இடுகைகள்

ராணுவத்தளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளியில் பேரரசு - அமெரிக்காவை முந்தும் சீனா -இரண்டாவது அத்தியாயம்

படம்
  தியான்காங் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்வெளியில் பேரரசு – சீனாவின் மகத்தான கனவு சீனாவில் ஏராளமான ராக்கெட் ஏவுதளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சீன தேசிய விண்வெளி நிர்வாக அமைப்பு, நிர்வாகம் மேற்பார்வை செய்துவருகிறது. சீனாவில் உள்ள முக்கியமான ராக்கெட் ஏவுதளங்களைப் பார்ப்போம். கோபி பாலைவனத்தில் உள்ள விண்வெளி மையத்தின் பெயர், தையுவான். இங்கிருந்து வானிலைக்கான செயற்கைக்கோள்கள ஏவப்படுகின்றன. கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையும் இங்கு சோதனை செய்திருக்கிறார்கள். சிச்சுவான் பகுதியில் ஷிசாங் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு சீன கடல் தீவில் வென்சாங் விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கு, விண்வெளிக்கு சென்று வரும் வீரர்கள் திரும்ப வந்திறங்குகிறார்கள். கூடவே, மனிதர்கள் இடம்பெறாத விண்கலன்களை அனுப்பி வைக்க இந்த ஏவுதளம் பயன்படுகிறது.   ஷாங்காய் நகரிலிருந்து இரண்டரை மணி நேரம் பயணித்தால், நிங்க்போ என்ற துறைமுகப் பகுதி வரும். இங்கு ராக்கெட்டுகளை ஏவும் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. வணிக ரீதியான செயல்பாடுகளை செய்வதற்கான இடம். இங்கு ஆண்டுக்கு நூறு வணிக ராக்கெட்டுகளை ஏ