இடுகைகள்

பார்லர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு வழிவகுத்த பார்லர் சமூகவலைத்தள சேவை! - பின்னணியில் வலதுசாரி முதலீட்டாளர்

படம்
                அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை வலதுசாரி டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர் . இதன் காரணமாக உலக நாடுகளில் அமெரிக்கா இனி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது . இத்தனைக்கும் அங்கு பாதுகாப்பு இருந்ததா என்று கேட்குமளவுக்கு போராட்டக்கார ர்களை காவல்துறை எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தது . இதையொட்டி நடந்த வன்முறை சம்பவங்களுக்கு டிரம்ப் பேசிய பேச்சுகள் முக்கிய காரணம் . அதேபோல வலதுசாரி , கலக , துவேஷ கருத்துகளை பரப்பும் பார்லர் எனும் சமூக வலைத்தளம் தற்போ ஆப்பிள் , கூகுள் , அமேசான் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது . பார்லர் எனும் சேவை டிவிட்டர் போன்ற மைக்ரோபிளாக்கிங் போன்றதுதான் . இதிலும் உங்களுக்கு பிடித்தவரைப் பின்தொடரலாம் . கருத்துகளை பகிரலாம் . ஆனால் எந்த கருத்துகளையும் பார்லர் பயனருக்கு பரிந்துரைக்காது . எந்த பயனர் தொடர்பான தகவல்களையும் பகிரமாட்டோம் என்று பார்லர் கூறியுள்ளதால் , இதன் பதிவுகளை வேறு எந்த சமூகவலைத்தளத்திலும் பகிர முடியாது . ஆனால் பிற சமூக வலைத்தள பதிவுகளை ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்து பயனர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள் . அமெரிக்காவில் 8 மில்ல