ஒரே நாடு ஒரே தேர்தல் பின்னணி என்ன?




Image result for one nation one election

2017 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் பிரனாப் முகர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைப் பற்றி பேசினார். அன்று சொன்னதை இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்ததும் மோடி அமலுக்கு கொண்டுவர முயற்சிகளைத் தொடங்கிவிட்டார்.


இதன் பாசிட்டிவ் பக்கம் காசுதான். ஒரே நேரத்தில் தேர்தல் என்பதால் நேரமும் பணமும் குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம், மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள் கொள்கைகள் குறித்து உரையாடவும் நிறைய நேரம் கிடைக்கும்.


இந்தியாவின் முதல் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. 1967 ஆம் ஆண்டு வரை தொடர்ந்த நடைமுறை, பின்னர் கைவிடப்பட்டது. காரணம், மக்களவை கவிழ்ந்ததால்தான்.

இந்திய அரசமைப்புச்சட்டம் 83(2), மக்களவையை தேர்தலுக்காக முன்பே கலைப்பதற்கான குறிப்புகளைக் கொண்டுள்ளது. இதேபோல சட்டம் 172 மாநில அரசுகளுக்கானது.  இதிலுள்ள சட்டச்சிக்கல், தேர்தலுக்காக மத்திய மாநில அரசுகள் தம் ஆட்சிக்காலம் முடிவதற்குள் சட்டசபையை, மக்கள் அவையை கலைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது, அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது.

ஏறத்தாழ ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதன் பின்னணி, ஒரே கட்சி ஆட்சிமுறை இருக்கவேண்டும் என்பதுதான். இதற்கு முன்பு 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் இதுபோன்று மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்று ஒரே கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.


ஸ்வீடன், பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இதுபோன்று ஒரே நேரத்தில் தேர்தல் நடந்து வருகிறது. ஸ்வீடனில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய, மாநில, முனிசிபல் கௌன்சில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. பெல்ஜியத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. இதேநேரத்தில் ஐரோப்பிய யூனியன் தேர்தலும் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.

தற்போதையை தேசிய ஜனநாயக முன்னணி, இதுகுறித்த கலந்துரையாடலையோ, விவாதத்தையோ விரும்பவில்லை. நேரடியாக தான் நினைப்பதை சட்டமாக்க துடிக்கிறது. இது ஒருங்கிணைந்த மாநிலங்கள் உள்ள இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசில் குவித்து வைக்கப்படுவது மாநில அரசுகளை செயலிழக்கச் செய்யும்.

நன்றி: டைம்ஸ் - மனுராஜ் சண்முகசுந்தரம்




பிரபலமான இடுகைகள்