இடுகைகள்

கெஸ்சால்ட் தெரபி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையில் வலி, வேதனை, இன்பம், துன்பம் என அனைத்தையும் உள்ளடக்கிய சிகிச்சை முறை!

படம்
  பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி இமானுவேல் கான்ட், மனிதர்கள் சிந்திக்கும் திறன் பற்றிய கருத்தொன்றைக் கூறினார். மனிதர்கள் தம்மைக் கடந்து வெளி உலகம் என்ற ஒன்றை முழுமையாக அறியவில்லை. நாம் அறிந்த அனைத்துமே அனுபவங்களாக அமைந்தவற்றை மட்டுமே என்றார். இது அன்றைய காலத்தில் பெரும் விமர்சனங்களைப் பெற்ற கருத்தாக அமைந்தது. இதுதான் கெஸ்சால்ட் தெரபியின் அடிப்படை கருத்து.  மனிதர்களின் வாழ்கையில் உள்ள மோசமான அனுபவங்கள், சிக்கல்கள், கஷ்ட நஷ்டங்கள், லட்சியம், ஆசை என அனைத்துமே முக்கியம்தான் என்ற கருத்தை கெஸ்சால்ட் தெரபி ஏற்றது. உலகில் பார்க்கும் புகைப்படங்கள், கேட்கும் பாடல்கள் என அனைத்தையும் நாம் உணர்ந்து பார்க்க முடியாது. அதில் நாம் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யவேண்டும்.  எதார்த்த நிகழ்ச்சியை ஒரு மனிதர் எப்படி உள்வாங்குகிறார் என்பதே அவரின் பார்வைக்கோணம் உருவாகுவதில் முக்கியமான அம்சமாக இருக்கும். இதைத்தான் கெஸ்சால்ட் தெரபி முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான ஃப்ரிட்ஸ் பெரிஸ் என்பவரின் கருத்தாக இருந்தது. உண்மை என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்து, கோணம் அதை எப்படி பார்க்கிற