மரபணுமாற்று செடிகளுக்கான ஆய்வு விரைவில் தொடங்கவிருக்கின்றன! ஏன்? எப்படி?எதற்கு ?
வேகமெடுக்கும் மரபணுமாற்று ஆய்வுகள்!
விரைவில் மரபணுமாற்று காய்கறிகளுக்கான கள ஆய்வுகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கின்றன.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பீஜ் ஷீட்டல் ஆராய்ச்சி நிறுவனம் ஜனக், பிஎஸ்எஸ் 793 என்ற இரு மரபணுமாற்ற கத்தரி விதைகளை சோதித்துப் பார்க்க அனுமதி கோரியிருந்தது. இக்கோரிக்கையை ஆராய்ந்த மரபணுமாற்ற கமிட்டி(GEAC), அனுமதி வழங்கிவிட்டது. விரைவில் தமிழ்நாடு, பீகார், ஒடிஷா, மேற்குவங்கம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மரபணுமாற்ற ஆராய்ச்சி நிறுவனம் சோதனைகளைத் தொடங்கவுள்ளது.
இந்திய விதைகள் ஃபெடரேஷன் அமைப்பின் தலைவர் ராம் கௌன்டின்யா, அரசின் முடிவை வரவேற்றுள்ளார். ’'இந்திய விவசாய அமைப்பு, மரபணுமாற்ற தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. இந்திய நிறுவனமான பீஜ் ஷீட்டல் நிறுவனம் சோதனைகளை நடத்துவதற்கான முயற்சிகளில் உள்ளது. சுயசார்பு இந்தியாவுக்கு பொருத்தமான முடிவு'’ என உற்சாகமாக பேசினார் ராம் கௌன்டின்யா. மத்திய அரசு முடிவு செய்தாலும் மாநில அரசுகள் மரபணுமாற்ற பயிர் சோதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தால், சோதனைகள் நடைபெறாது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், 2009ஆம் ஆண்டு அங்கு நடத்த திட்டமிட்ட மரபணுமாற்ற கத்தரி செடிக்கு கூட அவர் ஆட்சேபம் தெரிவித்தார். அவை ஆபத்தானவை, விவசாயிகள் அதனை தவிர்க்கவேண்டும் என்று கூறினார்.
கர்நாடகத்தில் பாஜக அரசு ஆள்கிறது. இதன் கலாசார பண்பாட்டு தலைமை அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸின் விவசாய அமைப்பு ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச், மரபணுமாற்ற விதைகளுக்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதேபோன்ற நிலைதான். ஜார்க்கண்டிலும், மத்தியப்பிரதேசத்திலும் நிலவுகிறது.
கத்திரி மற்றும் பழங்களில் துளைப்பான் புழு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியபோது, பூச்சிக்கொல்லிகளால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது மரபணுமாற்று பயிர்கள் அனுமதிக்கப்ட்டன. ஆனால் பிறகு அம்முயற்சி தடை செய்யப்பட்டுவிட்டது. 2013ஆம் ஆண்டு மான்சான்டோ நிறுவனம் மரபணுமாற்ற கத்திரியை வங்கதேசத்தில் பயிரிட்டது. அதில் விளைபொருள் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்த ஆய்வு பற்றி மத்திய விவசாயத்துறை அமைச்சகம், வங்கதேச அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி விவரங்களை கேட்டுள்ளது. இதன்மூலம் பீஜ் ஷீட்டல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மரபணுமாற்ற பயிர்களை விளைவிக்க அனுமதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
தகவல்
FE
கருத்துகள்
கருத்துரையிடுக