இடுகைகள்

குளோகல்(Glocal) செய்திகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எம்எல்ஏக்களின் வருமானம்?

படம்
உங்கள் ஆண்டுவருமானம் எவ்வளவு? சாஃப்ட்வேர் எஞ்சினியரிங் படித்து அடித்து பிடித்து வேலையில் சேருபவர்களுக்கு கூட ஆண்டு வருமானம் 10 லட்சத்தை தாண்டுவது கஷ்டம். 12 ஆம் வகுப்பு படித்த விவசாயி எம்எல்ஏக்களின் தோராய ஆண்டு வருமானம் 89.88 லட்சம் என்றால் நம்புவீர்களா?   டாப் சம்பளம் பெறுபவர்களில் முதலிடத்தில் கர்நாடக எம்எல்ஏக்களும், கடைசி இடத்தில் சத்தீஸ்கர் மாநில மக்கள் பிரதிநிதிகளும் உள்ளனர்.   தோராயமாக ஆண்டுக்கு கர்நாடக எம்எல்ஏக்கள் ஒரு கோடியும், சத்தீஸ்கர் எம்எல்ஏக்கள் ஆண்டுக்கு 5.4 லட்சமும் பெற்றுள்ளனர். 3,145 எம்எல்ஏக்களிடம் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில் பாதிப்பேர் விவசாயமும்(24%), தொழில்களும்(25%) செய்துவருவதாக தெரிவித்தனர். கர்நாடகா, மகாராஷ்டிரா(43.4 லட்சம்), ஜார்க்கண்ட்(7.4 லட்சம்) ஆகிய மாநிலங்களில் எம்எல்ஏக்களின் ஆண்டுவருமானம் இந்திய மாநிலங்களிலேயே அதிகம். இவர்களில் 1,052 எம்எல்ஏக்களின் கல்வித்தகுதி 5 முதல் 12 ஆம் வகுப்பு வரைதான். அரசியல்ல குதிக்கிறது இதுக்குத்தானா?  

விசாவுக்கு சோஷியல்சைட் பதிவுகள் அவசியம்!

படம்
பெண்களால் புனிதம் கெடுகிறதா ?  நாடெங்கும் பெண்களை கோயில்களில் அனுமதிப்பது குறித்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன . இந்நிலையில் உ . பியில் பெண் எம்எல்ஏ விசிட் செய்த கோயில் கங்கை நீரால் சுத்தம் செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பாகி வருகிறது . உ . பியின் ஹமிர்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கு நோட்டுப்புத்தகங்களை வழங்க பாஜக கட்சி எம்எல்ஏவான மனிஷா அனுராகி வந்தார் . மகாபாரத கால துறவி தூம்ரா ரிஷியின் ஆசிரமம் மற்றும் கோவிலை விசிட் செய்து ஆசிர்வாதம் பெற்றார் . பெண்களை அனுமதிக்காத ஆசிரமத்தில் எம்எல்ஏ என்பதால் மனிஷா அனுமதித்த கிராமத்தினர் , அவர் சென்றபின் கங்கை நீரால் ஆசிரமத்தை கழுவிவிட்டு துறவியின் சிலையையும் அலகாபாத்திலுள்ள கங்கை ஆற்றில் தூய்மைப்படுத்த முடிவெடுத்துள்ளனர் ." இது அரசியலமைப்பு அனுமதித்த உரிமைகளின் படி பெண்களை அவமானப்படுத்தும் செயல் " என மனிஷா அனுராகி எம்எல்ஏ கொதித்துள்ளார் .     2 ஜூனியர் எஞ்சினியர் அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியரான தனிஷ்க் ஆப்ரஹாம் , பதினான்கு வயதில் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் பட்டம் பெற்று பிரமிக்க வைத்துள்ளார் . ஆப்ரஹாம் த

அசல் நேர்மை ப்ரோ இது!

படம்
எவரெஸ்ட் நேர்மை ! ராஜஸ்தானைச் சேர்ந்த இதயநோயாளி தவறவிட்ட சிகிச்சை பணத்தை அபேஸ் செய்யாமல் அவருக்கே திருப்பிக்கொடுத்து நேர்மையின் சிகரமாகியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் . ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த பிரேம்லதா கெலாட் , இதயநோயாளி . தன் வாழ்நாள் சேகரிப்பான 4 லட்சத்தை பைபாஸ் சிகிச்சைக்காக எடுத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றபோது பணப்பையை தவறுதலாக ஆட்டோவிலேயே வைத்துவிட்டு தல்தெஜ் எனுமிடத்திலுள்ள மருத்துவமனையில் இறங்கிவிட்டார் . அவர் தவறவிட்ட 4 லட்ச ரூபாய் பணத்தை சபலப்படாமல் எடுத்து பிரேம்லதாவிடம் மனிதநேயத்துடன் ஒப்படைத்துள்ளார் ஆட்டோ ட்ரைவரான நாஞ்சி நயி . " ஆட்டோவை சுத்தப்படுத்தும்போதுதான் பிரேம்லதா அம்மாவின் பணப்பையை பார்த்தேன் . நான் என் வாழ்வில் அவ்வளவு பணத்தை பார்த்ததேயில்லை . மருத்துவமனையில் இறக்கிவிட்ட பிரேம்லதா அம்மாவுடையதாக இருக்குமோ என உடனே வஸ்த்ரபூர் போலீசிடம் தகவல் தெரிவித்தேன் " என நெகிழ்ச்சியாகிறார் நாஞ்சி . இதயத்தில் ஏற்பட்ட மூன்று அடைப்புகளை சரிசெய்வதற்கான சிகிச்சை பணம் தொலைந்தவுடன் இருளடைந்த பிரேம்லதாவின் முகம் நாஞ்சி திருப்பித்தந்த பணம் மூலம்தான் தெளிந்த

துரந்தோ எலி!-இழப்பீடு வழக்கு என்னாச்சு?

படம்
பாகிஸ்தானில் வென்ற இந்து ! அண்மையில் பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான தெரீக் இ இன்சாப் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது . இந்து ஒருவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக வென்றுள்ளது மிராக்கிள் நியூஸாக பகிரப்பட்டு வருகிறது . பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மகேஷ்குமார் மலானி , தெற்கு சிந்துபகுதியிலுள்ள தர்பார்கர் தொகுதியில் மக்களின் மனதை வென்று 37 ஆயிரத்து 245 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அராப் ஸகாவுல்லா என்ற வேட்பாளரை தோற்கடித்துப் பெற்ற வெற்றி , சிறுபான்மையினத் தலைவர் மலானியை பிரபலப்படுத்தியுள்ளது . ராஜஸ்தானி புஷ்கரண பிராமின் பிரிவைச் சேர்ந்த மலானி 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டுள்ளார் . மாற்றம் நாட்டை வளமாக்கட்டும் ! 2 கங்கை சுத்தமாச்சா ? கங்கையை சுத்தப்படுத்துவோம் என்ற கோஷம் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத ஒன்று . பாஜகவின் ஆட்சியில் 1% மட்டுமே தூய்மைப்படுத்தும் திட்டம் முன்னகர்ந்துள்ளது . ஆனால் தேவைப்படும் நிதி 49 ஆயிரத

முஸ்லீம் படுகொலையை தடுத்த காவலர்!

படம்
படுகொலையின் மீட்பர் !  கர்நாடகாவின் பிடார் பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் மல்லிகார்ஜூன் , குழந்தை கடத்தல்காரர்கள் என தவறுதலாக கொல்லப்படவிருந்த ஐந்து அப்பாவிகளை 2,500 பேரிடமிருந்து காப்பாற்றி பாராட்டுகளை பெற்றுள்ளார் . பிடார் பகுதிக்கு நண்பர்களுடன் தன் உறவினர்களை காணவந்த முகமது ஆஸம் என்ற டெக் பணியாளர் அப்பகுதி குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்துக்கொண்டிருந்தார் . உயிருக்கு வினையானதும் அதுதான் ." எங்களை நோக்கி வந்த மூன்றுபேர் எங்களது காரின் டயர்களை குத்தி பஞ்சராக்கியதோடு குழந்தை திருடர்கள் என்று பெருங்குரலில் அலற மக்கள் கூட்டம் கூடி தாக்க முயன்றது . எங்களது மாமா தனது உறவினர்கள் என கூறிய வாதத்தை யாரும்   ஏற்கவில்லை " என்கிறார் உயிர்பிழைத்த அஃப்ரோஸ் . " போலீஸ் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்தாலும் நான்கு பேர் எப்படி 2 ஆயிரம் பேரை சமாளிப்பது என தடுமாறினர் . எப்படியோ போராடி காரில் வந்தவர்களை உயிருடன் மீட்டுவிட்டனர் " என்கிறார் முர்கி பகுதியைச் சேர்ந்த கோவிந்த் . மக்களின் மூர்க்கத்தனமாக கொலைவெறி தாக்குதலில் போலீசார்கள் சிலருக்கு காயமேற்பட்டது .  

ஏழையாக வாழ்வது நாடகமா?

படம்
ஏழையின் வாழ்வு நாடகமா ? கல்லூரியில் படிக்கவும் குடும்ப செலவுகளை சமாளிக்கவும் கேரள இளம்பெண் மீன் விற்றார் . இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஒருவர் இட்ட பதிவு அப்பெண்ணின் தினசரி வாழ்வையே புரட்டிபோட்டுவிட்டது . கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஹனான் ஹனானி என்ற இருபத்தொரு வயது பெண்தான் இப்போது கேரள ஊடகங்களின் டிஆர்பி டார்லிங் . விவாகரத்து பெற்றுவிட்ட பெற்றோர்களால் ஏழாம் வகுப்பிலிருந்தே உழைக்கத்தொடங்கி விட்டார் ஹனானி . பி . எஸ்சி மூன்றாமாண்டு படிக்கும் ஹனானி , அதிகாலையில் 3 மணிக்கு எழுந்து சம்பக்காரா மீன்மார்க்கெட்டில் சுடச்சுட மீன்களை வாங்கி தம்மணம் சந்தையில் விற்றுவருகிறார் .  காலை 9.30 க்கு கல்லூரி சென்றுவிட்டு மாலையிலும் மீன் வியாபாரம் செய்வது வழக்கம் . இதனை மாத்ருபூமி நாளிதழ் செய்திக்கட்டுரையாக வெளியிட உடனே நாடெங்கும் பிரபலமானார் ஹைனி . பண உதவிகளும் குவிந்தன . சும்மாயிருக்குமா உலகம் ? உடனே ஃபேஸ்புக்கில் " சிம்பதிக்காக ஹனானியை இப்படி விளம்பரப்படுத்துகிறார்கள் என நூருதீன் ஷேக் என்பவர் வீடியோ பதிவிட சரி , தவறு என கோஷ்டி பிரிய ஹனானி உடனே தீவிரமாக மோசமானவர் என

ஜெயில் கஃபே- கைதிகளின் உணவகம் எங்கேயிருக்கிறது?

படம்
காந்தியின் வழியில் ஒபாமா ! தென்னாப்பிரிக்கா தலைவரான அமரர் நெல்சன் மண்டேலாவின் நூறாவது பிறந்தநாளில் பங்கேற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா , மகாத்மா காந்தியின் சமத்துவம் , நீதி , சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகளே தன்னை வழிநடத்துவதாக பேசினார் . " நெல்சன் மண்டேலா , மார்டின் லூதர்கிங் , மகாத்மா காந்தி , ஆபிரஹாம் லிங்கன் ஆகியோரின் தொலைநோக்கு பார்வை , சுதந்திரம் , பல்வேறு கலாசார மக்களுக்கான ஜனநாயகம் சமத்துவம் ஆகியவற்றை அனைத்து மக்களும் பெற தகுதியானவர்கள் என்று கூறிய மேற்கண்ட தலைவர்களை நான் உறுதியாக நம்புகிறேன் ." என்றவர் நாட்டு மக்களின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான கருத்துக்களை பேசி வரும் ட்ரம்ப்பை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்ததை பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்டு ரசித்தனர் . கைதிகளின் கஃபே ! இமாச்சல பிரதேசத்திலுள்ள சிம்லாவில் கைதிகளால் நடத்தப்படும் புக் கஃபே டூரிஸ்டுகளை பெருமளவு ஈர்த்து வருகிறது . புக் கஃபேயுடன் ஆறு மொபைல் வாகனங்களை சிம்லா , நாகன் , தர்மஸ்தலா ஆகிய இடங்களில் மொபைல் கேன்டீன்களாக்கி டூரிஸ்டுகளை ஈர்க்க முயற்சித்து

கங்கையை சுத்தம் செய்கிறார் இளைஞர் ஒருவர்!

படம்
கங்கையின் மகன் ! உத்தர்கண்ட் மாநிலத்தின் தேவ்பிரயாக் பகுதியைச் சேர்ந்த அர்விந்த்சிங் ஜியால் , கங்கையை சுத்தப்படுத்தும் செயல்பாட்டில் 20 பேர் கொண்ட தன்னார்வலர் டீமுடன் ஓராண்டிற்கும் மேலாக உழைத்து வருகிறார் . நமாமி கங்கே திட்டத்தின் கீழ் கங்கையை சுத்தப்படுத்தும் செயல்பாடு (NMCG) இது . ஆற்றின் படுகையிலிருந்து குப்பைகளை அகற்றுவது , மரக்கன்றுகளை பதியமிடுவது , சூழல் பட்டறைகளை நடத்துவது என அர்விந்தின் பணிகள் பரபரக்கின்றன . " இளைஞர்களிடம் கங்கையை அசுத்தப்படுத்தாமல் இருப்பது குறித்து எளிதாக பேசிவிடலாம் . ஆனால் நம்மிலும் மூத்தவர்களை பேசி சம்மதிக்கவைப்பது சிரமம் . நாங்கள் ஆற்றுப்படுகை கரையோரமாக நட்ட அறுபதிற்கும் மேற்பட்ட மரங்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன . வியாபாரிகள் பாலீதின் பைகளை பயன்படுத்தாமல் இருக்க கேட்டுக்கொண்டுள்ளோம் " என அடக்கமாக பேசுகிறார் அர்விந்த்சிங் ஜியால் . 427 பேர் கொண்ட பிரகாரி எனும் தன்னார்வலர்கள் குழு , உத்தர்காண்ட் , உத்தரப்பிரதேசம் , ஜார்க்கண்ட் , மேற்கு வங்காளம் ஆகிய கங்கை வழித்தடங்களிலுள்ள மாநிலங்களிலும் சுகாதாரப்பணிகளை மேற்கொண்