தனிநபர்களை தாக்கும் வன்முறைக்கு பெயர் என்ன? - பதில் சொல்லுங்க ப்ரோ?
ரன்னிங் அமோக் (Running amok) என்பது உடல்நலக்குறைபாடா?
மலாய் வார்த்தையான மெங் அமுக் (Meng amuk)என்பதிலிருந்து ரன்னிங் அமோக் என்ற வார்த்தை உருவானது. சமூகத்தை புறக்கணித்த மனிதர், பெருந்திரளான அல்லது தனிநபர்களை தீவிரமாக தாக்கும் குறைபாடு என ரன்னிங் அமோக்கை வரையறை செய்யலாம். 1770ஆம் ஆண்டு கடல் பயணம் செய்த கேப்டன் குக் என்பவர், மலேஷிய பழங்குடிகளிடையே ரன்னிங் அமோக் மனநல குறைபாடு இருப்பதை பதிவு செய்துள்ளார்.
ஜீன்ஸ் பேண்டிலிலுள்ள சிறிய பாக்கெட் எதற்கு?
1879ஆம் ஆண்டு, லீவிஸ் ஸ்ட்ராஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜீன்ஸ் பேண்டில் நான்கு பாக்கெட்டுகள் இருந்தன. இதில் ஒரு சிறிய பாக்கெட்டும் உள்ளடங்கும். அன்றைய காலத்தில், ஆண்கள் தங்களின் பாக்கெட் வாட்சுகளை ஜீன்ஸில் வைத்துக்கொள்ளத்தான் இந்த வசதி. ஆனால் பின்னாளில் சிறிய பாக்கெட்டின் பயன்பாடு மாறி பயணச்சீட்டு, நாணயங்களை வைத்துக்கொள்வதாக மாறிவிட்டது.
https://www.rd.com/article/tiny-pocket-in-jeans/
https://www.rd.com/list/interesting-facts/
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC181064/
கருத்துகள்
கருத்துரையிடுக