இடுகைகள்

இடைநிற்றல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளி இடைநின்ற மாணவர்களை மீட்கும் ஆசிரியர்கள்! - தமிழக அரசின் புதிய கல்வித்திட்டம்

படம்
  திருச்சியில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீட்கும் முயற்சிகளை அரசுபள்ளிகள் தொடங்கியுள்ளன. அங்கு வறுமையால் குடும்பத்திற்கு உழைக்கும் நிலையில் உள்ள மாணவர்களை நேரடியாக சென்று சந்தித்து மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்க ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள். இந்த வகையில் ஹரிதாஸ் என்ற மாணவர், விபத்தால் படுக்கையில் கிடக்கும் தந்தை காரணமாக கட்டிட வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது வயது 17. இப்போது ஆசிரியர்கள் அவரை மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். இவரைப் போலவே உள்ள ஐம்பது மாணவர்களை சோமரசன்பேட்டை  அரசுப்பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளனர்.  இப்படி  பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் சேர்க்கும் திட்டத்தை கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் ஜூலையில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதில் கொரோனா முக்கியமான காரணமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்து வருகிறார்கள்.  திருச்சியில் மட்டும் இந்த வகையில் பள்ளியில் இடைநின்ற 3769 மாணவர்கள் பள

கல்வியை கைவிடும் மாணவர்கள் - என்ன காரணம்?

படம்
pixabay இந்தியாவிலுள்ள கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களை விட அதிகமாக செலவு செய்வதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வு முடிவுகளில் இந்த செய்தி தெரிய வந்துள்ளது. தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட நூல்களுக்கு செய்யும் அதிகப்படியான செலவுகளால், பள்ளியை விட்டு இடைநிற்றல் ஆகி விடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதற்கு அரசு அவர்களுக்கு கல்வியில் ஆர்வமில்லை அல்லது பொருளாதார பிரச்னைகளை என கூறியுள்ளது. இதனால் தொடக்க கல்வியில் இடைநிற்றல் அளவு 10 சதவீதமாகவும், 6 முதல் பத்தாவது வகுப்பு வரையில் 17.5 சதவீதமாகவும் உள்ளது. மேல்நிலைப்பள்ளி அளவில் இந்த அளவு 19.8 அளவாகவும் உள்ளது. இதற்கு முக்கியக்காரணம் கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் ஆகியவை கிராமப்புறம், நகர்ப்புறம் ஆகிய இருபகுதிகளிலும் ஏகத்துக்கும் ஏறிவிட்டதுதான் காரணம். இதுமட்டுமா? எழுதுபொருட்கள், நோட்டு புத்தகங்கள், உடை என பல்வேறு பொருட்களின் விலையும் ஏறிவிட்டன என்று இந்த ஆய்வு கூறியுள்ளது. 2017-18ஆம்ஆண்டு செய்த ஆய்வுப்படி, மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு(அரசுப்பள்ளி)

பத்து ஆண்டுகளில் நிறைவான கல்வி - இந்திய அரசின் திட்டம் வெல்லுமா?

படம்
இந்தியா, 2030 ஆம் ஆண்டில் நூறு சதவீத கல்வி என்ற லட்சியத்தை நோக்கி அடியெடுத்து வைத்து வருகிறது.  ஐ.நா சபை, மற்றும் யுனெஸ்கோ ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றும் முடிவை அரசு எடுத்துள்ளது. அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் 6 - 17 வயதிலுள்ள மாணவர்களில் ஆறில் ஒருவர் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்  என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 2030 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகள் தொடக்க கல்வியை நூறு சதவீதம் பேர் நிறைவு செய்திருப்பார்கள் என்றும், மேல்நிலைக்கல்வியை 84 சதவீதம் பேர் பெற்றிருப்பார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 2008 முதல் 2012 வரை இந்தியாவில் மாணவிகளின் சேர்க்கை அதிகமாகியுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் மேல்நிலைக்கல்வியில் இடைநிற்றல் அளவு 40 சதவீதமாக உள்ளது அபாயகரமானது. 2030 ஆம் ஆண்டில் 20 சதவீத இளைஞர்களும் , 30 சதவீத வயது வந்தோர்களும் கல்வி அறிவின்றி இருப்பார்கள். இந்தியாவில் கல்வி கற்பதில் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி கற்பதை கைவிட்டவர்களுக்கும் அதிக படிப்புகளைப் படிப்பவர்களுக்கும் உள்ள இடைவெளி வளர்ந்துகொண