இடுகைகள்

தயாரிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகின் டாப் சண்டைப்பட நடிகர்களில் நானும் ஒருவன்! - வித்யுத் ஜாம்வால்

படம்
  வித்யுத் ஜாம்வால் இந்தி நடிகர்  நீங்கள் இதுவரை நடித்து வந்த படங்கள் அனைத்துமே சண்டைப்படங்கள்தான். இப்போது உணர்ச்சிகள் சார்ந்த படங்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். ஏன்? பதினொரு ஆண்டுகளாக நான் கற்ற விஷயங்களை படத்தில் பயன்படுத்தியுள்ளேன். சண்டை படங்களிலிருந்து இப்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படங்களுக்கு மாறியிருக்கிறேன். இப்போது படத்தை உருவாக்கும் முறைகளை கற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறேன். எனக்கு பிடித்த விஷயங்களை படக்குழுவிடம் சொல்லுவேன். இப்போது நடித்துள்ள குதா ஹஃபீஸ் 2 படத்தில் கூட மூன்று சூஃபி பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனக்கு சூஃபி இசை பிடிக்கும் என்பதால் நான் கூறிய ஐடியா தான் இது. சண்டைப்பட நடிகராகத்தான் நிறைய படங்கள் நடித்துள்ளீர்கள். உங்களை எப்படி நீங்கள் புதுப்பித்துக்கொள்கிறீர்கள்? நான் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றவன். பல்லாண்டுகளுக்கு முன்னர் கற்றாலும் கூட அதனை இன்னும் பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன். எனது படங்களிலும் நான் இதை மேம்படுத்தி பயன்படுத்துகிறேன். ஆனால் எப்போதும் இக்கலையை வைத்து ஒருவரை அடிக்கவேண்டும் என்று நினைத்ததே இல்லை. குதா ஹபீஸ் 2 படத்தின் இயக்குநர் ஃபாரூக்

காற்று மாசைத் தீர்க்க ஹைட்ரஜன் உதவுமா?

படம்
  காற்று மாசைத் தீர்க்குமா ஹைட்ரஜன்? டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசைக் குறைக்க, ஹைட்ரஜன் வாகனங்களை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம், அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது.  இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கும், ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கும், கரிம எரிபொருட்களே ஆதாரமாக உள்ளன. இதில் ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கு இயற்கை எரிவாயு பயன்படுகிறது. மின்சார உருவாக்கத்திற்கு நிலக்கரி, நீர், எரிவாயு ஆகிய இயற்கை வள ஆதாரங்கள் உதவுகின்றன. ஹைட்ரஜன் வாகனங்கள் சூழலுக்கு ஏற்படுத்தும் மாசு, கரிம எரிபொருட்களை விட குறைவு. இதனால் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகளை இயக்கும் யோசனையை முன்னர் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. உலக நாடுகள் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜப்பானும், தென்கொரியாவும் ஹைட்ரஜன் வாகனங்களை ஆதரித்து, உருவாக்கி வருகின்றன. அமெரிக்காவும், சீனாவும் மின் வாகனங்களை உயர்த்திப்பிடிக்கின்றன. இந்தியாவிலும் மின் வாகனங்களாக மோட்டார் சைக்கிள் முதல் பேருந்துகள் வரை இயக்கப்படவும் தொடங்கிவிட்டன.  ஹைட்ரஜன் வாகனங்களுக்கும் (HV), மின் வாகனங்

இயற்கையில் சிதையும் பிளாஸ்டிக்கு மதிப்பு கிடையாதா?

படம்
giphy உலக நாடுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் கடுமையான சிக்கலில் சிக்கி வருகின்றனர். காரணம் என்ன? வாங்க பார்ப்போம். பிளாஸ்டிக் என்பது என்ன? ஏராளமான கார்பன் மூலக்கூறுகள் இணைந்ததுதான். அதில் பாலிதீன், எத்திலீன் ஆகிய மூலக்கூறுகளின் இணைப்புதான் பிளாஸ்டிக் பொருட்களை உறுதியானதாகவும், வலுவாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் மாற்றுகிறது. ஆனால் இந்த இணைப்பை பாக்டீரியா உண்ணும்படியான தன்மையில் மாற்றினால் என்னாகும்? அரிசியும் அதில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுக்கொன்று தொடர்பானது. அவற்றை நீங்கள் பிரிக்கலாம். ஆனால் அதன் தன்மை மாறும் அல்லவா? அதைத்தான் இங்கு கூறவருகிறோம். பாலிமர் எனும் பிளாஸ்டிக்குக்கான மூலப்பொருட்கள் பெட்ரோல், டீசல் கிடைக்கும் கச்சா எண்ணெய்தான். பிளாஸ்டிக் பொருட்களின் வெற்றி அவை வெப்பம், ஈரப்பதம், வறட்சியான சூழ்நிலை ஆகியவற்றிலும் பொருட்களை கெடாமல் வைத்திருப்பதுதான். அதுவும் பிளாஸ்டிக் பிற பொருட்களை விட சல்லீசு ரேட்டில் கிடைக்கும். ஆனால் இப்போது பாக்டீரியா உண்ணும்படியான பொருட்களைக் கொண்டு  பிள