அமெரிக்காவிலுள்ள கட்சிகளின் சின்னம், நிறம், தேர்தல் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்!
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!
ஊடகங்களில் அமெரிக்க தேர்தலை பார்க்கும்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் ஜனநாயக கட்சிக்கு கழுதையும், குடியரசு கட்சிக்கு யானையும் சின்னமென. எப்படி இவை அமலுக்கு வந்தன? இவற்றை கார்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் என்பவர் ஊடகங்களில் அதிகளவு பிரபலப்படுத்தினார். தேர்தலுக்கான சின்னமாக குடியரசுக் கட்சிக்குயானை ஒதுக்கப்பட்டது. அதுபோலத்தான் ஜனநாயக கட்சிக்கு கழுதை. இவற்றை அரசியல் காலத்தில் கார்டூனிஸ்டுகள் அதிகளவு படங்களை வரைந்து பிரபலப்படுத்தினர். நேற்று கூட டெக்கன் கிரானிக்கலில் கழுதை டிரம்பை எட்டி உதைத்துவிட்டு செல்வதாக நடுப்பக்க கார்ட்டூனை வரைந்திருந்தனர்.
ஜனநாயக கட்சிக்கு நீலம் சிவப்பு என்பதை ஊடகங்களே உருவாக்கின. குடியரசு கட்சியை சேர்ந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் - ஜனநாயக கட்சியின் அல்கோர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டபோது, ஊடகங்கள் இரு நிறங்களை இரு கட்சிகளுக்குமாக அடையாளப்படுத்தின. அன்று தொட்ங்கி இன்றுவரை அந்த வழக்கம் அப்படியே தொடர்கிறது.
அமெரிக்க அரசு சட்டப்படி அங்கு ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்கமுடியும். அந்த வகையில் பிராங்களின் ரூஸ்வெல்ட் மட்டுமே நான்கு முறை அதிபராக இருந்துள்ளார். அவரது இரண்டாவது முறை தனது பதவியை வகித்து முடிவுக்கு வந்தபோது, உலகப்போர் 2 தொடங்கிவிட்டது. அதில் அவர் எடுத்த முடிவுகள் வெற்றியைக் கொடுக்க உடனே மூன்றாவது முறையும் அதிபராக உட்கார்ந்து ஆட்சி செய்யத் தொடங்கினார். நான்காவது முறையாக அதிபர் தேர்தலில் வென்ற பிறகு 1945இல்தான் அவர் மரணம் அடைந்தார். அதன்பிறகு ஒரு நபர் இருமுறை மட்டுமே அதிபராக முடியும் என சட்டத்திருத்தம் வலுவாக்கப்பட்டது.
வயதான அதிபர் என்ற பெருமையை ஜோ பைடன் பெறுகிறார். 77 வயதில் அமெரிக்க அதிபராகிறார். இதற்கு முன்னர் ரொனால்ட் ரீகன் 73 வயதில் இரண்டாம் முறை அதிபராக தேர்தலில் வென்றுள்ளார். முன்னாள் அதிபர் டிரம்ப் கூட 70 வயதில் 2016ஆம் ஆண்டு தேர்தலில் வென்றார்.
இதுவரை 14 துணை அதிபர்கள் அதிபராக தேர்தலில் வென்று சாதித்துள்ளனர். அமெரிக்க தேர்தல் சரித்திரத்தில் எந்த பெண் துணை அதிபரும் வென்றதில்லை. பெண் அதிபரும் அங்கு உருவானது இல்லை. நிக்சன் மட்டுமே இருமுறை துணை அதிபராகவும், அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனைக்கு உரியவர்.
டைம்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக