வலியை உணரமுடியாத மரபணு கொண்ட மருத்துவர் பிறரின் வலியை தீர்க்க நினைக்கிறார், சாதிக்க முடிந்ததா? - டாக்டர் ஜான் - கொரிய டிவி தொடர்
டாக்டர் ஜான்
கொரிய டிவி தொடர்
16 அத்தியாயங்கள்
it is based on the Japanese novel On Hand of God by Yo Kusakabe and aired on SBS from July 19 to September 7, 2019.
வலியை உணர முடியாத மருத்துவர், பெரிய மருத்துவமனையில் வலிநிவாரண மையத்தின் இன்சார்ஜாக இருக்க முடியுமா? என்பதுதான் டாக்டர் ஜான் தொடரின் மையக்கதை
கதை, சிறைச்சாலையில் தொடங்குகிறது. கைதி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு பிரச்னையை சரி செய்ய போலீஸ் கேட்க, மருத்துவர் என்ன செய்வது என்று தெரியாமல் பதறி ஓடுகிறார். அப்போது அங்கு அறையை சுத்தம் செய்ய வரும் 6328 என்ற கைதி, அந்த நோயாளிக்கு முதலுதவி செய்து பிழைக்க வைக்கிறார்.
அவசர கால உதவி என்றால் உதவி செய்யும் அந்த் கைதி தான் யார் என்பதை அங்குள்ள யாருக்கும் கூறுவதில்லை. அங்கு பயிற்சி மருத்து
prison scene |
வராக வரும் காங் ஷிக்கும் அந்த கைதி ஒருவரைக் காப்பாற்ற உதவுகிறார். நோய்க்கு எப்படி சிகிச்சை செய்யவேண்டுமென கூறுகிறார். குணப்படுத்தமுடியாத பேப்ரி நோய் என்ற அரிய நோய் பற்றி கூற, இதன் காரணமாக காங் ஷி என்ற அந்த பெண்ணுக்கு அந்தக் கைதி மீது ஆர்வம் பிறக்கிறது. அந்த கைதி என்ன காரணத்திற்காக அங்கு வந்தார் என்பதை தெரிந்துகொள்கிறாள். அதேபோல அவளும் கடந்த கால நிகழ்ச்சி ஒன்றில் சரியாக செயல்படாத காரணத்தால் தன் படிப்பை கைவிட்டு வெளிநாட்டுக்கு செல்ல நினைக்கிறாள்.
ஆனால் சிறைக்கைதி அப்படி தப்பிச்சென்று என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறாய் என்று கேள்வி கேட்பதோடு, உன்னால் உயிரைக் காப்பாற்ற முடியும் என நம்பிக்கை கொடுக்க காங் ஷி ஹான் சன் மெடிக்கல் சென்டர் எனும் மருத்துவமனையில் அனஸ்தீசியா துறையில் மீண்டும் ரெசிடன்டாக சேருகிறாள். அங்கு அவளது துறைக்கு இன்சார்ஜாக சிறையில் சந்தித்த கைதி டாக்டர் சா யோ ஹான் அங்கு பொறுப்பேற்கிறார்.
அந்த மருத்துவமனையில் அவர்களது வலி நிவாரணப்பிரிவு பிரபலம்
இல்லாமல் நோயாளிகளே வராமல் இருக்கிறது. அதனை எப்படி டாக்டர் சா யோ ஹான் மாற்றினார், அதிகம் பேசாமல் வேலை செய்து வரும் டாக்டர் சாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது, அவரை விரும்பத்தொடங்கும் காங் ஷி, அதனை அவரிடம் சொன்னாளா? டாக்டர் சாவை அங்கிருந்து வெளியேற்ற மூத்த மருத்துவர்கள் நினைக்கிறார்கள். அவர்களது எண்ணம் நிறைவேறியதா என்பதை தொடர் முழுமையாக கூறுகிறது.
கொரிய தொடர் என்றால் மிதமிஞ்சிய காதல் மட்டும் இருக்கும் என பலர் நினைக்கலாம். இந்த படத்தில் காதல் என்பது மிகச்சிறிய பகுதிதான். அதனையும் மிஞ்சும்படி வலிநிவாரண சிகிச்சை என்பது எப்படி, அதனை மருத்துவர்கள் எப்படி வழங்குகிறார்கள் என்பதை ஆழமாக மருந்துகளின் பெயர்கள், சிகிச்சைகள் என விரிவாக சொல்லியிருக்கிறார்கள். அதோடு முக்கியமான பிரச்னையான கருணைக்கொலை என்பதையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.
புற்றுநோயில் சிக்கியவர்களுக்கு செய்யும் வலியைக் குறைக்கும் சிகிச்சைய இறுதியில் சா செய்கிறார். இதில் பணம் என்பதைவிட வலி குறைந்து அவர்கள் நன்றி கூறுவதையே தனது வெற்றியாக நினைக்கிறார். இதனால்தான் அவரை கொலைகாரன் என்று வெறுக்கும் அவரது ரெசிடெணெட் மாணவர்கள் கூட எங்கள் குரு,எங்கள் டாக்டர் என மனம் உருகி அவரை பாராட்டுகிறார்கள். பாசம் காட்டுகிறார்கள். மருத்துவம் சார்ந்த டிவிதொடர்தான். இத்தனை நெகிழ்ச்சியாக எடுக்க முடியுமா என்று யோசிக்க வைக்கிறார்கள். கதை, திரைக்கதை, கதையின் பின்னணி என அனைத்துமே நேர்த்தியாக உள்ளது.
முன்னணி நடிகர், நடிகையர் என அனைவருமே நடிப்பில் நெகிழ வைத்துள்ளார்கள்.
sucide scene |
இதில் வரும் வழக்குரைஞர் பாத்திரம் முதலில் நெகடிவானது போல தோன்றினாலும் இறுதி வரை நீதியின் பக்கமே நின்று வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோய் வலியைத் தாங்கிய படி வாழும் பாத்திரம் அசாதாரணமானது. தொடரில் நாயகன், அவரை எதிர்க்கும் வழக்குரைஞர், நாயகனுக்கு உதவி அவனை கருணைக்கொலை மருந்து விற்பனைக்கு பயன்படுத்திக்கொள்ள முயலும் வழக்குரைஞர் நண்பன் என பலருக்கும் தீர்க்க முடியாத நோய் உள்ளது. ஆனால் அவர்கள் அதனை எந்த இடத்திலும் வெளிப்படுத்தாமல் வலியை மென்று விழுங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே வாழ்க்கையை கடப்பது இறுதியில்தான் பார்வையாளர்களுக்கு தெரிய வருகிறது.
வலி எனும் உடல்மொழியை எப்படி கையாள்வது என்பதை இத்தொடரை பார்க்கும் பார்வையாளர்கள் புரிந்துகொள்ளமுடியும். இதில் நாயகனுக்கு ஹீரோயிச பில்டப்பெல்லாம் கிடையாது. அவர் தனது தீர்க்கமுடியாத நோயை பிறரது வலியைத் தீர்த்து எப்படி சந்தோஷம் கொள்கிறார் என்பதைத்தான் காட்டியிருக்கிறார்கள்.
பிறரின் வலியை புரிந்துகொண்டு அதனை உணர்வது உதவி செய்வதை விட சந்தோஷம் ஏதுமில்லை என்பதை வலுவான காட்சிகள் அற்புதமான வசனங்களோடு டாக்டர் ஜான் தொடர் நமக்கு காட்சிபடுத்துகிறது.
வலியில்லாவிட்டால் வாழ்க்கை ஏது?
கோமாளிமேடை டீம்
thanks Mxplayer
கருத்துகள்
கருத்துரையிடுக