இடுகைகள்

அனடோலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பங்களை அழிக்கும் டெர்மினேட்டர் - அனடோலி

  மனிதர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனால் சூழ்நிலை கொந்தளிப்பாக மாறும்போது அவர்களின் உள்ளே உள்ள ஆவேசம் வெளியே தெரியவரும். காதலோ, நட்போ, தொழிலோ ஏதோ ஒருவகையில் ஒருவருக்கு ஏமாற்றம் தருகிறது. சில சமயங்களில் ஒட்டுமொத்த உலகமே தன்னை வஞ்சித்ததாக ஒருவர் உணரும்போது வஞ்சகர் உலகத்தை பழிவாங்க குற்றங்களில் ஈடுபடுகிறார். இந்த வகையில் கோபம், வன்மம், பழிக்குப்பழி, உடலுறவுக்கான சாகச உணர்வு ஆகியவை மனிதர்களை பெரும்பாலும் கொலைகளை செய்ய வைக்கிறது. பாகிஸ்தானின் லாகூரில் ஜாவேத் இக்பால் இப்பபடிப்பட்ட மனிதர்களில் ஒருவர். தெருவில் வாழும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு உணவு, இருப்பிடம் தருகிறேன் என கூட்டிச் சென்று கொன்று அமிலத்தில் கரைத்துவிடுவார். இரு சிறுவர்களை அடித்ததாக அவர் மீது காவல்துறை புகார் இருந்தது. ஆனால் காவல்துறை அதை தீர விசாரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் நூறு தாய்களை அழவைக்கும் செயலை செய்தார். ஆம். நூறு சிறுவர்களைக் கொன்று உடலை அமிலத்தில் கரைத்து அந்த நீரை பாதாள சாக்கடையில் விட்டார். நான் நினைத்தால் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களை கொன்றிருக்க முடியும். ஆனால் என் மனதில் நூறு தாய்களை அழ வைக்கவேண்டும்