சமூகப் புரட்சியில் அறிவுஜீவிகளுக்கு உள்ள பங்கு!
அரசியல் ரீதியான புரட்சிக்கும் சமூகத்தை அடிப்படையாக மாற்றும் புரட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அரசியல் புரட்சியை ஒருவகையில் ரகசியமாக ஏகபோகமாக கூட நடத்திக் காட்டிவிட முடியும். தொழிற்சாலை தொழிலாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள் என இருதரப்பும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும். பொருளாதாரம், வாழ்க்கை என்ற இரண்டு அம்சங்களிலும் கூட இருபிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும் முக்கியம். இவர்கள் இல்லாமல் எந்த சமூக மாற்றங்களும் நடைபெறாது. இணையம் வந்தபிறகு போராட்டங்களை ஒருங்கிணைப்பு வேறு ஒரு தளத்திற்கு மாறியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களை நிர்வகிப்பவர்கள், போராட்டங்களை எளிதாக தடுத்து நீக்க முடியும். எனவே, அவை இல்லாமலும் மக்கள் ஒன்றாக இணைந்து களத்தில் செயல்பட முயலவேண்டும். முதலாளிகளைப் பொறுத்தவரை லாபம் வந்தால்தான் ஒரு பொருளை நிர்வாகம் செய்வார். அரசு எதிர்த்தால், தொழில் இழப்பை சந்தித்தால், அதை எதிர்கொள்ளும்படி நிறைய கட்டுப்பாடுகள், விதிகளை உருவாக்கிக்கொள்வார். அரசுகளின் கருத்தியலுக்கு ஏற்றபடி அல்காரிதங்களை கூட தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்றியமைப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். உடல் உழைப்பு, மூளை உழைப்பு என...