இடுகைகள்

ஏசர் அறிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வியில் தடுமாறும் இந்தியா!

படம்
franchise india இந்தியா, சீனாவை விட மூன்று மடங்கு அதிக பள்ளிகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் கல்வித்தரத்தில் பலமடங்கு கீழே உள்ளது. என்ன காரணம் உள்ளது?  கல்வி உரிமைச்சட்டம்  நூறு சதவீதம் கல்வியை வலியுறுத்துகிறது. ஆனால் கல்வியில் குறிப்பிட்ட தரத்தை கொண்டு வர அரசு தடுமாறி வருகிறது. தற்போது நிதி ஆயோக், கல்வியில் பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆனாலும் பிரச்னைகளுக்கான வேராக உள்ளது, திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படாதே ஆகும். ”இந்தியா எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் ஆபத்து ஆசிரியர்கள் பற்றாக்குறையே ஆகும். இந்த சூழலில் கல்வியில் சிறந்த திறனை எட்டுவது என்பது மிகவும் சிரமம்” என்கிறார் நிதி ஆயோக் ஆலோசகரான ஆலோக் குமார் மற்றும் சீமா பன்சால்(இயக்குநர், போஸ்டன் ஆலோசனை நிறுவனம்) சீனாவில் ஐந்து லட்சம் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் இந்தியாவில் பதினைந்து லட்சம் பள்ளிகள் இயங்கியும் நம் குழந்தைகளுக்கு சரியான கல்வியை பயிற்றுவிக்க முடியவில்லை. இந்தியாவிலுள்ள நான்கு லட்சம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 50 தான் என்றால் நம்புவீர்கள