இடுகைகள்

ஏமாற்றுதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனித பலத்தில் மூளைக்கும் சற்று பகிர்வு தேவை! - யாவரும் ஏமாளி அனுபவம்

படம்
              மதிப்பிற்குரிய அன்னை உணவுப்பொருட்கள் தயாரிப்புக் குழுமத்திற்கு, வணக்கம். கடந்த 21.6.2024 வெள்ளிக்கிழமை அன்று தாராபுரம் செல்லவேண்டிய பணி. அங்கு சென்று பணியை முடித்துவிட்டு, மாலை நேரத்தில் ஶ்ரீ கண்ணன் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு சில பொருட்களை வாங்கச் சென்றேன். அன்னை பிராண்ட் பேரீச்சம்பழம் நூறு கிராம் பாக்கெட் வாங்கினேன். விலை ரூ.51 என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், அதை கணினியில் பில் போடும்போது 100 கிராம் ரூ.54 என்று காட்டியது. பில் போட்டவர், விலை அதிகமாக காட்டுகிறது. வேறு பிராண்ட் எடுத்துக்கொள்ளுங்கள் என பரிந்துரைத்தார். அதற்கு பதிலாக இருந்தது லயன் என்ற பிராண்ட். அந்த பாக்கெட்டின் விலை நூறு ரூபாய்க்கும் மேல். அன்னை பிராண்ட் நூறு கிராம் பாக்கெட்டின் விலை ரூ.54தான். வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள் என விற்பனையாளர் நெருக்கடி கொடுத்தார். எனவே, வேறுவழியின்றி அன்னை பிராண்ட் வேண்டாம் என்று சொல்லி பாக்கெட்டை செல்ஃபிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். உண்மையில், அன்னை நூறு கிராம் பேரீச்சைப்பழம் பாக்கெட்டில் வரி உள்பட அதிகபட்ச விலை அச்சிடப்பட்டு உள்ளது. ஆனால் கணினியில் வேறு