இடுகைகள்

அப்பாவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாவியான பங்குச்சந்தை தரகன் தன்னை சைக்கோபாத் கொலைகாரனாக நினைத்துக்கொண்டால்....

படம்
சைக்கோபாத் டைரி  கே டிராமா பதினாறு எபிசோடுகள்  ராக்குட்டன் விக்கி ஆப்  பங்குச் சந்தை நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன். இளகிய இதயம் கொண்ட அப்பாவி. எனவே, அவனை பலியாடாக்கி ஒரு நிறுவனத்தைப் பற்றிய அறிக்கையை தயார் செய்யச் சொல்கிறார்கள். அந்த வேலை கூட அவனது நண்பன் செய்யவேண்டியதுதான். ஆனால் அவன் நாயகனின் தலையில் கட்டிவிடுகிறான். அதை அவன் தயாரித்துக் கொடுத்த அந்த நேரத்தில் அதிலுள்ள தகவல்களால் அந்த நிறுவனம் சரிவைச் சந்திக்கிறது. இதை வைத்து அவனை வேலையை விட்டு நீக்க முயல்கிறார்கள். தனது நெருங்கிய நண்பனே இப்படி துரோகம் செய்கிறானே என நொந்துபோன நாயகன் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். அப்படி தற்கொலை செய்ய முயலும்போது, யாரோ ஒருவர் வலியில் முனகுவது போல சத்தம் கேட்க, கீழே வந்து எட்டிப்பார்த்தால் ஒருவன் வயதான ஒருவரைக் கொல்ல முயன்றுகொண்டிருக்கிறான். அதை நாயகன் மறைந்திருந்து பார்க்கிறான். அவன் கோழை, அப்பாவி. எனவே, அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். அப்போது முதியவர் கொலைகாரனது டைரியை தட்டிவிடுகிறார். அதை நாயகன் எடுத்துக்கொண்டு ஓடும்போது போலீஸ்காரில் அடிபட்டு ரெட்ரோகிராட் அம்னீசியாவில

0.1 சதவீத உண்மையைக் கண்டுபிடிக்க போராடும் குற்றவியல் வழக்குரைஞர்!

படம்
  99.9 கிரிமினல் லாயர் ஜே டிராமா  இருபது எபிசோடுகள் - இரண்டு சீசன்கள் குற்றவழக்குகளில் உள்ள உண்மையை கண்டுபிடித்து அரசு தரப்பை அடித்து நொறுக்கு கிரிமினல் வழக்குரைஞரின் கதை. மொத்தம் இருபது எபிசோடுகள். இரு சீசன்களையும் சேர்த்து... ஜப்பானில் கிரிமினல் வழக்குகளில் பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டு விடுகிறது. தப்பிக்கும் ஆட்களின் சதவீதமே 0.1தான். இதைத்தான் வழக்குரைஞர் மியாமா சவாலாக எடுத்துக்கொண்டு சாதிக்கிறார். போலியாக சாட்சிகளை தயாரித்து சரிவர விசாரிக்காமல் குற்றவாளிகளாக்கி தண்டிக்கும் நீதித்துறைக்கு எதிராக தனியாக நின்று போராடுகிறார். இந்த போரில் மெல்ல மதார்மா நிறுவனத்தையே ஈடுபடுத்துகிறார்.  மதார்மா நிறுவன தலைவருக்கும், மியாமாவுக்கும் பழைய தொடர்பு ஒன்று இருக்கிறது. அது என்னவென்று இருவரும் ஒருகட்டத்தில் அறிகிறார்கள். ஆனால் அதை வெளிப்படையாக கூறுவதேயில்லை. மதார்மா நிறுவன தலைவரே நேரடியாக மியாமாவை தனது நிறுவனத்தில் சேர சொல்லுகிறார். சம்பளமும் கூட அதிகமாக பேசுகிறார். அன்றைய சூழலில் மியாமா வழக்கில் வென்றாலும் சம்பளம் என்பது குறைவாகத்தான் கிடைக்கிறது. அதில்தான் அவரும், உதவி

பொய் சொல்லி இளம்பெண்ணின் வீட்டுக்குள் நுழையும் பொறியாளன், எதிரியை அன்பால் வெல்லும் கதை! - பர்சனல் டேஸ்ட் 2010

படம்
        பர்சனல் டேஸ்ட்  கொரிய தொடர் தொடரை இலவசமாக யூட்யூபில் பார்க்கலாம்.  எழுத்து  கிம் ஹி ஜூ இயக்கம் சன் ஹியூங் சுக், நோ ஜாங் சான்  கொரிய சூப்பர் ஸ்டார் லீ மின் ஹோ நடித்திருக்கிறார். தொடரில் முக்கியமான கதை,  லின் ஹோவின் எம் கட்டுமான நிறுவனத்திற்கும், மிராயே நிறுவனத்திற்கும் நடக்கும் தொழில்போட்டிதான் . லீ மின்ஹோவின் தந்தை மிராயேவில் வேலை செய்தாலும் கூட அவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்கியிருந்த வீடு கூட துரோகம் செய்த நண்பரால் கைப்பற்றப்படுகிறது. அப்படி துரோகம் செய்தவர்தான் மிராயே கட்டுமான உரிமையாளர். அவரை பழிவாங்கவேண்டும் என துடிப்பாக இயங்கும் லின் ஹோவுக்கு சரியான வாய்ப்பாக டேம் ஆர்ட் கேலரி திட்டம் வருகிறது. அதில்  போட்டியிடுகிறார்.  அந்த நிறுவனத்தினர் சாஞ்ஜோ எனும் கட்டுமான அமைப்பின் படி கட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் என்ற ரகசிய செய்தி லின் ஹோவிற்கு கிடைக்கிறது. அந்த அமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பேராசிரியர் பார்க் என்ற கட்டுமானக் கலைஞரின் வீட்டுக்கு சென்று ப்ளூபிரிண்டுகளை பார்க்க வேண்டும். ஆனால் அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். கொரியாவில் அவரது