சீனாவில் சகிப்புத்தன்மையற்ற சர்வாதிகாரம் நிலவுகிறது







தியான்மென் சதுக்க படுகொலைகளை சீன அரசு பாடுபட்டு மறைக்க முயன்றும் அதனை பலர் இணையத்தில் அதைவிட தீவிரமாக வேலைபார்த்து வெளியிட்டு வருகின்றனர். 1989 ஆம் ஆண்டு சீன அரசு, ஒடுக்குமுறையை செய்தபோது சூ ஃபெங்சுவோ மாணவர் சங்கத் தலைவராக இருந்தார். தற்போது அமெரிக்காவில் வசிப்பவர் அன்றைய சூழ்நிலை குறித்து பேசுகிறார்.


ஜூலை 4 தேதி நடந்த நிகழ்ச்சிக்கான அரசின் பொறுப்பு ஏற்பு என்பதற்கே பெரும் கஷ்டப்படவேண்டி உள்ளது. சம்பவம் குறித்து உங்களது கருத்தைச் சொல்லுங்கள். 

சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் முழு பொறுப்பு. அதை நாம் முதலில் ஏற்பது அவசியம். நேரடியான தொடர்பு என்றால் முன்னாள் சீனத் தலைவர்களான டெங் ஜியாபிங் மற்றும் லீ பெங் ஆகியோரைச் சொல்லலாம்.

ஜனநாயக வழியில் இதற்கான பொறுப்பேற்று அரசு செயல்பட்டு மேற்சொன்ன இரு குடும்பங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். அவர்களின் தலைமுறைகளின் சொத்துக்களும் இதில் அடங்கும்.

பொறுப்பு என்பது நீதியோடு தொடர்புடையது. மேலும் இதன் தடத்தைப் பின்பற்றினால் உண்மையை நாம் சென்று அடையலாம். மக்களை ஏன் அவர்கள் கொன்றார்கள்? எப்படி அந்த முடிவை எடுத்தார்கள் என்ற கேள்விகளை நாம் நேரடியாக சந்திப்போம். சீனாவின் பிரச்னையே இதுதான். கொடூரமான காரியங்களைச் செய்துவிட்டு அதற்கான பொறுப்பு என்று வரும்போது தள்ளி நிற்பது. டெங்,, பெங் ஆகியோருக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உண்டு. இன்று அவர்கள் எங்கிருந்தாலும் செய்த குற்றத்திற்கான பொறுப்பை ஏற்றேதான் ஆகவேண்டும். எங்களது போராட்டம் இதையொட்டியே அமையும்.


சீனாவை விட்டு சென்றபோது நடந்த சம்பவங்களைச் சொல்லுங்கள். 

நான் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அதாவது 1989க்குப் பிறகு. யாங்குவான்பகுதி சிறையில் இருந்தேன். 1995 ஆம் ஆண்டு நான் சீனாவை விட்டு வெளியேறினேன்.

சீனாவை விட்டு வெளியேறும் வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். இதற்காக கடுமையாக போராட வேண்டியிருந்தது. அமெரிக்க பல்கலையில் இயற்பியல் படிப்பதற்கான உதவித்தொகை பெற்றேன். அப்போது பாஸ்போர்ட் என்னிடம் இல்லை. இறுதியாக கடுமையாகப்போராடி பாஸ்போர்ட் பெற்று நாட்டை விட்டு வெளியேறினேன்.

1989 ஆம் ஆண்டு உங்களுடன் சேர்ந்த போராடியவர்களும் இன்று சீனாவில் இருக்கிறார்கள். போராட்ட அனுபவங்களைப் பகிருங்களேன். 


சீனா மனித உரிமை அமைப்பு என்பதில் துணை நிறுவனராக இருந்தேன். நாங்கள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவது தொடங்கி தியான்மென் சதுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் அக்கறை கொண்டு உதவிகள் செய்து வந்தோம். எங்களால் செய்ய முடிந்த அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்துள்ளோம். இன்று சீனாவிலுள்ள அதிகாரிகள் முதற்கொண்டு மக்கள் வரை தியான்மென் சதுக்க படுகொலைகள் பற்றி பேச மறுக்கின்றனர். இதில் நிறையப் பேர் தங்கள் வாழ்வை,சுதந்திரத்தை இழந்துள்ளனர். பேராசிரியர்  சூ ஜாங்க்ரன், ஜியாங் யான்யாங் ஆகியோருக்கு நாங்கள் உதவி வருகிறோம். லியு ஜியான்பின், போராட்டத்திற்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் முப்பது ஆண்டுகளுக்குப்பிறகு அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என நம்புகிறது.

நீங்கள் பங்கேற்ற அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்பலர் இன்று இறந்துபோய்விட்டார்கள். உங்களுக்கு நாடு திரும்பும் எண்ணம் உண்டா?

சீன அரசும் அதை எதிர்பார்க்கிறது என நினைக்கிறேன். நான் சீனாவில் மட்டுமல்ல எங்கிருந்தாலும் எனக்குப் பிடித்த வேலைகளை மனித உரிமைகளுக்கானதை செய்வேன். ஆனால் சீனாவில் அது சாத்தியமில்லை. எனவே நாடு திரும்பும் செயலை நான் தாய்நாடு சென்டிமென்டாக பார்க்கவும் இல்லை. நினைக்கவும் இல்லை.


இத்தனை ஆண்டுகளில் நடந்த மாற்றங்களைக் கவனித்திருப்பீர்கள். சீனாவின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

சீனா, திபெத், ஹாங்காங், மக்காவூ, ஜிங்ஜியாங் ஆகிய இடங்களில் செய்யும் செயல்படும் அபாயகரமானவையாக தோன்றுகிறது. சகிப்புத்தன்மையற்ற சர்வாதிகாரத்தை இங்கு சீனா செயல்படுத்தி வருகிறது.

1989 ஆம் ஆண்டு சீனா டாங்கிகளை வைத்து சொந்த நாட்டு மக்களை வேட்டையாடியது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அந்த டாங்கிகளை விற்றன என்பது வேதனையான விஷயம்.


நன்றி: குளோபல் வாய்சஸ் ஹாங்காங் ப்ரீ பிரஸ் - கிரிஸ் செங்



பிரபலமான இடுகைகள்