இடுகைகள்

நகரங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமைத்திட்டங்கள் நகரங்கள் பாதிப்பைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா? பசுமை வளைய திட்டங்கள் தொடக்கம்

படம்
      பிக்சாபே         பசுமை பாதுகாப்பு வளையம் ! பருவச்சூழல் மாறுபாடுகளால் உலக நாடுகள் அனைத்தும் வெள்ளம் , புயல் , வறட்சி , சுனாமி , நிலநடுக்கம் ஆகிய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன . இதற்கு முக்கியக்காரணம் , அதிகரிக்கும் மக்கள் தொகையும் அதன்விளைவாக வேகமாக அழிக்கப்படும் காடுகளும்தான் . தற்போது இந்தியாவில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன . 2100 ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் பெரு நகரங்களில் வசிப்பார்கள் என்பதால் , நகரில் உள்ள பல்வேறு ஏரிகள் , குளங்கள் , சதுப்புநிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் அவசியம் உருவாகி வருகிறது . ” மனிதர்களின் ஆரோக்கியம் இயற்கைச்சூழலோடு தொடர்புடையது” என்று ஐ . நா . அமைப்பின் தலைவர் அன்டானியோ குடாரெஸ் கூறியுள்ளார் . இயற்கைக் சூழல் பற்றி ஐ . நா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது . அதில் , இயற்கையின் பன்மைத்துவச்சூழல் அழியும்போது , நுண்ணுயிரிகள் விலங்குகளிடமிருந்து மிக எளிதாக மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது . தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இயற...

கடல்நீர்மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? - அலசல் பார்வை

படம்
      cc     நகரங்களை மூழ்கடிக்கும் கடல்நீர்மட்ட உயர்வு ! 2100 ஆம் ஆண்டில் கடல் மூலமாக ஏற்படும் வெள்ள அபாயம் 48 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தகவல் தெரிவித்துளளன . கடந்த சில ஆண்டுகளாகவே கடல்நீர்மட்டம் உயர்நது வருவதைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன . இவை வெறும் பயமுறுத்தல் அல்ல என்பதற்கான சான்றுகளை , நாம் உலக நாடுகளில் கடற்கரையோர நகரங்கள்மூழ்குவதன் மூலம் அறியலாம் . இதுபற்றிய ஆராய்ச்சியில் 2100 ஆம் ஆண்டு கடல் அலைகள் மூலமாக கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிய வந்துளளது . இதன்மூலம் ஏற்படும் சொத்துக்களின் பாதிப்பு காரணமாக 20 சதவீத பொருளாதார இழப்பு ஏற்படும் எனறும் எப்ரு கிரெஸி , லான் யங் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சி அறிக்கையில் சுடடிக்காட்டப்பட்டுளளது . பாதிப்பைக் கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்களை குறைக்கவேண்டும் . அடுத்து , கடல்நீர் நகரங்களுக்குள் புகாதபடி சுவர்களை கட்டலாம் என பல்வேறு ஆலோசனைகள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன . கடல்நீர் மட்டம் உயருவதற்கான முக்கிய காரணம் , வெப்பநிலை உயர்வு ,...

காடுகளை வகைப்படுத்துகிறது இந்திய அரசு! - காடுகள் வளருமா?

படம்
pixabay இந்திய அரசு காடுகளை மக்களை உள்ளே அனுமதிக்கும் (Go), அனுமதிக்காத (Non go)  என வகைப்படுத்தி கொள்கைகளை வகுத்துள்ளது. இதன்படி காடுகளில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்கள் உள்ள பகுதிகளுக்கு குறைவான அனுமதியே அளிக்கப்படவிருக்கிறது. பிற பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செய்துகொள்ளலாம். இதனை ஹை, மீடியம், லோ என மூன்று பிரிவுகளாக அரசு பிரித்துள்ளது. இதன்படி ஹை எனும் பிரிவில் உள்ள காடுகளில் எந்த வித வளர்ச்சிப்பணிகளையும் அரசு மேற்கொள்ளாது. பிற நிறுவனங்களும் அப்பகுதியில் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது. மீடியம், லோ ஆகிய பகுதிகளில் வளர்ச்சி சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம். 2019ஆம் ஆண்டு தகவல்படி இந்தியாவில் உள்ள காடுகளில் சதவீதம் 21.9 ஆகும். இதுவரை 7,12, 249 சதுர கி.மீ. தொலைவுக்கு காடுகள் பரவியுள்ளன. 1980ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 1.52 மில்லியன் ஏக்கர்கள் அளவுக்கு காடுகள் வளர்ச்சிப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய காடுகள் மற்றும் ஆராய்ச்சிக்கழகம் மத்திய அரசுக்கான கொள்கைகளை பரிந்துரைத்துள்ளது. இனிவரும் காலங்களில் இது தொடர்பான அறிக்கைகளை அரசு வழங்கலாம்.

அதிவேகமாக வளரும் இந்திய நகரங்கள்!

படம்
 அண்மையில் தி எகனாமிஸ்ட் எனும் இதழ் செய்த ஆய்வில் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்திலுள்ள நகரங்கள் அதிவேக வளரும் நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தின் மலப்புரம் உள்ளிட்ட மூன்று  நகரங்கள் அதிவேகமாக வளரும் நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இங்கு குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், நூறு சதவீத மக்கள் நகரவாசிகளாக மாறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தி எகனாமிஸ்ட் இதழ் ஆய்வில் மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம் ஆகிய மூன்று நகரங்களும் அதிவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்து ஆச்சரியம் தருகின்றன. நகரங்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, பல்வேறு தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி, கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவது என இரு காரணங்களைத்தான்.  கேரள மாநிலத்தில் 50 சதவீதம் பேர், விவசாயத்தை விட்டு வெளியேறி சேவைத்துறை சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர். இந்த வேலைகளுக்காகவே கிராமத்தை விட்டு விலகி நகரத்திற்கு வருகின்றனர். இதன் காரணமாகவே வளர்ச்சி வேகம் மக்கள் இடம்பெயரும்...