நவீன மின் உடலியங்கியல் துறையை உருவாக்கியவர்! எமில் டு பாய்ல் ரேமண்ட்









எமில் டு பாய்ஸ் ரேமண்ட் (Emil Du Bois-Reymond
1818 -1896)

ஜெர்மனியின் பெர்லினில் எமில் பிறந்தார். அங்குள்ள பிரெஞ்சு கல்லூரியில் படித்தவர், மருத்துவக்கல்வியை பெர்லின் பல்கலைக்கழகத்தில் கற்றார். மருத்துவம், உடற்கூறியல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். மருத்துவத்துறை பேராசிரியர் ஜோகன்னஸ் பீட்டர் தனது இளம் உதவியாளராக சேர்த்துக்கொண்டார். 

பேராசிரியர் ஜோகன்னஸ், உயிரினங்களில் உள்ள மின்னாற்றல் பற்றி ஆராய்ந்துகொண்டிருந்தார். எனவே, அவரைப் பின்பற்றி எமில் பட்ட ஆய்வுக்காக மின்சார ஆற்றல் உள்ள மீன்களை எடுத்துக்கொண்டார். 1858ஆம் ஆண்டு பெர்லினில் மருத்துவத்துறை பேராசிரியரானார். 

1867இல் பெர்லின் அறிவியல் அகாடமியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். நவீன மின் உடலியங்கியல் துறைக்கு உருவாக்கியவர். ஜெர்மன் பேரரசர், எமிலுக்காக மருத்துவக் கழகம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தார். 1877, நவ.6 ஆம் தேதி மருத்துவக்கழகம் தொடங்கி வைக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது.  1859-1877 காலகட்டத்தில் முல்லர்ஸ் ஆர்ச்சீவ் (Müllers Archiv)இதழில்  இணை ஆசிரியராக செயல்பட்டார்.  பிறகு காலமாகும்வரை,  ஆர்ச்சீவ் ஃபர் பிசியாலஜி (Archiv für Physiologie.) இதழில் ஆசிரியராகச் செயல்பட்டார்.  தசை, நரம்பு ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் மின்சார சமிக்ஞைகள் பற்றிய ஆராய்ச்சியில் எமில் முக்கியமானவர். 

https://www.encyclopedia.com/people/medicine/medicine-biographies/emil-du-bois-reymond


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்