இடுகைகள்

ஜிங்பிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவில் சகிப்புத்தன்மையற்ற சர்வாதிகாரம் நிலவுகிறது

படம்
தியான்மென் சதுக்க படுகொலைகளை சீன அரசு பாடுபட்டு மறைக்க முயன்றும் அதனை பலர் இணையத்தில் அதைவிட தீவிரமாக வேலைபார்த்து வெளியிட்டு வருகின்றனர். 1989 ஆம் ஆண்டு சீன அரசு, ஒடுக்குமுறையை செய்தபோது சூ ஃபெங்சுவோ மாணவர் சங்கத் தலைவராக இருந்தார். தற்போது அமெரிக்காவில் வசிப்பவர் அன்றைய சூழ்நிலை குறித்து பேசுகிறார். ஜூலை 4 தேதி நடந்த நிகழ்ச்சிக்கான அரசின் பொறுப்பு ஏற்பு என்பதற்கே பெரும் கஷ்டப்படவேண்டி உள்ளது. சம்பவம் குறித்து உங்களது கருத்தைச் சொல்லுங்கள்.  சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் முழு பொறுப்பு. அதை நாம் முதலில் ஏற்பது அவசியம். நேரடியான தொடர்பு என்றால் முன்னாள் சீனத் தலைவர்களான டெங் ஜியாபிங் மற்றும் லீ பெங் ஆகியோரைச் சொல்லலாம். ஜனநாயக வழியில் இதற்கான பொறுப்பேற்று அரசு செயல்பட்டு மேற்சொன்ன இரு குடும்பங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். அவர்களின் தலைமுறைகளின் சொத்துக்களும் இதில் அடங்கும். பொறுப்பு என்பது நீதியோடு தொடர்புடையது. மேலும் இதன் தடத்தைப் பின்பற்றினால் உண்மையை நாம் சென்று அடையலாம். மக்களை ஏன் அவர்கள் கொன்றார்கள்? எப்படி அந்த முடிவை எடுத்தார்கள் என்ற கேள்விகளை நாம் ந