ஹிட்லரைப் பற்றி எழுதி உலகை எச்சரித்த முதல் பத்திரிகையாளர்!




American writer, journalist, and feminist Dorothy Thompson in London in 1941


டோரத்தி தாம்சன்

டோரத்திக்கு நிறைய எதிரிகள் உண்டு. ஆனால் அவரே ஹிட்லருக்கும் முக்கியமான எதிரியாக மாறும் சூழலும் வந்தது. ரேடியோ மற்றும் நாளிதழ் வழியாக அமெரிக்கர்களுக்கு ஹிட்லரின் பாசிச வேகத்தை உணர்த்திய பத்திரிகையாளர் இவரே.

1893  ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று பிறந்தவர். இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர். குடும்பமே தீவிரமான மதாபிமானிகள். தாம்சனுக்கு ஏழுவயது இருக்கும்போது, இவரின் தாய் இறந்துபோனார். மூன்று குழந்தைகளை பார்த்துக்கொள்ள அவரது தந்தை இரண்டாவது மணத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் வரும் பெண் எப்படி மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்க முடியும்? பிரச்னை தலைதூக்க தாம்சன் தன் அத்தைகளின் வீடுகளில் வளர்ந்தார்.

குடும்ப துக்கம் தொண்டையை அடைக்கவில்லை. படிப்பில் அத்தனை வேகத்தையும் காட்டி 1914 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். பின் பெண்களுக்கான உரிமைகளுக்காக சில ஆண்டுகள் போராடினார். போராட்டம், உரிமை, பெண்களைக் குறித்த அக்கறை எல்லாம் சரிதான். ஆனால் சோறு முக்கியம்தானே? நியூயார்க், சின்சினாட்டி ஆகிய இடங்களில் பணியாற்றினாலும் காசு கிடைக்கவில்லை. வாழ்வதே போராட்டமாக மாறியது. தன் தம்பி தங்கைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு வேறு. விளம்பர நிறுவனங்களிலும் கண்துஞ்சாது கடமை செய்தார்.


பத்திரிகையாளராக கட்டுரைகள் எழுதவேண்டும் என்ற கனவு தாம்சனுக்கு இருந்தது. எனவே காசு சேர்த்து ஐரோப்பாவுக்கு சென்று கட்டுரைகள் எழுத முடிவு செய்தார். லண்டனுக்கு 1920 ஆம் ஆண்டு கிளம்பினார். தன் தோழியான டி போர்ட்டையும் அழைத்துக்கொண்டார். ப்ரீலான்ஸ் செய்தியாளராகத்தான் முதல் பணி தொடங்கியது. இன்டர்நேஷனல் நியூஸ் சர்வீஸ் என்ற செய்தி நிறுவனத்தில் இணைந்தார்.

டெரன்ஸ் மெக்ஸ்வைனி என்ற தலைவரை பேட்டி கண்டார். அவர், சின் ஃபெய்ன் எனும் இயக்கத்தை நடத்தி வந்தார். பேட்டி கண்டபோது சிறையில் பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தார். அயர்லாந்தில் அவரைச் சந்தித்து பேசியது அனைவராலும் பாராட்டப்பட்ட கட்டுரையானது.  பின்னர் ஹங்கேரியின் முன்னாள்  மன்னரான முதலாம் கார்ல் என்பவரைச் சந்தித்து பேசினார்.  செஞ்சிலுவை இயக்க நர்சாக மாறி இந்த செய்தியை செய்தார்.

பின்னர் வியன்னாவில் பிலடெல்பியா ப ப்ளிக் லெட்ஜர் பத்திரிகையில் இணைந்தார். இதில்தான் ஐரோப்பிய அரசியலை நன்றாக உள்வாங்கினார். ஜெர்மன் மொழியை நன்றாக கற்றார். 1923 ஆம் ஆண்டு ஹங்கேரி எழுத்தாளர் ஜோச்ப் பார்ட்டை மணந்தார். அப்போது நியூயார்க் ஈவ்னிங் போஸ்ட் பத்திரிக்கைக்குமான செய்தியை அளித்து வந்தார்.

கணவர் மன்மதடு 2 நாகார்ஜூனா போல பல பெண்களை ஈர்த்து கைமா செய்ததால், திருமண வாழ்க்கை அவருடன் முடிவுக்கு வந்தது. அச்சமயத்தில் எழுத்தாளர் சின்கிளேர் லீவிஸ் என்பவரைச் சந்தித்தார். வேலையைக் கைவிட்டு வெர்மாண்டில் தன்னுடைய கணவருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். சுதந்திர பத்திரிகையாளராக அப்போதும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி வந்தார்.

ஜெர்மனியில் ஹிட்லரின் வளர்ச்சியைக் கவனித்து வந்தவர், 1923 ஆம் ஆண்டு முதலாக ஹிட்லரின் பேட்டிக்கு முயற்சித்தார். ஆனால் இதற்கான அனுமதி சிக்கலாகியிருந்த கட்டம் அது. அப்போது அரசு ஹிட்லரை சிறையில் இட்டது.  1931 ஆம் ஆண்டு பேட்டிக்கான அனுமதி கிடைத்த து.

மூன்று கேள்விகள்தான் கேட்கவேண்டும். அக்கேள்விகளை அரசுக்கு முன்னதாகவே தந்துவிடவேண்டும். என்பதுபோன்ற மூர்க்கத்தனமாக விதிகளைப் போட்டால் எப்படி என அவர் கலங்கவே இல்லை. 

நான் அப்போது ஹிட்லரை சந்திக்க இருந்த விடுதியில் இருந்தேன். நான் அவரை அடுத்த சர்வாதிகாரியாகவே பார்த்தேன் என எழுதியிருக்கிறார் தாம்சன். கேலிச்சித்திரம் போன்ற அவரது உடல் எனக்கு நம்பிக்கை தரவில்லை. நம்பிக்கை இழந்த இல்லாத சிறுமனிதர் என்று நினைத்த தோடு எழுதியும் விட்டார். காஸ்மோபாலிட்டன் பத்திரிகையில் வெளியாக மக்கள் இதனை தேடித்தேடி படித்தனர். தாம்சனின் கணிப்பை விட வேகமாக இரண்டே ஆண்டுகளில் ஜெர்மனி சான்சிலர் ஆகிவிட்டார் ஹிட்லர். 1932 ஆம் ஆண்டு ஐ சா தி ஹிட்லர் என்ற தாம்சனின் நூல் வெளியானது. அடுத்த ஆண்டு தாம்சன் ஜெர்மனியை விட்டு வெளியேற்றப்பட்டார். 

நான் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் எளிமையானது. அவர் சாதாரண மனிதர் என்று நான் நினைத்தேன். அவர் கடவுளால் அனுப்ப ப்பட்ட தேவதூதர் என்று என்று கூறுவது யூதர்களின் சிந்தனை. நான் ஜெர்மனியராக இருந்தால் சிறையில் இருந்திருப்பேன். அமெரிக்கன் என்பதால் பாரிசுக்கு அனுப்ப ப்பட்டேன் என கூறியுள்ளார் தாம்சன். 


தன் வாழ்வு முழுமைக்கும் நாஸிக்களை எதிர்ப்பதும், ஹிட்லரின் கொடுமைகளை எழுதுவதுமாகவே இருந்தார். 170 பத்திரிகைகளின் வழியாக 8 மில்லியன் வாசகர்களை அடைந்தார் தாம்சன். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகி வந்தன. 1928-42 காலகட்டம் தாம்சனுக்கானது. ஹிட்லரை வைத்து அவர் அமெரிக்காவை கைப்பற்றினால் என்னாகும் என்பதை எழுதினார். 

நன்றி: மென்டல் ஃபிளாஸ்


பிரபலமான இடுகைகள்