பெண்களுக்குத் தேவை வாய்ப்புகள்தான் கருணை அல்ல!

Related image


நேர்காணல்
வாய்ப்பு கொடுத்தால் பெண்களாலும் சாதிக்கமுடியும்!
அலெசாண்ட்ரா செலெட்டி (ALESSANDRA CELLETTI)

இத்தாலியைச் சேர்ந்த கணிதவியலாளர் அலெசாண்ட்ரா செலெட்டி, ரோம் டோர் வர்கட்டா பல்கலையில் கணிதவியலாளராக பணியாற்றி வருகிறார். அலெசாண்ட்ரா, டைனமிக்கல் சிஸ்டம்ஸ், காம் தியரி, செலஸ்டிகல் மெக்கானிக்ஸ் (வளிமண்டல இயக்கவியல்) ஆகி பங்களிப்புக்காக பாராட்டப்பெற்றவர். ஆராய்ச்சிக் கட்டுரைகளோடு பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

கணிதத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளீர்கள்.உங்களது பள்ளிப்பருவத்திலிருந்தே கணிதம் மீது ஈர்ப்புடையவராக இருந்தீர்களா?

எனக்கு இப்போது அந்த காலத்தை நினைவுகூர்ந்து பார்த்தால், ஐந்து வயதில் உறவினர் ஒருவர் என்னைக் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. உனக்கு என்னவாக ஆசை என்று கேட்டார். நான் கணிதம் படிக்கப்போகிறேன் என்று கூறியது மங்கலாக நினைவு இருக்கிறது. செலஸ்டிகல் மெக்கானிக்ஸ்என்று அன்று சொல்லியிருக்கமுடியாது. கணிதம் இல்லாமல் இளம் வயதில் அறிவியல் குறும்படங்களை எடுக்கும் ஆசை தோன்றியது.

நீங்கள் அறிவியல் பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் செயல்படுகிறீர்கள் என்று கேள்விப்பட்டோம்.

ஆம். செலஸ்டிகல் மெக்கானிக்ஸ் அண்ட் டைனமிக்கல் அஸ்ட்ரானமி ( “CELESTIAL MECHANICS AND DYNAMICAL ASTRONOMY”)என்ற பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். வளிமண்டல இயக்கவியல் குறித்து பல்வேறு செய்திகளைப் படித்து, புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிய தொகுத்து எழுதி வருகிறேன். இந்த பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பெண் ஆராய்ச்சியாளர்களை பங்களிக்கச் செய்வதற்கான முயற்சியைத் தொடங்கிவிட்டேன்.

பல்வேறு அறிவியல் கமிட்டிகளில் நீங்கள் உறுப்பினராக உள்ளீர்கள். அதைச் சார்ந்த அனுபவங்களைக் கூறுங்களேன்.
பொதுவாக பெண் ஆராய்ச்சியாளர்கள் தகுதியானவர்கள் இல்லை என்ற எண்ணம் ஆராய்ச்சி அமைப்பினருக்கு உள்ளது. இதனால் பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும்பாலான கமிட்டி, மாநாடு, ஆசிரியர்குழு கூட்டங்களில் அழைப்பிருக்காது. இதனால் நான் பங்கேற்கும் கணித மாநாடுகளில் கணித ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் பங்களிப்பு, அனுபவம் ஆகியவற்றை பட்டியலிட்டு மேம்படுத்தி வருகிறோம். இதன் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கீகாரமும், புகழும் கிடைக்கும்.

ஏராளமான அறிவியல் நூல்களை நீங்கள் எழுதியுள்ளீர்கள். கணித ஆராய்ச்சி போக கிடைக்கும் நேரத்தை நூல்கள் எழுத பயன்படுத்துகிறீர்களா?

நல்ல கேள்வி. பியானோ, கிடார் வாசிப்பது முதன்மை பொழுதுபோக்கு. அதற்கடுத்து, அறிவியல் சார்ந்த குறும்படங்களை உருவாக்குவது உள்ளது. இத்தாலிய விண்வெளி மையத்திற்காக மூன்று குறும்படங்களையும் இப்படித்தான் உருவாக்கி, அதற்கு டப்பிங்கும் பேசியுள்ளேன்.

தமிழில்: ச.அன்பரசு

நன்றி:  https://www.europeanwomeninmaths.org/alessandra-celletti/

வெளியீட்டு அனுசரணை: தினமலர் பட்டம்