பாறைகள் மண்துகள்களாக மாறும் செயல்பாடு! - ஆர்கானிக் வெதரிங்

 












பாறைகளில் ஏற்படும் மாற்றம்!

நடக்கும்போது, விளையாடும்போது காலில் ஒட்டியுள்ள மண்ணைப் பார்த்திருப்பீர்கள். இந்த மண் எப்படி உருவாகிறது என அறிவீர்களா? பாறைகள் மெல்ல உடைந்து துண்டுகளாகி, சிறு துகள்களாகி மண்ணாகிறது. இயற்கையாக நடைபெறும் இச்செயல்பாட்டிற்கு, வெதரிங் (weathering) என்று பெயர். 

பாறைகள் உடைந்து சிறு துண்டுகளாகி மண் துகள்களாக மாறுவதற்கு மரம், விலங்குகள், நுண்ணுயிரிகள், மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக உள்ளன. இதனை  சூழலியல் வல்லுநர்கள், பயாலஜிகல் வெதரிங் (Biological weathering)என்று குறிப்பிடுகின்றனர். ஷ்ரூஸ் (Shrews), மோல்ஸ் (Moles), மண்புழுக்கள், எறும்புகள்  ஆகியவை பாறையில் துளைகளையும், விரிசல்களையும் ஏற்படுத்துகின்றன. இவற்றில், பறவைகள் தம் எச்சம் மூலமாக  விதைகளை விதைக்கின்றன. விதைகள் முளைத்து செடியாகி, மரமாகும்போது பாறை மெல்ல உடைபடுகிறது. 

சயனோபாக்டீரியா (Cyanobacteria),  பாறையில் வளரும் செடிவகை (Lichens), பாசி, பூஞ்சை ஆகியவையும் பாறைகளைத் துளையிடுகின்றன. இதற்கு, வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக பாறையிலிருந்து, தனக்குத் தேவையான கனிமங்களைப் பெறுகின்றன. பிட்டாக் ஷெல் (Piddock shell) எனும் சிப்பிமீன், மென்மையான பாறைகளை லார்வா வடிவில் துளைத்து உள்சென்று வாழ்கின்றன. இதற்கு ஆர்கானிக் வெதரிங் (Organic weathering) என்று பெயர். 

பயன்கள்

பாறைகள் உடைந்து மண் துகள்களாவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் மண்ணுக்கு கிடைக்கின்றன. இதனை, தாவரங்கள் தம் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்கின்றன. பாறைகள் உடைந்து வண்டல் பாறையாக (sedimentary rocks) ஆற்றில் சென்று சேர்கின்றன. உடைந்த பாறைகள் வண்டல் பாறையின் வகைகளான மணற்கல் பாறை, சுண்ணாம்புக்கல் பாறைகளாக மாறுகின்றன. காலப்போக்கில் இச்செயல்முறை தொடர்ந்து நடக்கும்போது, பாறைகளைக் கொண்ட குறிப்பிட்ட நிலப்பரப்புகள் உருவாகின்றன. 


 

dream 2047 june 2022

biological weathering

https://www.geolsoc.org.uk/ks3/gsl/education/resources/rockcycle/page3568.html

https://www.sciencedirect.com/topics/earth-and-planetary-sciences/biological-weathering

https://www.bioexplorer.net/biological-weathering.html/

https://www.meteorologiaenred.com/ta/tipos-de-roca.html

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்