இடுகைகள்

புகைப்படம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் செயற்கை நுண்ணறிவு!

படம்
  செயற்கை நுண்ணறிவு காலத்தில் பரவும் போலிச்செய்திகளும், நேர்மையான தேர்தலும் 2018ஆம்ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தோடு செய்த ஊழல் அனைவரும் அறிந்ததே. ஒருவர் எழுதும் பதிவுகளை வைத்து அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறார் என அல்காரிதம் மூலம் கணித்தனர். இதைப் பற்றி மக்களுக்கு எந்த கவனமும் இல்லாமல் இரையாக மாட்டிக்கொண்டனர். இதில் பயன்பெற்றது, உலகம் முழுக்க உள்ள அரசியல் கட்சிகள்தான். இலவசம் என்ற பெயரில் ஃபேஸ்புக் உலகம் முழுக்க பரவலாகி அதில் இணைந்த பயனர்களாகிய மக்களையே நல்ல விலைக்கு விற்ற கதை அது.  செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலிச்செய்திகள், வீடியோக்களை ஒருவர் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்து தடுப்பது உண்மையில் கடினமான ஒன்று. அரசியல் கட்சிகளுக்கு எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடல் உதவும் என்று தெரியவில்லை. ஓப்பன் ஏஐ, கூகுள், அமேஸான் ஆகிய பெருநிறுவனங்களே பந்தயத்தில் முன்னணியில் உள்ளன.  வெறுப்பு, பிரிவினைவாத கருத்துகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றன. இதன் அடிப்படையில் போலிச்செய்திகளை வைத்தே கூட ஒரு கட்சி தேர்தலில் வெல்லலாம். செயற்கை நுண்ணற

புகைப்படம் எடுப்பது என்பது வேட்டையாடுவதைப் போன்றது! - பாப்லோ பார்த்லோமியூ

படம்
  பாப்லோ பார்த்லோமியூ புகைப்படக்கலைஞர்.  எழுபது, எண்பதுகளில் இருந்ததை விட ஸ்ட்ரீட் போட்டோகிராபி என்பது எப்படி மாறியுள்ளது? இன்று ஒரு பட்டனை தட்டினால் படத்தை எளிதாக பதிவு செய்து பார்த்துவிடலாம். அன்றைய காலத்தில் நீங்கள் ரோல் பிலிமை முழுக்க படம் எடுத்து தீர்த்தால்தான் அதனை புரோசஸ் செய்து படங்களை பார்க்க முடியும். அதற்கு குறிப்பிட்ட நேரமாகும். நீங்கள் வெளிப்புறத்தில் இருந்தால், படங்களை எடுத்து முடித்து அதனை எடிட் செய்து பார்க்க சில மாதங்களே தேவைப்படும். 1989ஆம் ஆண்டு நான் வடகிழக்கு இந்தியாவில் இருந்தேன். அங்கிருந்த நாகா பழங்குடிகளை புகைப்படம் எடுத்தேன். பிறகு ஸ்டூடியோ வந்து அதனை எடிட் செய்து புகைப்படங்களைப் பார்க்க இரண்டு மாதங்கள் ஆனது.  இன்று நீங்கள் பார்க்கும் காட்சிகளை கண்கள் இமைப்பதை விட வேகமாக புகைப்படமாக எடுத்துவிடலாம். ஆனால் காட்சிக்கு பின்னே உள்ள நுட்பம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. குறிப்பிட்ட காட்சியை அவுட் ஆஃப் போகஸ் உத்தியில் அல்லது போகஸ் உத்தியில் எடுக்க நினைத்தால் எப்படி எடுப்பீர்கள் என்றால் பலருக்கும் பதில் தெரியாது. பழைய கால புகைப்பட கலைக்கும் இன்றைக்கும் உள்ள வேறுபாடு இத

பனிச்சிறுத்தையை லடாக்கில் படம் பிடித்தது சவாலான சம்பவம்! - ஆதித்ய டிக்கி சிங்

படம்
  ஆதித்ய டிக்கி சிங் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் புகைப்படத்துறைக்குள் எப்போது நுழைந்தீர்கள்? 1999ஆம் ஆண்டு. இந்தியாவின் ரந்தம்பூரில் பிபிசிக்கான ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அதற்கான நான்கு பேர் கொண்ட குழுவில் நானும் ஒருவன். ஒளிப்பதிவாளர்கள் தங்கள் பணியில் தீவிரமாக இருந்தனர். நான் பணியின்போது புகைப்படம் எடுக்கும் தேவை இருந்தது. அங்கிருந்தவர்களில் என்னால் மட்டும்தான் கேமராவின் கையேட்டை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தது. இப்படித்தான் அந்த வேலையை செய்து புகைப்படக்காரனானேன்.  கேமராவை எப்போதாவது சேதப்படுத்தி உள்ளீர்களா? நிச்சயமாக. இரண்டு லென்ஸ்கள், இரண்டு கேமராக்களை சேதப்படுத்தியுள்ளேன். அதை நினைத்து அப்போது பெரிய வருத்தம்... புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்ல நினைக்கிறீர்களா? பல்லாயிரக்கணக்கான மணி நேரங்கள் நீங்கள் உழைத்தாக வேண்டும். எனவே, தயாராக இருங்கள். உழையுங்கள்.  புலிகளை புகைப்படம் எடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றவர். அப்படி புகைப்படம் எடுத்ததில் எது சிறந்த விஷயம்? நிலத்தில் வாழும் வேட்டையாடிகளை படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. ரந்தம்பூரில் உள்ள பல தலைமுறை புலிக

பேரிடரின்போது வெளியே வரும் நமது பொறுப்புணர்வு - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வினோத் பாலுச்சாமி vinodh balusamy மழை பெய்தால் வெளியே வரும் நம் பொறுப்புணர்வு!  புகைப்படம் - வினோத் பாலுச்சாமி  26.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு வணக்கம்.  நலமா?  இந்த கடிதம் எழுதும்போது மயிலாப்பூர் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் எளிதாக வடியமாட்டேன் என்கிறது. இத்தனைக்கும் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு கி.மீ. சென்றால் கடல் வந்துவிடும். நிலைமையைப் புரிந்துகொண்ட பணியாளர்கள் பாதாளச்சாக்கடை அடைப்புகளை குச்சி வைத்து எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேலையை முடித்தவர்கள் வேறு இடங்களுக்கு போகும்போது நீரை காலால் கையால் வீசியபடியும், செல்ஃபி எடுத்து வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்தபடியும் சென்றனர்.  ராதாகிருஷ்ணன் சாலை வழியாகவே நான் ராயப்பேட்டை அஜந்தா அருகிலுள்ள நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வருகிறேன். இதை விட தினசரி சட்டமன்றத்திற்கு விடியல் முதல்வர் செல்லும் சாலையும் இதுதான். இங்கேயே இப்படிப்பட்ட நிலைமை. நான் நடந்துசெல்லும்போது தேங்கிய நீரில் தனது வீட்டிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து எறிந்தார். துப்புறவு பணியாளர்

பலவந்தப்படுத்தினால் பாசம் வருமா? - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வினோத் பாலுச்சாமி/Vinodh Balusamy லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது!  29.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று லேப்டாப் திடீரென பிரச்னை செய்தது. இதுவரை எழுதித் தொகுத்து வைத்த நூல்கள் எதையும் திருத்த முடியவில்லை. லிப்ரே ஆபீஸ் ரைட்டர் கோப்பில், கர்சர் தானாகவே எழுதிய வரிகளை அழித்துக்கொண்டே சென்றது. இதை தடுத்து நிறுத்த அடிக்கடி எஸ்கேப் பட்டனை அழுத்திக்கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் முடியல சாமி என்று ஆகிவிட்டது. லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்து, கணினியை அணைத்துவிட்டேன்.  ஜோம்பிலேண்ட் - டபுள்டேப் என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். வணிகரீதியான படம். எப்போதும் போல ஜோம்பிகளின் மண்டையை சிதறடித்துக் கொல்லும் படம்தான். உங்களுக்கும் கோபத்தில் யாரையாவது அடித்துக் கொல்லும் உக்கிரம் இருந்தால், படத்தைப் பார்க்கலாம். தமிழ் டப்தான். உறுதியாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.  ஷோபாடே எழுதிய கட்டுரைகளில் பணம், அதன் மதிப்பு, கடன் வாங்குவது பற்றி படித்தேன். அதற்கு மேல் அதில் மனம் செல்லவில்லை. படம் பார்க்கத் தொடங்கி விட்டேன். இன்று வானில் சூரியனே வரவில்லை. இணையம் தான் எனத

டேவிட் அட்டன்பரோ ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எனக்கு ஊக்கமூட்டின! - புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ்

படம்
புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக் கலைஞர் புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக்கலை மீது எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை அருகில் ராணுவப்பள்ளியில் படித்தபோது ஆர்வம் பிறந்தது. நாங்கள் அங்கு தினமும் நீர் குடிக்க வரும் யானைகளைப் பார்ப்போம். அந்த நீர்நிலையில் ஏராளமான முதலைகள் உண்டு. பக்கத்திலேயே முதலைப் பண்ணையும் இருந்தது. சிறுத்தையை அடிக்கடி பார்ப்போம்.  ஒருநாள் மாலைநேரம் நாங்கள் விளையாடிவிட்டு நீர் குடிக்க வரும் இடத்தில் இரண்டு மலைப்பாம்புகளை பார்த்தோம். குடிநீர் குழாய் காவல்நிலையத்தின் அருகில் இருந்தது. மலைப்பாம்புகள், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகிய உயிரினங்களை நாங்கள் அடிக்கடி பார்ப்பது பழக்கமாகிவிட்டிருந்தது. கேரளாவில் உள்ள சின்னார், மூணார் ஆகிய இடங்களுக்கு நாங்கள் அடிக்கடி சுற்றுலா செல்வோம். அங்கு நாங்கள் புலி, சிறுத்தைகளை பார்ப்போம். கூடுதலாக ஏராளமான சந்தன மரங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டோம்.  பிஹெச்டி படிக்கும்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மயில்களைப

மனிதர்களின் கதையைத்தான் புகைப்படங்கள் மூலம் சொல்ல நினைக்கிறேன்! - டேனியல் பிரைஸ்

படம்
  ஜொனாதன் டேனியல் பிரைஸ் ஃபேஷன் போட்டோகிராபர் புகைப்படக்காரராக மாற எந்த அம்சங்கள் உங்களைத் தூண்டின? சிறுவயதில் புகைப்படம் பற்றிய நிறைய நினைவுகள் இருந்தன. 1970களில் லண்டனில் எனது அம்மா பாடகராக வேலைசெய்துகொண்டிருந்தார். அவரது புகைப்படம்தான் இக்கலை மீதான என் முதல் ஈர்ப்பு. புகைப்படங்களை வைத்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து வந்தேன். ஆனால் 17 வயது வரையிலும் அதுபற்றிய தீவிரம் வரவில்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம்களை பயன்படுத்தித்தான் நான் புகைப்படக்கலையைக் கற்றுக்கொண்டேன்.  உங்கள் வேலையை எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்? நான் பழைய நினைவுகளில் காதலன். எனது வேலையைப் பார்த்தால் அதனை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளுவீர்கள். ஆண்களை புகைப்படங்களாக எடுக்கும்போது மென்மையான டோன் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தின் வழியாக ஒரு கதையை சொல்ல முயல்கிறேன்.  உங்களது லென்ஸ் வழியாக நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? மனிதர்கள்தான் என்னுடைய ஆர்வமான பொருள். மனிதர்களை புகைப்படம் எடுப்பதன் வழியாகத்தான் அவர்களின் வாழ்கையை நான் அறிய முடியும். இந்த வகையில் தான் மக்களின் மனிதநேயத்தை ந

ட்ரோன்களின் பயன்பாடு!

படம்
            ட்ரோன்களின் பயன்கள் என்னென்ன ? விவசாயிகளுக்கு உதவி அதிக நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு ட்ரோன் பெருமளவு உதவும் .. நிலங்களை எளிதாக ட்ரோன் மூலம் கண்காணிக்கலாம் . ஆய்வு செய்யலாம் . பயிர்களின் வளர்ச்சியை வெளியே தெரியாத ஒளியைப் பீய்ச்சும் சென்சார்கள் மூலம் அறியலாம் . படம் எடுக்கலாம் . இதனை குறைந்த செலவில் செய்யமுடியும் என்பது முகியமான அம்சம் . தட்பவெப்பநிலை ஆய்வு புயல் , சூறாவளி வரும் சமயங்களில் அதனை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் பணியில் ட்ரோன் உதவுகிறது . இதன்மூலம் நாட்டில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக தடுக்கலாம் . குளோபல் அப்சர்வர் எனும் ட்ரோன் இதற்கு உதவுகிறது . புயல் சூழல்களில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக முன்னமே அடையாளம் கண்டு அது பற்றிய படங்களை எடுத்து அனுப்புகிறது . இந்த ட்ரோன் 55 ஆயிரம் அடி தொலைவில் ஆறு நாட்கள் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது . 600 மைல் தொலைவுக்கு ஆய்வு செய்கிறது என ஆய்வாளர்கள் சான்றிதழ் கொடுக்கிறார்கள் . ஆபத்திற்கு உதவி சாலை வசதிகள் பாதிக்கப்பட்ட சூழலில் தேவையான ஆபத்துதவி பொருட்களை எப்படி எடுத்துச் செல்வது ? அதற்கு

புகைப்படம் மூலம் மாற்றம் வரும் - ஜனேலா முகோலி

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜனேலா முகோலி தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கலைஞர். புகைப்படம்  எடுப்பதே இவரது வாழ்க்கை. அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதற்காகவே பல்வேறு உதவித்தொகைகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். 1972 ஆம் ஆண்டு டர்பனில் பிறந்தவருக்கு, ஐந்து சகோதர சகோதரிகள் உண்டு. பெற்றோர் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். 2003 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் புகைப்படம் தொடர்பான படிப்பையும், ஓவியக்கலை படிப்பை டொரண்டோவிலும் முடித்தார். ஆப்பிரிக்கர்கள், இனபாகுபாடு தொடர்பான ஓவியங்கள், கலைப்படைப்புகள் ஜனேலாவின் பெயரை உலகிற்கு அறிவித்தன. 2009 ஆம் ஆண்டு Inkanyiso எனும் அமைப்பை நிறுவி மாற்றுப்பாலினத்தவர்களின் உலகை ஆவணப்படுத்த முயன்றது இவரது மகத்தான பங்களிப்பு, புகைப்படம் வழியாக மக்களுக்கு தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஜனேலா உருவாக்கினார். இவரது பணியை டபிள்யூ இபி டுபோய்ஸூடன் ஒப்பிடுவது இவருக்கு கிடைத்த பெருமை. 2012 ஆம் ஆண்டு ஜெனேலா ஜெர்மனியில் உருவாக்கிய டாக்குமெண்டா எனும் கண்காட்சியில் பெரும் புகழ் பெற்றார். ஃப்யூ(FEW)  எனும் அமைப்பை உருவாக்கி மாற்றுப