இடுகைகள்

கிச்சுகிச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகையிலையை மேம்படுத்த உதவும் யூரியா? உண்மையா? உடான்ஸா?

படம்
  புகையிலைப் பொருட்களை மேம்படுத்த யூரியா உதவுகிறது! உண்மை. புகையிலையில் மனிதர்களின் சிறுநீரில் காணப்படும் யூரியா மூலக்கூறு, உரமாகப் பயன்படும் டைஅம்மோனியம் பாஸ்பேட், அம்மோனியா, ஃபார்மால்டிஹைடு, சாக்லெட் ஆகியவை உள்ளன.  இதனை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராபர்ட் புரோக்டர் ஆய்வில் உறுதி செய்துள்ளார். அமெரிக்காவிலுள்ள நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பும் (CDC) புகையிலையில் யூரியா பயன்படுவதை கண்டறிந்துள்ளது.  2050இல் இந்தோனேஷியாவின் வடக்குப் பகுதி ஜகார்த்தா நகரம் நீரில் மூழ்கும்! யூக உண்மை. வெப்பமயமாதல், சூழல் மாறுபாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இப்படி அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இந்தக் கூற்று நடக்கலாம். நடைபெறாமலும் போகலாம். கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தால் ஜகார்த்தா நகரம் உறுதியாக நீருக்கடியில் மூழ்க அதிக வாய்ப்புள்ளது.  2019ஆம் ஆண்டு வெளியான வயர் வலைத்தள கட்டுரையில், ஜகார்த்தா நகரம் ஆண்டுக்கு பத்து அங்குலம் நீரில் முழ்கி வருவதாக எழுதப்பட்டிருந்தது.  வாழைப்பழத்தில் 500 வகைகள் உண்டு! உண்மை. நகரத்தில் பெரும்பாலும் விற்பவர்களுக்கு மஞ்சளா, பச்சையா என்று மட்

நமக்கு நாமே கிச்சுகிச்சு மூட்டமுடியாதா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி நம்மால் நமக்கு நாமே  கிச்சுகிச்சு மூட்டிக்கொள்ள முடியாதது ஏன்? இப்படியெல்லாம் யோசித்து கேள்வி கேட்க முடியும் மூளையின் சக்தி அபாரமானதுதான். பதில் சிம்பிள். உங்கள் மூளைக்கு உங்களுடைய கைகளின் தொடுகையும், பிறரின் தொடுகையும் தெரியும். பிரித்துணர முடியும். அதனால்தான் உங்களுடைய கிச்சு கிச்சு மூட்டும் காரியத்தை மூளை புரிந்துகொள்கிறது. இதனால் பிறரின் தொடுகையில் ஏற்படும் கிச்சுகிச்சு சந்தோஷம் நம் கைமூலம் நமக்கு ஏற்படுவதில்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்