இடுகைகள்

பெல்லம் கொண்டா சீனிவாஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிளிஷேக்களிலிருந்து வெளியே வாங்க தேஜா - சீதா(தெலுங்கு)

படம்
சீதா தெலுங்கு தேஜா ஒளிப்பதிவு சிர்ஷா ரே இசை அனுப் ரூபன்ஸ் ஆஹா! வாழ்க்கையில் பணம் மட்டும்தான் முக்கியம் என்று நம்புகிற பெண், மனிதர்கள் அதைவிட முக்கியம் என உணருவதுதான் கதை. இதில் இப்படத்தில் தேறுவது சோனு சூட், காஜலின் நடிப்புதான். பெல்லக்கொண்டம் சீனிவாஸ், ஜூனியர் ஆர்டிஸ்ட் போல வந்து போகிறார். சோனு சூட், அவரின் அடியாட்களாக வந்து பாடலாகப் பாடும் நடிகர், உதவியாளராக வரும் கணேஷ் ஆகியோர் பிரமாதப்படுத்துகிறார்கள். காஜல் முதல் காட்சியிலிருந்து அட்டாகப்படுத்துகிறார். இசையில் அனுப் ரூபன்ஸ் தன் பங்குக்கு கோயிலம்மா பாடலில் அசர வைக்கிறார். அடச்சே! தேஜாவின் நாயகன், எப்போதும் ஏதோவொன்றை தள்ளி உடைத்து தன் பலத்தை நிரூபிப்பார். நானே ராஜா நானே மந்திரி படத்தில் ஜீப்பை ஆற்றில் விழுவதிலிருந்து ராணா காப்பாற்றுகிற காட்சி நினைவுக்கு வருகிறதா? அதேதான். இங்கு சீனிவாஸ் அதை அப்படியே மாற்றி பாத்ரூம் கதவை உடைக்கிறார். பஸ் சீட்டைப் பிடுங்குகிறார். கியர் ராடை அசைத்து உடைத்து எடுக்கிறார். இது படத்தின் கதைப் போக்குக்கு எந்தளவு உதவுகிறது. படம் பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தேஜா சார் கிளிஷே

அல்லுடு சீனு - ரீவைண்ட் அரைச்ச மாவு

படம்
அல்லுடு சீனு!(Telugu, 2014) இயக்கம்: விவி விநாயக் ஒளிப்பதிவு சோட்டா கே நாயுடு இசை டிஎஸ்பி கிராமத்தில் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கும் சீனுவுக்கு, உதவுகிறார் அவரது மாமா பிரகாஷ்ராஜ். ஊரில் கடன்தொல்லையிலிருந்து தப்பிக்க சென்னை வரும் ஐடியா சொதப்ப, ஹைதராபாத் வருகிறார்கள். அங்கு மாஃபியா டான் ஒருவர், தன் மாமா போலவே இருக்க, அதை வைத்து சம்பாரிக்க முயற்சிக்கிறான். இதனால் ஏற்படும் பிரச்னைகள், காதல், டூயட் இன்னபிற சமாச்சாரங்கள்தான் கதை. பெல்லகொண்டா சீனிவாஸ் அறிமுகமாகும் படம். அகிலைப் போலவே விவி விநாயக் இதனை சிறப்பாக செய்திருக்கிறார். என்ன ஹீரோ நிறைய இடங்களில் நடிப்பு வராமல் பாவமாய் நிற்கிறார். அத்தனை இடங்களிலும் நமக்கு ஆறுதல் தருவது, டிம்பிள் எனும் பிரம்மானந்தம்தான். மனிதர் பாவமான முகத்தை வைத்து செய்யும் சீரியசான விஷயங்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. வெளிப்படையாக சொன்னால் படத்தில் சீனிவாஸை விட பிரகாஷ் ராஜ் நன்றாக நடித்திருக்கிறார். கிடைத்த இடத்தை சரியாக பயன்படுத்தி ஸ்கோர் செய்தது அவர்தான். சமந்தா, பணக்கார லூசு பெண்ணாக வந்துபோகிறார். அவர் வைக்கும் டெஸ்டுகளைப்