இடுகைகள்

இயற்கைச்சூழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கைச் சூழல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது! - நிதின்சேகர்

படம்
  நேர்காணல் நிதின் சேகர் இயற்கை செயல்பாட்டாளர், எழுத்தாளர் காட்டுக்குள் நீங்கள் தங்கியிருந்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு பிடித்தமான நினைவுகள் ஏதேனும் இருக்கிறதா? நாங்கள் ஒரு யானையைப் பிடித்து கட்டி வைத்திருந்தோம். அதன் பெயர், திகாம்பர். ஒருநாள் நான் அதன் நின்றபடி நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது நெஞ்சில் ஏதோ ஒன்று வேகமாக வந்து பட்டது. கீழே விழுந்த பொருளைப் பார்த்தேன். அப்போதுதான் பிடுங்கி எறியப்பட்ட செடி.  திகாம்பர் தான் சலிப்பு தாங்காமல் என்மேல் செடியை எறிந்துள்ளது என புரிந்துகொண்டேன். திரும்ப அதே செடியை அதன் காலடியில் போட்டேன். திரும்ப திகாம்பர் என் மீது செடியை தும்பிக்கையால் பற்றி என் மீது எறிந்தது. ஆம் இப்போது நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சில நிமிடங்களுக்கு பிறகே அறிந்தேன். யானையை சுதந்திரமாக வைத்திருக்க நினைக்கிறோம். அதற்காக சூழலியலாளர்களாக நாங்கள் நிறைய உழைக்கிறோம்.  காட்டின் நடுவே சிறு குடிலைக் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறீர்கள். அதுவும் அங்கு வாழும் மக்களின் மொழியும் கூட உங்களுக்குத் தெரியாது அல்லவா? மேற்கு வங்கத்தில

இயற்கைச்சூழலை மேம்படுத்துவதில் பட்டாம்பூச்சிகளின் பங்கு!

படம்
  இயற்கைச் சூழலை மேம்படுத்தும் பட்டாம்பூச்சி!  பட்டாம்பூச்சிகளைப் பார்த்தால் என்ன தோன்றும்? அன்பு, அழகு, மகிழ்ச்சி ஆகிய  உணர்ச்சிகளை மனதில் ஏற்படுத்தும். இந்த வகையில் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு கூட ஒருவருக்கு ஆறுதல் தரலாம். மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வராலி கோகடேவும் இப்படித்தான் பட்டாம்பூச்சியால் ஈர்க்கப்பட்டார். இவர், புனேவில், அபாசாகேப் கார்வாரே கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் துறையில் படித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் படிப்பில், கொரோனா பெருந்தொற்று குறுக்கிட்டது. இக்காலத்தில் தேவ்கட் தாலுக்காவில் உள்ள தனது கிராமத்திற்கு வந்தார் ஸ்வராலி. அங்குதான், தனது பேராசிரியர் ஆனந்த் பாத்யே அறிவுறுத்தல்படி பட்டாம்பூச்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கினார்.  தேவ்கட் பகுதியில், மரங்கள் வெட்டப்பட்டதால் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்டறிந்தார். இதற்கு மரங்களை அழித்து கட்டுமானங்களை எழுப்பிவருவதும் முக்கியமான காரணம் என்பதை அறிந்து செயல்படத் தொடங்கினார். பட்டாம்பூச்சி லார்வா நிலையிருந்து கம்பளிப்பூச்சியாக மாறுவதைப் பார்த்து, அவற்றை பாதுகாக்க தொடங்கினார். பொதுமு

இயற்கைச்சூழலைக் கெடுத்த செர்னோபில் அணுஉலை பேரிடர்!

படம்
  செர்னோபில் பேரிடர்  செர்னோபில் பேரிடரைப் பலரும் எப்போதேனும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் அணுஉலை பற்றி பேசும்போது முக்கியமாக இதனை சூழலியலாளர்கள் கூறுவார்கள். அந்தளவு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் இது.  1986ஆம்ஆண்டு ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுஉலை பாதிப்பு ஏற்பட்டது. சோவியத் யூனியனின் பிரிப்யாட் என்ற நகரில் அமைந்திருந்த அணுஉலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது.  அணு உலையில் அமைந்திருந்த ரியாக்டரை சோதித்து வந்தனர். அதில், நீர் மூலம் இயங்கும் டர்பனை இயக்கி ரியாக்டரின் வெப்பத்தைக் படிப்படியாக குறைக்க முயன்றனர். ஆனால் அப்போது திடீரென மின்சாரம் நின்றுபோனது. இந்த இடத்தை மூடிய ஆபரேட்டர்கள் அணு உலையின் தொடர் சங்கிலியாக நடக்கும் செயல்பாடுகளை கவனிக்க வில்லை. இதன் காரணமாக அங்கு தீபிடித்தது. இதன் விளைவாக கதிரியக்க தனிமங்கள் சூழலில் கசியத் தொடங்கின. இதன் விளைவாக காற்றை சுவாசித்த நூறு பேர் உடனடியாக இறந்தனர். மீதியுள்ளவர்கள் பலருக்கும் வாழ்நாள் முழுக்க தொடரும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.  அரசுக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சுற்றுப்புறத்தில் வாழ்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்ப