சீரான சிந்தனையோட்டம் கொண்டவரால் திருத்தப்பட்ட கட்டுரை- வெப்பஅலை










 வெப்ப அலை

காற்றின் வெப்பநிலை, மனிதர்களின் உடல்நலனை பாதிக்கும் விதமாக மாறுவதை வெப்ப அலை என சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் உள்ள இயல்பான வெப்பநிலையை விட கூடுதல் வெப்பநிலை இருந்தால் அதை வெப்பஅலை எனலாம். சில நாடுகளில் காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றையும் வெப்ப அலையை மதிப்பிட பயன்படுத்துகின்றனர். 

சமவெளிப்பகுதிகளில் 40 டிகிரி செல்ஸியஸ் அல்லது அதற்கு மேல் உள்ள வெப்பநிலை; மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்ஸியஸிற்கும் மேல் உள்ள வெப்பநிலை ஆகியவற்றை மதிப்பிட்டு, அச்சூழலை வெப்ப அலை என வானிலையாளர்கள் அறிவிக்கின்றனர். 

இயல்பான வெப்பநிலையிலிருந்து 4.5 டிகிரி செல்ஸியஸ் தொடங்கி 6.4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்தால், அதனை வெப்பஅலை (Heatwave) எனலாம். இயல்பான வெப்பநிலையிலிருந்து 6.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையையும் தாண்டிச் சென்றால், அது தீவிர வெப்ப அலை (Severe Heatwave) ஆகும். 



இச்சிறு கட்டுரைக்கான படம் சீரான சிந்தனையோட்டம் இல்லாதவரால் தேர்ந்தெடுக்கப்பட்டது..




நன்றி - திரு. கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்