பரஸ்பரம் விட்டுக்கொடுப்பதும், ஏற்றுக்கொள்வதும்தான் காதல்! - மா விந்த கதா வினுமா - தெலுங்கு
Written by Siddhu Jonnalagadda,
Music by | Joy Sricharan Pakala Rohit |
---|---|
Cinematography | Saiprakash Ummadisingu |
Directed byAditya Mandala
மா விந்த கதை வினுமா
கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலாவிற்கு பிறகு ஆதித்யா மண்டேலாவுடன் அடுத்த கதைக்கு வந்துவிட்டார் சித்து.
படத்திலும் சித்தார்த்தான் பெயர். அதனால் சித்து என்றே பெயர்.
முதல் காட்சியில் லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் தங்கியுள்ள வினீதாவை பார்க்க முயல்கிறார். நடக்கும் தகராறில் சித்துவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார். அங்கு சென்று, தன்னுடைய கதையை இன்ஸ்பெக்டருக்கு சொல்ல படம் தொடங்குகிறது.
போட்டோஷூட்டுக்கான பிளான் |
பொறியியல் கல்லூரியில் ஜாலியாக படிக்கும் மாணவர் சித்து. முதல்நாளில் சீனியர்கள் ராக்கிங் செய்யும்போது வினிதா என்ற பெண்ணை வைத்து காதல் கல்யாணம் செய்துகொள்வது போல நடிக்க சொல்கிறார்கள். அப்போதிலிருந்து சித்துவுக்கு வினிதா மீது காதல் பேய் மழையாக கொட்டுகிறது. ஆனால் அதனை சொல்ல மூன்று ஆண்டு தேவைப்படுகிறது. அப்படியும் சென்று காதலை சொல்லிவிடுகிறார். அதற்குப் பிறகு அவர் காதலுக்கு வினிதா ஒகே சொன்னாரா, ஜாலியாக திரியும் சித்து அக்காதல் உறவை சீரியசாக எடுத்துக்கொண்டாரா என்பதுதான் மீதிக்கதை.
சித்துவின் கதை அவரின் அவரின் எழுத்துக்கு ஏற்ப படு ஜாலியாகவே நகர்கிறது.
தணிகெலா பரணி போலீஸ் இன்ஸ்பெக்டராக அசத்தியிருக்கிறார். பல்வேறு சந்திப்புகளில் சித்துவின் கதையை கேட்க கேட்க கதை பல்வேறு கட்டங்களில் அப்படியே தொடர்கிறது.
இம்முறை சித்து ஜோகல்கட்டா சமூக வலைத்தளங்கள், வீடியோ வெளியீடு ஆகியவற்றை முக்கியமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். திருமணம் செய்வதை ஜாலியாக நண்பர்களுடன் செய்துகொள்வது எப்படி வீடியோவாக மாறும்போது விபரீதமாக மாறுகிறது என்பதுதான் மையக்கதை. இதனால் சித்து, வினிதா குடும்பத்தில் நடக்கவிருந்த கல்யாணமே நின்றுபோக, சித்து வினிதாவும் பிரிகின்றனர். இவர்கள் எப்படி ஒன்றாக சேர்ந்தார்கள் என்பதுதான் முக்கியமான திருப்புமுனை.
காதலிக்கவா காலேஜ் வர்ற? |
படம் ஏடாகூடமான சில விஷயங்கள், வசனங்கள் உண்டு என்பதால் 18 பிளஸ் ஆட்கள் மட்டும் பார்ப்பதுதான் ஏற்றது.
ஒருவர் மீது கொண்டுள்ள காதல் ஒருவரை எந்தளவு பாதிக்கிறது என்பதுதான் படத்தின் லைன். பரஸ்பரம் மரியாதையும், உறவுகளுக்குள் விட்டுக்கொடுப்பதும் எவ்வவு முக்கியம் என்பதை
காதல் முடிவதில்லை.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக