குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கேலி சித்திரவதைக்கு உள்ளாவது ஏன்?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி குழந்தைகள் கேலி சித்திரவதையில் ஈடுபடுவது எதற்காக? உளவியல் ரீதியாக சில குழந்தைகள் எதிர்பார்த்த அங்கீகாரம், அன்பு கிடைத்திருக்காது. கோபம், ஆக்ரோஷன், வன்முறை மூலம் தங்களுக்கான புகழை, பெருமையை அடைய முயல்கிறார்கள் இதன்பொருட்டே கேலி சித்திரவதையை தொடங்குகிறார்கள். பள்ளிகளில் மாணவிகளில் சிலரும் இதுபோல கேலி சித்திரவதையை செய்து புகழ்பெற முயல்வதுண்டு. அதெல்லாமே வெட்டிப்பெருமைதான். மாணவர்களில் பத்து முதல் இருபது சதவீதம் பேர் இப்படி பிறரை கேலி சித்திரவதை செய்பவர்களாக இருக்கிறார்கள். இப்படி செய்வதை ஏற்க கூடாது. முறையாக புகார் அளித்து பாதிக்கப்படுபவர்களை காக்க முயலவேண்டும். இதன் வழியாக கேலி சித்திரவதை குறையும். குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கேலி சித்திரவதைக்கு உள்ளாவது ஏன்? சில பெற்றோர்கள் குழந்தையை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் செல்லம் கொடுத்து வளர்ப்பார்கள். இப்படி வளர்பவர்களுக்கு சுய நம்பிக்கை, துணிச்சல், தைரியம் இருக்காது. தன்னம்பிக்கை குறைவாக, கூச்ச சுபாவிகளாக இருப்பார்கள். இப்படியானோரை பள்ளியில் கேலி சித்திரவதை குழு அடையாளம் கண்டு அடித்து துன்புறுத...