இடுகைகள்

மூளை வளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போக்மன் விளையாட்டு மூளையில் இருக்கிறதா?

படம்
அப்படித்தான் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சத்தியம் செய்கிறார்கள். போக்மன் சிறுவயதில் மணிக்கணக்கில் விளையாடியவர்களின் மூளையில் அதுபற்றிய திறன் நினைவுகள் இருக்கிறதாம். சிறுவயதில் பல்வேறு படங்கள், ஒலிகள் ஆகியவை நமக்கு நாம் பார்ப்பது குறித்த அறிவைத் தருகின்றன. அவை என்ன எப்படி அழைக்கவேண்டுமென பெற்றோர், நண்பர்கள் சொல்லித் தருகின்றனர். அல்லது பின்னாளில் நாமே படித்து தெரிந்துகொள்கிறோம். தொண்ணூறுகளில் குழந்தைகளுக்கு மிகப்பெரிய கனவாக இருந்த விளையாட்டு நினென்டோவின போக்மன் விளையாட்டு. விளையாட்டு ஏன் ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது என்றால் அதிலுள்ள நூற்றுகணக்கான கதாபாத்திரங்களால்தான். இதை நினைவு வைத்துக்கொண்டால்தான் விளையாட்டில் ஜெயிக்க முடியும். ஒருவகையில் நினைவுதிறனைக் கூட்டுகிறது அல்லவா? ஐந்து வயது முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு இந்த ஆய்வு உண்மையைக் கண்டறிந்துள்ளனர். இதன் அர்த்தம் பொடிசுகளுக்கு உடனே போக்மன் விளையாட கன்சோல் வாங்கித்தருவதல்ல. அதன் அம்சங்கள் குழந்தைகளின் யோசிக்கும் திறனைக் கூர்மைப்படுத்தியுள்ளது என்பதுதான். இன்றைய

ஊட்டச்சத்துக் குறைவு - குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு

படம்
beacon house நுண்ணூட்டச்சத்துக் குறைவில் தடுமாறும் குழந்தைகள்! பெங்களூரூவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விலங்கு புரதம் குழந்தைகளுக்கு அவசியத்தேவை என்று கூறியுள்ளனர். இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட 38 சதவீத குழந்தைகள், ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இளம் குழந்தைகள் உணவில் சரியான புரதமின்றி தவிக்கின்றனர். குறிப்பாக அவர்களின் மூளை வளர்ச்சிக்கு தேவையான லைசின் என்ற அமிலம் கிடைப்பதில்லை. பெங்களூரைச் சேர்ந்த செயின்ட்ஜான் மருத்துவக் கல்லூரி, இதுகுறித்த ஆய்வை செய்தது. ஒன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகள் முட்டை மற்றும் பால் தேவையான அளவு கிடைக்காததால், பத்து சதவீத அளவு புரதப் பற்றாக்குறையை சந்திக்கின்றனர். இது இப்படியே வளர்ந்தால், முட்டை மூலம் ஏழு சதவீதமும், பால் மூலம்  எட்டு சதவீதமும், பருப்பு மூலம் பதினொரு சதவீதமும் புரதப்பற்றாக்குறை உருவாகும் வாய்ப்புள்ளது. மூன்று வயதுக்குள் புரதம் மூலம் கிடைக்கும் அமினோ அமிலங்கள் சரிவர கிடைக்கப் பெறாததால், ஊட்டச்சத்துக்குறைவு ஏற்படுகிறது. இதில் வறுமை, சுகாதாரம் ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன என்கிறது