கொசு கடிப்பதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?
சிலரை மட்டும் கொசு கடிக்க காரணம் என்ன?
நண்பர்களோடு வெளியே செல்லும்போது சில இடங்களில் உங்களை மட்டும் கொசு கடிப்பதாக உணர்வீர்கள். சிலர் அங்கு கொசு இருப்பதையே உணராதவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் பல. அதில் முக்கியமானது நாம் வெளிவிடும் கரியமில வாயு. இதன் அடர்த்தியைப் பொறுத்தே கொசுக்கள் நம்மைக் குறிவைத்து தாக்குகின்றன.
அடுத்து, பாக்டீரியாக்கள்(eptotrichia, Delftia, Actinobacteria Gp3 and Staphylococcus) தோல்வழியாக வெளியேறும் வியர்வையில் செய்யும் பல்வேறு வேதிவினைகள். இவை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் மற்றும் உடலின் தோல் வெப்பம் ஆகியவை கொசுக்களை சிலரை நோக்கி அதிகம் ஈர்க்கின்றன. கருப்பு நிறத்தை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன. நிஜமோ பொய்யோ கொசு கடித்தால் எந்த ஆராய்ச்சியும் வேண்டாம். பட்டென ஒரே போடு. சோலி முடிந்தது.
நன்றி: லிவ் சயின்ஸ்