பெமினா பெண் சாதனையாளர்கள்! - விவசாயம் மற்றும் சினிமாவில் சாதித்த இரு பெண்கள்

 

 

Why Should Men Direct All The Films? - A Tribute to the ...
MY STARTUP IDEA: DesivDesi and CreditVidya founders on ...
நிதி பான்ட்

 

 

நிதி பான்ட்

கண்டுபிடிப்பாளர்

விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பதற்கு இவர் சயின்ஸ் ஃபார் சொசைட்டி என்ற அமைப்பை கடந்த ஆண்டு உருவாக்கினார். இதற்கான எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் கண்டுபிடிப்பாளர் விருதை வாங்கினார். உத்தர்காண்ட் மாநிலத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தார். விவசாயத்தில் எவ்வளவு சிரம்ப்பட்டு  பெற்றோர் சம்பாதிக்கின்றனர் என்பதைப் பார்த்து நிறுவனம் தொடங்க நினைத்துள்ளார். நிலத்தின் தன்மை, காலமாறுதல்கள் விளைபொருட்களை வீணாக்குவதை கண்ணாரப் பார்த்தார். இதனால் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பதற்கான வசதிகளை உருவாக்கியுள்ளார்.


ஜோயா அக்தர்

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரின் கல்லி பாய் இந்தி திரைப்படவுலகில் முக்கியமான படம். ராப் பாடகர்களைப் பற்றிய இந்த படம் 92ஆவது அகாடமி அவார்ட்ஸ் விழாவுக்கு தேர்வானது. லக் பை சான்ஸ் எனும் படம் மூலம் தனது திரைப்பட கணக்கை மும்பையில் தொடங்கினார்.

ஜிண்டகி நா மிலேகி டோபரா, டில் தடக்கனே டூ எனும் படம் என இவர் எடுத்த படங்கள் அனைத்துமே கான்செப்ட், கலர் என அனைத்திலும் வேறுபட்டவை. சமூக பிரச்னைகளையும் தனது படத்தில் பேசுவது ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது. வெப் தளத்தில் லஸ்ட் ஸ்டோரிஸ், மேட் இன் ஹெவன் ஆகிய படங்களை எடுத்துள்ளார். பேச முடியாத பல்வேறு விஷயங்களை வெப் தளத்தில் ஜோயா பேசுவார் என உறுதியாக சொல்லலாம்.
 

கருத்துகள்