பனிமனிதன் நிஜமா?
பனிமனிதன் செய்தி நிஜமா?
செய்தி: யெட்டி எனும் பனிமனிதன் பற்றி இந்திய ராணுவம் கூறிய செய்தி ஆய்வாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான செய்தியை ஆய்வாளர்களே நம்ப முடியாமல் திணறினர். மகாலு ராணுவ கூடாரம் அருகே யெட்டி பனிமனிதனின் பாதச்சுவடுகளைப் பார்த்தோம் என ட்விட் சேதி சொன்னது. மனிதர்களை விட நான்கு மடங்கு பெரிதான பனிமனிதனை இந்திய ராணுவம் கண்டுபிடித்தது என்பதை உலகில் பலரும் நம்பவில்லை. இதற்கான ஆதாரங்களை தொல்லியல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக அரசு செய்தி கூறுகிறது.
பனிமனிதன் குறித்த ஆராய்ச்சி செய்துள்ள எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் டேனியல் டெய்லர், "35 அங்குல பாதச்சுவடு என்பது டைனோசர்களுக்கு ஒப்பானது. நான் நேபாளத்திற்கு பனிமனிதர் பற்றி ஆராய்ச்சி செய்யபோனபோது, அங்குள்ளவர் காலடித்தடம் பற்றி மரக்கரடி அல்லது இமாலயத்தின் கருங்கரடி குறித்து தகவல் பகிர்ந்தார். அதற்கான காரணங்களையும் கூறியபோது என்னால் அதனை மறுக்க முடியவில்லை"" என்று கூறுகிறார். அரசு அமைப்பு சரியான ஆதாரங்கள், ஆராய்ச்சிகளின்றி கற்பனைச் செய்திகளை வெளியிடுவது சரியல்ல.
தகவல் - டைம்ஸ்
நன்றி - தினமலர் பட்டம்