ரோனி சிந்தனைகள்! - உன்னதம் குரூரம் இரண்டுக்குமான நடுநிலை
ரோனி சிந்தனைகள் குடமுழுக்கு நன்கொடைகள் இப்போதெல்லாமாம் அதிகரித்துவிட்டன. கதவை முட்டி மோதிக்கொண்டு இரு தலித் பெண்கள் நின்றனர். என்னவென்று கேட்டதற்கு, கோயிலுக்கு செல்லும் பாதையை செப்பனிடுகிறோம். காசு குடுங்க என்றார்கள். விவரம் கேட்டால் கூட பொறுமையின்றி பதில் சொன்னவர்கள், இவ்ளோ பேசுறீங்க ஒரு ரூபா கைல தரமாட்டீங்கறிங்க என்று அலுப்போடு சொல்லிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்கள். அங்கே இன்னும் மோசம். கோவில் அன்னதானத்தை நம்பித்தான் உறவினரின் குடும்பமே வாழ்கிறது. அவர்களிடம் ஒற்றை ரூபாய் வாங்கிவிட்டால் கெட்டிதான். எங்கள் பக்கத்து கடைகளில் புரோட்டா ஒன்று பதினைந்து ரூபாய்க்கு விற்கிறது. ஒரு செட் முப்பது ரூபாய். நிலத்தகராறுக்கு தாயாரை கவசமாக்கி போராடும் சிறிய மாமனின் புகார் கடித ரசீதை பார்க்கும்போதெல்லாம் பசியில் அல்லாடும் அவரது இரு மகன்கள் முகம் நினைவுக்கு வந்து போகிறது. ஒரு பதிவுத்தபாலின் செலவு இருபத்தொன்பது ரூபாய் ஐம்பது பைசா மட்டுமே. நீங்கள் முப்பது ரூபாயாகவும் கொடுக்கலாம். மனிதர்களின் மனம் உன்னதம், குரூரம் என்ற இரண்டு திசைகளில் அமைந்த தொடமுடியாத துருவங...