இடுகைகள்

ஜார்க்கண்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாத்திரைகளை விட மக்களின் உயிர் முக்கியம்! - புஷ்கர்சிங் தமி, ஜார்க்கண்ட் முதலமைச்சர்

படம்
  புஷ்கர் சிங் தமி உத்தர்காண்ட் முதலமைச்சர் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கிவீட்டீர்களா? 50 சதவீத மக்களுக்கு முதல் தடுப்பூசியை வழங்கிவிட்டோம். மத்திய அரசு எங்களுக்கான தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரித்தால் விரைவில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கிவிடுவோம்.  சுற்றுலாபயணிகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்? பொதுமுடக்கத்தில் வீட்டிலேயே அடைந்து கிடந்தவர்கள், இப்போது வெளியே வருகிறார்கள்.  இதனை அரசாக நினைத்து தடுக்க முடியாது. மக்கள்தான் வெளியே வருவதை அவர்களாகவே கட்டுப்படுத்திக் கொண்டால்தான் உண்டு.  உத்தர்காண்டில் சில மாதங்களில் பல்வேறு முதல்வர்கள் மாறிவிட்டார்கள். நீங்கள்  உங்கள் நிலையைப் பொறுத்து கடினமான முடிவுகள் எடுக்க முடியுமா? என்மேல் நம்பிக்கை வைத்த கட்சிக்கார ர்கள், தொண்டர்கள், பிரதமர் மோடி ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான முதல்வர் ஆவேன் என நினைத்தே பார்க்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.  கன்வார் யாத்திரைகளுக்கு அனுமதி மறுத்தது கடுமையான முடிவுதான் அல்லவா? இ

கொரோனா காலத்தில் ஜார்க்கண்ட் மக்களின் வாழ்க்கையைக் காத்த பெண்மணி! - காயத்ரி தேவி

படம்
                  காயத்ரிதேவி பாகீரதி சுய உதவிக்குழுக்கள் காயத்ரியின் பணிகள் காலை ஏழுமணிமுதலே தொடங்கிவிடுகிறது . தனது வீட்டுவேலைகளை அவர் வேகமாக முடிப்பது அவசியம் . அப்போதுதான் அவரது வீட்டு வாசலில் காத்திருக்கும் கிராமத்து பெண்களுக்கு வங்கியில் பணப்பரிமாற்றம் பற்றி விளக்கம் அளிக்க முடியும் . ஜார்க்கண்டின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த காயத்ரி லேப்டார் சகிதமாக அனைத்து கிராமத்தினரின் வீடுகளுக்கும் சென்று வங்கிக்கணக்கு தொடங்குவது பற்றி சொல்லிக்கொடுக்கிறார் . கடன் , காப்பீடு , வங்கிக்கணக்கு புத்தக பதிவு , ஏன் அவர்களின் போனுக்கும் கூட ரீசார்ஜ் செய்துகொடுப்பதையும் செய்கிறார் . இத்தனைக்கும் இப்பணிகளை நக்சல் ஆதிக்கம் கொண்ட குன்டி மாவட்டத்தில் செய்து வருகிறார் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று . இப்பணிகளை இவர் அக்டோபர் 2016 முதல் செய்துவருகிறார் . கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபிறகு , கிராமத்தினர் அனைவரும் பணத்தை வங்கியில் இருந்து பெற அலைபாயத் தொடங்கினர் . வங்கிகள் மூடப்பட்டிருந்தால் தினசரி செலவிற்கான பணத்தை எப்படி பெறுவது என்பதுதான் அவர்களின் யோசனை .

மக்களை பிரிக்கும் அரசியலை நாங்கள் செய்ய மாட்டோம்! - ஹேமந்த் சோரன்

படம்
dh நேர்காணல் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் நீங்கள் எதிர்கட்சியைச் சேர்ந்த ரகுபர்தாஸின் மீதான வழக்கை கைவிட்டிருக்கிறீர்களே? மாநிலத்தில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை இதன்மூலம் தொடங்கியுள்ளேன். சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல நடவடிக்கைகளை உருவாக்க முடியும் என நம்புகிறேன். இதேபோல ஊழல் வழக்குகளையும் தள்ளுபடி செய்வீர்களா? அதற்கு வாய்ப்பில்லை. ஊழல் வழக்குகளில் சட்டவிதிகளுக்கு ஏற்பவே நாங்கள் நடந்துகொள்வோம். இந்த வழக்குகளை நடத்துவதில் எனக்கு எந்தவித உள்நோக்கமும், பழிவாங்கும் எண்ணமும் கிடையாது. உங்களது அரசின் முன்னுரிமைகள் என்ன? மக்கள் எங்களை எளிதில் அணுக முடியும் என்பதுதான். விரைவில் நீங்கள் அதற்கான சான்றுகளை காண்பீர்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் இவற்றைப் பற்றி உங்களது கருத்து? மக்கள் இங்கே வேலைவாய்ப்புகளின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்அவர்களிடம் ஆவணங்கள் கேட்பது முறையாகாது. பணமதிப்பு நீக்கத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று நொந்து போனார்கள். அந்த துயரம் எங்கள் மாநிலத்தில் மீண்டும் நடக்க நான் அனுமதி

ராமர் கோவிலை கட்டுவதே எங்கள் லட்சியம்!

படம்
நேர்காணல் ரகுபர் தாஸ், ஜார்க்கண்ட் முதல்வர் ராமர் கோவில் கட்டுவதைப் பற்றிய அறிவிப்பை தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசுவாரா? ஏன் கூடாது? ராமர் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கிறார். அயோத்யாவில் வந்த தீர்ப்பை இரு மத த்தினருமே ஏற்றுக்கொண்டனர். பின் ராமர் கோவில் கட்டுவதில் என்ன பிரச்னை இருக்கமுடியும்? தேர்தல் பிரசாரத்திலும் அதைப்பற்றி பேசுவதில் பெரிய மாற்றம் இல்லை. இனி நடக்கும் சம்பவங்களில் ராமர் கோவிலின் தாக்கம் நிறையவே இருக்கும். மாவோயிஸ்டுகளை முற்றிலும் அழிப்பதாக கூறினீர்கள். ஆனால் கடந்த வாரம் கூட அவர்கள் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறார்களே? எங்களுடைய அரசு மட்டுமே இங்கு அமைந்த வலுவான முதல் அரசு, மாவோயிச தீவிரவாதிகளை அழிப்பதற்கான திட்டங்களை தீட்டி செயற்படுத்தி வருகிறோம். அதில் முற்றிலும் வெற்றி பெறவில்லை. இதற்கு முன்பு இருந்த அரசில், தினசரி நாளிதழ்களில் ஊழல், தீவிரவாதம் பற்றி மட்டுமே செய்தி வந்துகொண்டிருந்தது. இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. எதிர்கட்சிகள் உங்கள் அரசு மீது காடுகள் பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்தல் சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளதாக குற்றம் சாட்டுகிறா

இளைஞர்களின் குரல் 2

படம்
better india செல்லக்குழந்தைகளுக்காக பொம்மைகள் வங்கி தொடங்கினேன் ஆர்யமான் லோகோட்டியா(17, கொல்கத்தா) என்னுடைய பதினாறு வயது சகோதரி மூலமாகவே பொம்மை வங்கி தொடங்குவதற்கான ஐடியாவைப் பெற்றேன். இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளாலும் பொம்மைகளை வாங்கி விளையாட முடியாது. பொருளாதார நிலைதான் இதற்கு காரணம். இதற்காகவே பொம்மைகளை தானம் பெற்று குழந்தைகளுக்கு வழங்க முயற்சித்தோம். Betterindia முதலில் பொம்மைகளை பெறுவதற்கான மையம் ஒன்றை அமைக்க சிரமப்பட்டோம். ஆனால் இன்று, இந்தியாவில் ஏழு நகரங்களில் எங்களுக்கு மையங்கள் உண்டு. உள்ளூர் என்ஜிஓக்கள் மற்றும் பல்வேறு குழந்தைகள் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு பணியாற்றி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக 1,500 பொம்மைகளை தானம் பெற்று வழங்கியுள்ளோம். இதில் எங்களுடைய வயதும் முக்கியக் காரணமாக செயலாற்றியுள்ளது. காரணம், இப்பணியில் எங்களுடைய லாபம் என்று ஒன்றும் கிடையாது. எனவே வயது சிறியதோ நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் செயற்பாட்டாளர்  சம்பா குமாரி (14, ஜார்க்கண்ட்) TOI நான் சிறுவயதில் மைக்கா சுரங

தூகு எனும் கொடிய வழக்கம்!

படம்
ozy.com நீங்கள் திருமணம் செய்வது சிறப்பான விஷயம். ஆனால் உங்கள் சொந்த கிராமத்தினருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தபின்தான் உங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? 2016 ஆம் ஆண்டு புத்து நாக் என்பவர், நிகிதா சின்கா, என்ற சமூக செயற்பாட்டாளரை அணுகினார். ஒரே கோரிக்கைதான். இந்தியர்கள் வேறு என்ன கோரிக்கை வைப்பார்கள். நான் லவ் பண்ணுகிற பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்றுதான். அப்புறம்தான் அவரின் பெற்றோரிடம் பேசினார் சிங். ஆனால் அவர்கள் கல்யாணமெல்லாம் பண்ண முடியாது மேடம் என்று சொல்லி விட்டனர். நிகிதா சின்கா அப்புறம் ஃபிளாஷ்பேக்கை கேட்டு ஷாக்கானார். கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்லி கேட்டவர் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார். பத்து வயதில் பெண் குழந்தை வேறு இருக்கிறது. இதற்கு பெயர் தூகு(dhuku). பழங்குடிகளின் சமூகமான நாக், கல்யாணம் செய்தால் கட்டாயமாக முழு கிராமத்திற்கும் சோறு போட்டு விருந்து வைத்தே ஆக வேண்டும். பட்ஜெட் பத்மநாபனாக காசு இல்லையே என கையைப் பிசைந்தால் கல்யாணம் கிடையாது. பட் ஒண்ணாக வாழ தடையில்லை. இவர்களை கிராமத்தில் தூகு என்று குறிப