இடுகைகள்

டிரம்ப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு வழிவகுத்த பார்லர் சமூகவலைத்தள சேவை! - பின்னணியில் வலதுசாரி முதலீட்டாளர்

படம்
                அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை வலதுசாரி டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர் . இதன் காரணமாக உலக நாடுகளில் அமெரிக்கா இனி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது . இத்தனைக்கும் அங்கு பாதுகாப்பு இருந்ததா என்று கேட்குமளவுக்கு போராட்டக்கார ர்களை காவல்துறை எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தது . இதையொட்டி நடந்த வன்முறை சம்பவங்களுக்கு டிரம்ப் பேசிய பேச்சுகள் முக்கிய காரணம் . அதேபோல வலதுசாரி , கலக , துவேஷ கருத்துகளை பரப்பும் பார்லர் எனும் சமூக வலைத்தளம் தற்போ ஆப்பிள் , கூகுள் , அமேசான் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது . பார்லர் எனும் சேவை டிவிட்டர் போன்ற மைக்ரோபிளாக்கிங் போன்றதுதான் . இதிலும் உங்களுக்கு பிடித்தவரைப் பின்தொடரலாம் . கருத்துகளை பகிரலாம் . ஆனால் எந்த கருத்துகளையும் பார்லர் பயனருக்கு பரிந்துரைக்காது . எந்த பயனர் தொடர்பான தகவல்களையும் பகிரமாட்டோம் என்று பார்லர் கூறியுள்ளதால் , இதன் பதிவுகளை வேறு எந்த சமூகவலைத்தளத்திலும் பகிர முடியாது . ஆனால் பிற சமூக வலைத்தள பதிவுகளை ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்து பயனர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள் . அமெரிக்காவில் 8 மில்ல

அமெரிக்காவிலுள்ள கட்சிகளின் சின்னம், நிறம், தேர்தல் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்!

படம்
              தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்! ஊடகங்களில் அமெரிக்க தேர்தலை பார்க்கும்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் ஜனநாயக கட்சிக்கு கழுதையும், குடியரசு கட்சிக்கு யானையும் சின்னமென. எப்படி இவை அமலுக்கு வந்தன? இவற்றை  கார்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் என்பவர் ஊடகங்களில் அதிகளவு பிரபலப்படுத்தினார். தேர்தலுக்கான சின்னமாக குடியரசுக் கட்சிக்குயானை ஒதுக்கப்பட்டது. அதுபோலத்தான் ஜனநாயக கட்சிக்கு கழுதை. இவற்றை அரசியல் காலத்தில் கார்டூனிஸ்டுகள் அதிகளவு படங்களை வரைந்து பிரபலப்படுத்தினர். நேற்று கூட டெக்கன் கிரானிக்கலில் கழுதை டிரம்பை எட்டி உதைத்துவிட்டு செல்வதாக நடுப்பக்க கார்ட்டூனை வரைந்திருந்தனர். ஜனநாயக கட்சிக்கு நீலம் சிவப்பு என்பதை ஊடகங்களே உருவாக்கின. குடியரசு கட்சியை சேர்ந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் - ஜனநாயக கட்சியின் அல்கோர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டபோது, ஊடகங்கள் இரு நிறங்களை இரு கட்சிகளுக்குமாக அடையாளப்படுத்தின. அன்று தொட்ங்கி இன்றுவரை அந்த வழக்கம் அப்படியே தொடர்கிறது. அமெரிக்க அரசு சட்டப்படி அங்கு ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்கமுடியும். அந்த வகையில் பிராங்களின் ரூஸ்வெல்ட் மட்டுமே

ஜோபைடன் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்ன?

படம்
              அமெரிக்க தேர்தலை முழு உலகமே உன்னிப்பாக கவனித்து வந்தது. காரணம், வல்லரசு நாடு என்பதும் ராணுவ பலம் பொருந்தியதும் என்பதுதான். அதையும் தாண்டி இனவெறியை அதிகரித்து அதிபர் டிரம்ப் செய்த செயல்களை அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்நாட்டை எதிர்க்கும் நாடுகள் கூட ரசிக்கவில்லை. டிரம்ப் தனது ஆட்சிகாலத்தில் செய்த உபகாரம், பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகைதான். பொருளாதாரம் பெரியளவு சிக்கலை சந்திக்கவில்லை. ஆனால் மற்ற அனைத்து விஷயங்களிலும் அமெரிக்கா தனது இடத்தை இழந்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பிய விவகாரம், பிற நாடுகளுடனான உறவு, பாரிஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகியது, பொருளாதார போர் ஏற்படும்படியான பல்வேறு தடைகளை பிற நாடுகளுக்கு விதித்தது. மேலும் இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட பிற நாட்டினரால் பெற்ற பயன்களை மறந்து அவர்களுக்கு விசா கெடுபிடிகளை இறுக்கியது என ஏகத்துக்கும் அமெரிக்கா கண்டனங்களை சந்தித்து வந்தது. மேலும் இனவெறியாக நடந்துகொண்டதால் உள்நாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் போராட்டங்களையும் காவல்துறை சந்திக்கவேண்டியிருந்தது. இப்போது டிரம்ப் தான் செய்த அனைத்து விஷயங்களுக்கு

கமலா ஹாரிஸ் மூலம் இந்தியர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்! - மஜூ வர்க்கீஸ், ஜோபிடன் தேர்தல் பிரசார அதிகாரி

படம்
          மஜூ வர்கீஸ் ஜோ பைடன் அரசியல் கூட்டத்திற்கான செயல்பாட்டு அதிகாரி நீங்கள் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உடன் தேர்தல் பிரசாரத்தில் முதல் நாள் தொடங்கி கூடவே இருக்கிறீர்கள்? பிப்ரவரி 2020 அன்று நாங்கள் ஐயோவா, நியூ ஹாம்ஸையர், அலபாமா ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தினோம். மிக கடினமான நாட்கள் அவை. மெல்ல நாங்கள் இதில் தேர்ந்து வருகிறோம். எங்களிடம் மிகச்சிறிய குழு உள்ளது. குறைவான வளங்கள்தான் உள்ளது. நாங்கள் பராக் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளோம். ஜோவின் அனுபவங்கள், பிறருக்காக யோசித்து செயல்படும் தன்மை ஆகியவை முக்கியமாக என்னை ஈர்த்தவை. கோவிட் -19 நோய்த்தொற்றால் இறந்தவர்களுக்கு நாம் இரங்குதலை செலுத்த வேண்டும். இந்திய அமெரிக்கராக செனட்டர் கமலா ஹாரிசை துணை அதிபராக நீங்கள் நிறுத்தியுள்ளீர்கள். இந்த தேர்வு சரியா? அது முக்கியமானதுதான். எங்களுக்கு ஏராளமான இமெயில்கள், போன் அழைப்புகள் இதுதொடர்பாக வந்துள்ளன.  இந்தியர்கள் கமலா ஹாரிசுடன் தங்களை இணைத்துக்கொள்வது எளிதானது. அவர் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படம், இந்தியர்களின் வாழ்க்கையை உணர்த்துகிறது. அரசில் இந்தியர்கள் மருத்துவர்களாகவோ, பொறிய

டிக்டாக்கிற்கு மாற்றாக பிரபலமாகி வரும் ட்ரில்லர் !

படம்
            டிக்டாக்கிற்கு மாற்றாக ட்ரில்லர் ! அமெரிக்கா , இந்தியா ஆகிய நாடுகளின் தடைக்கும் பிறகு உலகம் முழுக்க வேகமாக பரவும் அதேபோன்ற ஆப்தான் ட்ரில்லர் . இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட இணைந்துள்ளார் . இந்த ஆப்பும் டிக்டாக் போலவேதான் . இதில் இணைபவர்கள் தங்களுக்கு பிடித்த பாடலைப் போட்டு டான்ஸ் ஆடி பகிரவேண்டியதுதான் . இதில் தங்களுக்குப் பிடித்தவர்கள் ரசித்து லைக் போட்டு பின்தொடர்பவர்கள் அப்படியே தொடரலாம் . 2015 ஆம் ஆண்டு ட்ரில்லர் ஆப் உருவாக்கப்பட்டுவிட்டது . ஆனால் பிரபலமானது , டிக்டாக் தடைக்கும் பிறகான ஓராண்டில்தான் . டிக்டாக் பயனர்கள் எல்லாருமே அப்படியே ஸ்பேர் பஸ்சுக்கு மாறுவது போல இந்த ஆப்புக்கு தாவி ஏறிவிட்டார்கள் . இன்றுவரை உலகம் முழுக்க 120 மில்லியன் (1 மில்லியன் - பத்து லட்சம் ) பேர் இதனை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள் . 27 மில்லியன் மக்கள் இந்த ஆப்பை தினசரி பயன்படுத்துகிறார்கள் . டிக்டாக்கில் புகழ்பெற்ற பிரபலங்களான ஜோஸ் ரிச்சர்ட்ஸ் , சார்லி டிஅமெல்லோ , ஜஸ்டின் பைபர் , டைனமோ , ரீடா ஓரா ஆகியோர் பிற பயனர்ளள் ட்ரில்லரைப் பயன்படுத்த தூண்டுகிறார்கள் .

2020இல் நீங்கள் கேட்கவேண்டிய கேள்விகள்!

படம்
giphy 2020ஆம் ஆண்டு  நீங்கள் கேட்கவேண்டிய கேள்விகள்! இந்த ஆண்டு ட்ரோன் டெலிவரி செயல்படுமா? ஆப்பிரிக்காவில் ரத்தப்பைகளை எடுத்துச்செல்ல ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. எனவே இந்த ஆண்டு அரசின் அனுமதி பெற்று ட்ரோன் சேவைகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கலாம். அரசியல் விளம்பரங்கள், போலிச்செய்திகள் தடுக்கப்பட வாய்ப்பு உள்ளதா? இதை மார்க் ஸூக்கர்பெர்க்தான் சொல்லவேண்டும். ஃபேஸ்புக் எங்கெங்கு வளர்கிறதோ அங்கெல்லாம் உள்நாட்டு கலகம், புரட்சி, போராட்டம் என வளர்க்கப்பட்டு நாட்டின் அரசியல் நிலைமை படுமோசமாகி வருகிறது. இதற்கு காரணம், ஃபேஸ்புக் நாட்டை ஆளும் சர்வாதிகார கட்சிகளுடன் சூயிங்கம்மும் வாயும் போல இணைந்து செயல்படுகிறது. இதன்காரணமாக, நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு பாசிச தன்மை வளர்ந்து வருகிறது. இதை நாமே தீர்க்கலாம். எப்படி என்றால் ஃபேஸ்புக் கணக்கை கைவிடுவதன் மூலம். ட்விட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு இடமில்லை என்று கூறிவிட்டனர். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்வி உள்ளது. நன்றி - வெப்