாளரும் கூட. அதனால் தான் தைரியமாக பிறர் சொல்லத் தயங்கும் விஷயங்களை சொல்ல முடிகிறதோ என்னவோ, இப்போது வடகிழக்கு இந்தியா பற்றிய படமான அனெக்கை எடுத்துள்ளார். இதில் நடித்துள்ளவர், ஆயுஷ்மான் குரானா.  ஆயுஷ்மான் குரானா இந்தி சினிமா நடிகர்  அனெக் படம் பற்றி உங்களுடைய கருத்து என்ன? நாங்கள் இதுவரை பேசாத விஷயத்தை அனெக் படத்தில் பேசியுள்ளோம். இந்த நிலப்பரப்பும் கூட புதிது. ஆர்டிக்கிள் 15 படத்தில் நான் நடித்துள்ளேன். அது எனக்கு முக்கியமான படம். மாறுபட்ட குரலை பிரதிபலிக்கும் ஆளுமையாக அனுபவ் சின்கா உள்ளார். நான் அவரை நம்புகிறேன்.  கதை சொல்லுவது, சொல்லும் விஷயத்தின் உண்மை ஆகியவற்றில் யாரும் அனுபவ் சின்கா அளவுக்கு நியாயம் செயதிருக்க முடியாது.  வடகிழக்கு பற்