இடுகைகள்

வெப்ப அலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் அதிகரிக்கும் காலநிலைமாற்ற பதற்றம் - கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வானிலை ஆப்கள்

படம்
  காலநிலை மாற்ற பதற்றம் கொரோனாவுக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. பலரும் வேலை என்பதை விட குடும்பம் முக்கியம் என மாறிவிட்டனர். சொந்த ஊருக்கு திரும்பி சென்று தெரிந்த வேலைகளைப் பார்க்கிறார்கள். அதைவிட முக்கியமாக எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்தில் வாழத் தொடங்கிவிட்டனர். அலுவலகத்தில் செய்து வந்த பணிகள் பெரும்பாலும் வீட்டில் இருந்தே செய்யுமாறு மாறிவிட்டன. பெருநிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்ப உத்தரவிட்டும் வேலை செய்தவர்கள் பணிக்கு திரும்பவில்லை. ஏராளமானோர் வேலையைக் கைவிட்டனர். இதெல்லாமே மனிதர்களின் பதற்றமான மனநிலையை அடையாளம் காட்டுவதுதான். பெருந்தொற்றுக்கு முன்பே வெப்ப அலை பிரச்னை இருந்தாலும் தற்போது அது தீவிரமாகிவருகிறது. அண்மையில் அமெரிக்காவின் டெக்ஸாஸில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தது. அங்கு வாழ்ந்தவர்கள் பீதியடைந்து, இங்கேயே இருக்கலாமா, வெப்பம் அதிகரித்தால் வேறு நகரங்களுக்கு போகலாமா என யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.   இவர்களின் உளவியல் பீதியை வானிலை ஆப்கள் மேலும் அதிகரித்தன. அமெரிக்கர்களில் 50 சதவீதம் பேர் வானிலை ஆப்களை பயன்ப

வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் வேளாண்மை!

படம்
  வெப்ப அலை தாக்குல்களால் பற்றாக்குறையாகும் உணவு தக்காளி விலை உயர்ந்தது பற்றி பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவசியமான கவலைதான். உலகம் முழுக்க வெப்ப அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், காய்கறி, பழங்கள், உணவுப்பயிர்கள் என அனைத்துமே மெல்ல அழிந்து வருகின்றன. சூரியனின் வெப்பம் காரணமாக, ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமான கடலும் வளம் குன்றி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் வெப்பஅலை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம், எதிர்கொண்டதிலேயே அதிக வெப்பநிலை கொண்டதாக மாறி   மக்களை வதைத்தது. இன்று சந்தை முழுக்க உலகமயம் ஆகிவிட்டது. ஒரு நாட்டில் காய்கறி விளையாதபோது இன்னொரு நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கலாம். இந்த கோணம் தவறு என்று கூறமுடியாது. ஆனால் இதன் இன்னொருபக்கம் இருக்கிறது. இதன்படி, காய்கறிகள் பழங்கள் சந்தையில் கிடைக்கும். ஆனால் அதிக விலை வைத்து விற்கப்படும். எனவே, அனைவராலும் வாங்க முடியாது.   இப்படியான சூழல் ஏற்கெனவே உருவாகிவிட்டது. 2018ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் வெப்ப அலை தாக்குதல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு விளைவித்த உணவு

இயற்கையான காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் காலநிலை மாற்ற பாதிப்பு!

படம்
  காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் வெப்ப அலைகள் உருவாகின்றன. இதன் விளைவாக, காற்றிலுள்ள ஈரப்பதம்,வெப்பமான காற்றால் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு தீவிரமாவது, வெள்ள பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. வெப்ப அலைகள் தொடர்ந்தால், நாட்டில் பஞ்சம் ஏற்படும். கடல் பரப்பில் ஏற்படும் அதிக வெப்பம் தீவிரமான புயல்களை, சூறாவளியை ஏற்படுத்துகிறது. இந்த புயல்களின் சராசரி வேகம் மணிக்கு 150க்கும் அதிகம்.   கடலில் ஈரப்பதம் மிக்க காற்று, சூடான காற்று ஆகியவற்றின் சுழற்சி காரணமாக புயல் உருவாகிறது. சூடான காற்று வளிமண்டலத்தில் உயரமாக மேலே சென்று பிறகு குளிர்ந்து குமோலோனிம்பஸ் என்ற மேகங்களாக உருவாகிறது. இந்த மேகம் மூலமே கனமழை பெய்கிறது. அமில மழை , பள்ளிப் பாடங்களிலேயே உண்டு. கரிம எரிபொருட்கள் நீரில் கரைந்து சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இப்படி வேதிப்பொருட்கள் மழையாக மண்ணில் பொழியும்போது மண்ணின் வளம் கெடுகிறது. நன்னீர் நிலைகள் கெடுகின்றன. மரங்கள் அழியத் தொடங்குகின்றன. மின் விளக்குகளின் வெளிச்சமும் மனிதர்களின் உயிரியல் கடிகாரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின்விளக்கு பத்தொன்

பஞ்சத்தை ஊக்குவிக்கும் வெப்ப அலை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  பஞ்சத்திற்கும் வெப்ப அலைக்கும் வேறுபாடு உண்டு! உண்மை. மழைப்பொழிவு குறைவால் ஏற்படும் அதீத உணவு, குடிநீர் தட்டுப்பாட்டை பஞ்சம் என்று கூறலாம்.இப்படி ஏற்படும் பஞ்சம் மாதங்கள், ஆண்டுகள் என நீடிக்கலாம். நாட்டின் பல்வேறு இடங்களில் கூடுதலான அளவில் வெப்பநிலை நிலவுவது, வெப்ப அலை ஆகும். வெப்பஅலை பாதிப்பு, பஞ்சத்தையும் காட்டுத்தீயையும் ஊக்குவிக்கிறது. பஞ்சம், வெப்ப அலை என  இரண்டாலும் மக்களின் இறப்பு கூடும், பயிர் விளைச்சல் பாதிக்கப்படும்.  நிலவு அழிந்தால் பூமி பாதிக்கப்படும்! உண்மை. நிலவின் ஈர்ப்புவிசையால் தான் கடல் அலைகள் உருவாகின்றன என்பது அறிவியல் உண்மை. நிலவு இல்லாத சூழலில், உலகம் முழுவதும் பருவகாலங்களில் குளறுபடி உருவாகும்.  நிலவின் ஈர்ப்புவிசை பூமியின் சுழற்சியைக்  கட்டுப்படுத்துகிறது. எனவே, நிலவு இல்லாதபோது, பூமி சுற்றும் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பகல், இரவு ஆகிய காலவேளையின் நீளம் மாறும்.  https://www.syfy.com/syfy-wire/if-the-moon-were-destroyed-what-would-it-mean-for-earth

வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்போது பயிர்கள் அனைத்துமே பாதிக்கப்படும்! - ரேச்சல் பெஸ்னர் கெர்

படம்
  ரேச்சல் பெஸ்னர் கெர்  ஆசிரியர், கார்னெல் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) ரேச்சல், கல்விப்பணியோடு சமூக ஆராய்ச்சியாளராக சூழல் மற்றும் உணவு பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார்.  உணவு பாதுகாப்பில் என்னென்ன மேம்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்? வெப்ப அலைகள் அல்லது வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்போது, அனைத்து பகுதியில் உள்ள பயிர்களும் பாதிக்கப்படும். இதன் விளைவாக பிற பகுதிகளில் இருந்து கூட உணவை நம்மால் பெறுவது கடினம். ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சிறு தீவுகளில் ஊட்டச்சத்து பாதிப்பு கூட ஏற்படலாம். இதுபற்றி நாங்கள் செய்த சூழல் ஆய்வில், உணவுபாதுகாப்பு எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தோம்.   நீங்கள் ஆப்பிரிக்காவில் செய்த காலநிலை மாற்றசெயல்பாடுகள் என்னென்ன? நான் இருபதாண்டுகளாக மலாவி, தான்ஸானியாவில் வேலை செய்து வருகிறேன். அங்கு விவசாயிகள் பல்வகையான பயிர்களை பயிரிடவும், மண்ணை சோதிக்கவும், இயற்கையான பொருட்களை பயன்படுத்தவும் ஊக்கப்படுத்தினேன். இதன்மூலம் உணவுப்பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறைவு பிரச்னையை எளிதாக தீர்க்கலாம்.  வெப்பஅலை, இந்தியாவின் விவசாய துறையை எந்தளவு பாதிக்கும்? எங்களது ஆய்

வளர்ந்த நாடுகள் தான் மாசுபடுதலுக்கு முழுப்பொறுப்பு - மாதவன் ராஜீவன், முன்னாள் செயலர், புவி அறிவியல் துறை

படம்
  மாதவன் ராஜீவன் முன்னாள் செயலர், புவி அறிவியல்  உலகம் முழுக்க வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணம் என்ன? காலநிலை மாற்றம்தான் உலக நாடுகள் முழுவதும் வெப்பம் அதிகரிக்க முக்கியமான காரணம். இதன் விளைவாக வெப்ப அலைகள் உருவாகின்றன. மழைப்பொழிவு அதிகரிக்கிறது. வெள்ளப்பெருக்கு சொத்துகளை நாசமாக்குகிறது. மனிதர்களின் தலையீடு காலநிலை மாற்ற விளைவுகளை மேலும் தீவிரமாக்குகிறது.  வெப்பமண்டல நாடுகளில் கூட காலநிலை மாற்ற விளைவுகள் குறையவில்லை. நாம் எப்படி இதற்கான தீர்வைக் கண்டறிவது? தீவிரமான காலநிலை வேறுபாடுகள் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியசிற்குள் இருக்க வேண்டுமென்பதுதான் காலநிலை மாநாட்டு ஒப்பந்தம் கூறுவது. அதற்கு நாம் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டியிருக்கிறது.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ரஷ்யா ஆகியவையே உலகளவில் அதிக மாசுபாடுகளை உருவாக்குகின்றன.  வளரும் நாடுகள் இதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா? வளர்ந்த பணக்கார நாடுகள் மாசுபாடு பற்றிய பிரச்னையில் முக்கியமான முடிவை எடுக்கவேண்டும். உலகளவில் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸி

சீரான சிந்தனையோட்டம் கொண்டவரால் திருத்தப்பட்ட கட்டுரை- வெப்பஅலை

படம்
 வெப்ப அலை காற்றின் வெப்பநிலை, மனிதர்களின் உடல்நலனை பாதிக்கும் விதமாக மாறுவதை வெப்ப அலை என சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் உள்ள இயல்பான வெப்பநிலையை விட கூடுதல் வெப்பநிலை இருந்தால் அதை வெப்பஅலை எனலாம். சில நாடுகளில் காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றையும் வெப்ப அலையை மதிப்பிட பயன்படுத்துகின்றனர்.  சமவெளிப்பகுதிகளில் 40 டிகிரி செல்ஸியஸ் அல்லது அதற்கு மேல் உள்ள வெப்பநிலை; மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்ஸியஸிற்கும் மேல் உள்ள வெப்பநிலை ஆகியவற்றை மதிப்பிட்டு, அச்சூழலை வெப்ப அலை என வானிலையாளர்கள் அறிவிக்கின்றனர்.  இயல்பான வெப்பநிலையிலிருந்து 4.5 டிகிரி செல்ஸியஸ் தொடங்கி 6.4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்தால், அதனை வெப்பஅலை (Heatwave) எனலாம். இயல்பான வெப்பநிலையிலிருந்து 6.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையையும் தாண்டிச் சென்றால், அது தீவிர வெப்ப அலை (Severe Heatwave) ஆகும்.  இச்சிறு கட்டுரைக்கான படம் சீரான சிந்தனையோட்டம் இல்லாதவரால் தேர்ந்தெடுக்கப்பட்டது.. நன்றி - திரு. கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு 

வெப்பத்தைக் கட்டுப்படுத்த தனி அதிகாரிகளை நியமிக்கும் நாடுகள்!

படம்
  வெப்ப கட்டுப்பாட்டு அதிகாரிகள்! அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் மியாமி டேட் கவுன்டியில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய பணியை மக்களுக்கு கஷ்டம் தராமல் வெப்பத்தை குறைக்கும் திட்டங்களை தீட்டுவதுதான். உலகின் முதல் வெப்பக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பதவியேற்றிருக்கிறார் ஜேன் கில்பெர்ட். ” அனைத்து நகரங்களிலும் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம்தான் சூழல் தொடர்பான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இதை யாருமே முதலில் கண்டுகொள்ளவில்லை. இப்போதுதான் நகரங்கள் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்றார் ஜேன் கில்பர்ட். 2021ஆம் ஆண்டு ஜேனுக்குப் பிறகு நான்கு நகரங்களில் (ஏதேன்ஸ் (கிரீஸ்), பீனிக்ஸ் சிட்டி (அரிசோனா), சியராலியோன் (ஆப்பிரிக்கா ) )இதேபோல வெப்பக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  1998 - 2017 காலகட்டத்தில் வெப்பஅலைகளின் பாதிப்பால் 1,66,000 மக்கள் பலியாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஐ.நா. வின் காலநிலை மாற்ற நிறுவனம், உலக மக்கள்தொகையில் 33 சதவீதம் பேர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தனது அறிக்கையில் கூறியுள்ளது.  தகவல்