இஸ்லாமிய நாடாக மாற்றப்பட சிரியா நாடு சிதைக்கப்படுகிறது! - சமர் யாஸ்பெக்கின் நூல்

 

 

 

 

பயணம்: சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி... | Buy Tamil & English Books ...

 

 

 

 

பயணம் சிரியாவின்  சிதைந்த இதயத்தை நோக்கி


சமர் யாஸ்பெக்

தமிழில் ஶ்ரீதர் ரங்கராஜ்


சிரியா நாட்டிற்குள் மூன்றுமுறை சென்று வந்த பத்திரிகையாளரும் சிரிய நாட்டவருமான சமர் யாஸ்பெக் என்ற பெண்மணியின் களப்பணி அனுபவங்கள்தான் நூலாகியிருக்கிறது.



சிரியாவில் எப்படி ஜனநாயக ஆட்சி மலராமல் இஸ்லாமிய குழுக்கள் பார்த்துக்கொள்கின்றன, உலக நாடுகள் போரை எப்படி ஊக்குவிக்கின்றன, இதனால் அங்கு அழியும் சுன்னி - ஷியா மக்களின் வாழ்க்கை, அரசுப்படைகளின் தீவிரமான வன்முறை என பல்வேறு விஷயங்களை நெஞ்சை உருக்கும் எழுத்துக்களின் வழியாக பேசுகிறார் எழுத்தாளர்.


ஐஎஸ்ஐஎஸ் குழுக்கள், நூஸ்ரா முன்னணி, அல்ஹார் என பல்வேறு மதவாத குழுக்கள் கூட்டணி அமைத்து வெளிநாட்டு வீரர்களை உள்ளே கொண்டு வந்து சுதந்திர குடியரசு படைகளைக் கொன்று அரசு படைகளோடு உள்நோக்கத்தோடு போராடுவதும், வென்ற பகுதிகளில் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள், அலாவித்துகளை அடித்து விரட்டுவதுமான காட்சிகள் திகிலை ஏற்படுத்துவன.


மதவாத அமைப்புகள் எப்படி அறக்கட்டளை வழியாக மக்களின் வாழ்க்கைக்குள் புகுந்து அவர்களை கட்டாய இஸ்லாமிய சட்டத்திற்குள் வந்து அவர்களின் வாழ்க்கையை மத அரசியலுக்குள் கொண்டுவர திட்டமிடுகின்றன என்பதை இதிலுள்ள மத அமைப்பின் எமீர் நேர்காணல் மூலம் அறியலாம்.


நூல் முழுக்க கட்டிட இடிபாடு, பீப்பாய் குண்டு, மிக் விமானங்கள், ஸ்னைப்பர் துப்பாக்கி, சோதனைச் சாவடி, சுதந்திர குடியரசு வீரர்கள், கொள்ளைக்காரர்கள், பல்வேற பொருட்களை விற்கும் சிறுவர்கள், நோன்பு, நோன்பு நேரத்தில் வீசப்படும் குண்டுகள், எறிகணைகள் என போர்க்கள சூழலை எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் எழுத்தாளர்.


சிரியா என்ற நாடு எப்படி பஷார் அல் அஸாட் என்ற தலைவர் மூலம் வரலாற்றில் நினைத்துப் பார்க்கமுடியாத சிதைவை சந்திக்கிறது என்பதை தனது பல்வேறு பயணங்கள் மூலம் சமர் யாஸ்பெக் சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறார். பெண்கள் சிறுவயதில் முதியவர்களுக்கு திருமணம் செய்யப்படுவது, போராடுவதற்கென்றே வருடம் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வது என பெண்களின் நிலைமை அங்கு படுமோசமாக இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சிரியாவைப் பற்றி அறிவதற்கான சரியான நூல் இதுவே.


கோமாளிமேடை டீம்






கருத்துகள்