ஹாங்காங்கில் நடப்பது என்ன?







இரண்டு மில்லியன் மக்களின் போராட்டம்

1997 ஆம் ஆண்டு வசம் வந்துவிட்ட ஹாங்காங் நாட்டை சீனா ஒரே நாடு இரண்டு சட்டம் என்று பராமரித்து வந்தது. அதாவது , நாம் ஜம்மு காஷ்மீரை 370 என்ற சட்டம் மூலம் தனி அந்தஸ்து அளித்து பராமரித்து வருகிறோமோ அதேபோல. ஆனால் ஜின்பிங் தன் பதவியை உறுதிப்படுத்தியவுடன் ஹாங்காங்கை சீனாவுடன் இணைப்பதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். அதில் ஒன்றுதான், ஹாங்காங் நாட்டிற்கான சீன ஆதரவாளர் ஒருவரைத் தலைவராக்கியது.

அவர் என்ன செய்வார்? அதேதான். சீனாவின் ஆணைகளுக்கு தலையசைத்தவர், சீனாவின் புதியசட்டத்திற்கும் கையொப்பமிட்டு சர்ச்சைக்குள்ளானார். இன்று பெரும் போராட்டத்திற்கும் அது காரணமாகியுள்ளது. ஹாங்காங்கில் பிடிபடும் குற்றவாளிகளுக்கு சீனாவில் தண்டனை என்பதுதான் சட்டத்தின் எளிமை வடிவம்.

சீனாவின் காலனி நாடு ஹாங்காங் என்பதை உறுதிபடுத்தும் சட்டம் என்பதற்காக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் வெல்லும், உலகை மாற்றும் என்று கூறுவது நம் நோக்கமல்ல. ஆனால் இது ஒரு முக்கியமான போராட்டம் என்று கூறவருகிறோம்.

போனி லியங் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றுதிரண்டு இப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக தற்போது அச்சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிர்வாகத்தலைவர் கேரி லாம், கண்ணீர் புகை குண்டு வீசி மக்கள் கூட்டத்தை கலைத்துவிடத்தான் முயற்சித்தார். மக்களின் கோபம் அக்குண்டுகளையும் செயலற்றதாக்கிவிட, வேறுவழியின்றி அவரது அரசு பணிந்துள்ளது. கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியவர் பின் கண்ணீரையும் ஆயுதமாக்க முனைந்தார். ஆனால் எதுவும் எடுபடவில்லை.


ஆறு நாட்கள் நடந்த போராட்டம் கேரி லாமை தடுமாற வைத்துள்ளது. எனவே தற்காலிகமாக சட்டத்தை அமல்படுத்த தடை விதித்துள்ளார். இப்போராட்டத்தை 2014 ஆம் ஆண்டு நடந்த குடை போராட்டத்தோடு ஒப்பிடுகின்றனர். இப்போது சட்டத்தோடு கேரி லாமை தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கோஷமிட்டு வருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு போராட்டத்திலிருந்து நாங்கள் அரசையும் போலீசையும் நம்பக்கூடாது என பாடம் கற்றுள்ளோம். இது தன்னைத்தானே நம்பி வந்த மக்களின் போராட்டம் என்கிறார் மனித உரிமையாளரான லியங்.

நன்றி: அட்லாண்டிக்





பிரபலமான இடுகைகள்