இடுகைகள்

வாசனை திரவியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசனை திரவியங்களில் ஆண், பெண் வேறுபாடு உண்டா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி ? மிஸ்டர் ரோனி ஆண்களுக்கான, பெண்களுக்கான வாசனை திரவியங்களில் வேறுபாடு என்ன? அனைத்திற்கும் ஆல்கஹால்தான் மையம். ஆனால் வேறுபடுவது, பெண்களுக்கான வாசனைகள்தான். ஆண்களுக்கு சற்று மூக்கை நெருடும் வாசனைகளையும் பெண்களுக்கு இதமான, ஆழ்ந்து சுவாசித்தால் தெரியும்படியான பூக்கள் வாசனைகளை அமைக்கிறார்கள். இதற்கான காரணம், பெண்களின் உடல் வியர்வை மற்றும் ஆண்களின் உடல் வியர்வை மணம்தான். இதனை அடிப்படையாக வைத்தே அன்றிலிருந்து இன்றுவரை பர்ப்யூம்கள், டியோடிரண்ட், சென்ட் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம் இவன் வேற மாதிரி விக்ரம் பிரபு போல பாடி ஸ்ப்ரேயில் என்ன வித்தியாசம்? என அக்கா பெண்ணின் பாடி ஸ்ப்ரேயை களவாடி களிப்புறுவதும் நம் தேசத்தில் நடக்கும் காட்சிதான். நன்றி:பிபிசி