தலைகீழாக வளரும் வாழைப்பழம்! - உண்மையா? உடான்ஸா?

 









அமெரிக்க கொடியை  பள்ளி மாணவர் உருவாக்கினார்!


உண்மை. 1958ஆம் ஆண்டு பாப் ஹெஃப்ட் ( Bob Heft) என்ற மாணவர், பள்ளியில் புராஜெக்ட் வேலையாக இதனைச் செய்தார். பாப், தேசியக்கொடியில் 50 மாகாணங்களை நட்சத்திரங்களாக உருவாக்கியிருந்தார். இதனை ஆசிரியர் ஏற்கவில்லை என்பதால், அவருடைய திட்ட மதிப்பெண் குறைக்கப்பட்டது. மாணவர், மனம் தளராமல் பாப் ஹெஃப்ட் அமெரிக்க அதிபரான   ட்வைட் டி ஐசன்ஹோவர் ( Dwight D. Eisenhower)தனது தேசியக்கொடி வடிவமைப்பை அனுப்பினார். இரண்டு மாகாணங்களை இதில் இணைத்துள்ளேன் என தெரிவித்தார். அதிபர், அந்த வடிவமைப்பை ஏற்றுக்கொண்டார். 


வாழைப்பழம் தலைகீழாக வளருகிறது!


உண்மை. நாம் வாழைப்பழத்தை தலைகீழாகவே பிரித்து உண்கிறோம். அவை வளரும் விதத்தில், பின்புறப்பகுதி வானைப் பார்த்து அமைந்திருக்கிறது. இவை பெரிதாக வளரும்போது சூரியனைப் பார்த்து வளர்ந்து வளைவான வடிவத்தைப் பெறுகிறது. 


நாய் தனது இடது மூக்கில், நறுமணத்தை முகர்கிறது! 


உண்மை. நாய், முகரும்போது வலது மூக்கில் வாசனைகளை முகரும். பிறகு, அதில் ஆபத்தான சமிக்ஞைகள் தெரிந்தால், அதிலேயே நுகர்ந்து உண்மையா என ஆராயும். நறுமணம், ஆபத்தில்லாத விஷயங்கள், இணை சேர்வது ஆகிய விஷயங்களை முகர இடது மூக்கைப் பயன்படுத்துகிறது. 


மனிதர்களின் மூக்கும், காதும் வயதாகும்போது அதற்கேற்ப வளரும்!


உண்மையல்ல. புவியீர்ப்பு விசை காரணமாக அதன் வடிவம் சற்று பெரிதாகும் என டிஸ்கவரி தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது. முப்பது வயதிற்கு மேல் உடலின் பிற பாகங்களைப் போலவே மூக்கு, காது ஆகிய உறுப்புகள் வளர்ச்சி நின்றுவிடுகிறது என்பதே உண்மை. ஆண்கள், பெண்களுக்கு ஆண்டுக்கு .22 மி.மீ. அளவுக்கு காது, மூக்கு பெரிதாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தியோடர் ரூஸ்வெல்ட் செல்லப்பிராணியாக கழுதைப்புலியை வளர்த்தார்!


உண்மை. கழுதைப்புலியின் பெயர் பில். இதனை எத்தியோப்பியா மன்னர் , அதிபர் ரூஸ்வெல்டுக்கு பரிசாக கொடுத்தார். அதிபர் கூடவே சேவல், சிறு கரடி, குதிரை ஆகிய பிராணிகளை வளர்த்து வந்தார். அந்த வரிசையில் கழுதைப்புலியும் சேர்ந்தது. 

ஐரோப்பியர்கள் முதலில் தக்காளியை சாப்பிட பயந்தனர்!


உண்மை.  ஐரோப்பாவில் ஹெர்னன் கார்டெஸ் (Hernán Cortés) என்பவர் 1519ஆம் ஆண்டு  தக்காளியை அறிமுகப்படுத்தினார். இவர், தக்காளியை தோட்டங்களில் பயிரிட்டார்.  பிறகு, மெல்ல 1700ஆம் ஆண்டு, சமூகத்தின் மேல்தட்டினர் தக்காளியை உணவில் சேர்த்துக்கொண்டனர்.   ஆனால், அதை சாப்பிட்ட பலரும் திடீரென இறந்தனர். அவர்கள் சாப்பிட்ட தட்டில் வெள்ளியும், காரீயமும் (Pewter plates) இருந்தது. தட்டிலிருந்த காரீய நச்சை, தக்காளியின் அமிலத்தன்மை  ஊக்குவிக்க, மக்கள் இறந்தனர். எனவே, தக்காளியை சாப்பிட மக்கள் பயந்தனர். 

 


https://www.rd.com/list/interesting-facts/ 

https://www.discovery.com/science/ears-nose-get-bigger-old-age

https://www.huffpost.com/entry/american-flag-designer_n_7713976

கருத்துகள்